உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ராக்பெல்லர் உருவாக காரணமாக அமைந்த நிகழ்ச்சி இதுதான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சுவாமிஜி.சிகாகோவில் சுவாமிஜி சந்தித்த மற்றொரு முக்கிய மான நபர், பின்னாளில் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ராக்ஃபெல்லர். அன்று அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. அவர் பல நண்பர்களிடமிருந்து சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார். ஆனாலும் என்னவோ அவரைச் சந்திக்கத் தயங்கினார். பல டங்களில் தங்கியவாறு சொற்பொழிவுகள் செய்து கொண்டிருந்த சுவாமிஜி ஒரு முறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். அப்போது சுவாமிஜியைச் சந்திக்க வேண்டும் என்ற உள்ளுந்தல் ஒரு நாள் திடீரென்று ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது. அந்த வேகத்தில் அவர் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டிற்குச்சென்றார். கதவைத்திறந்த வேலையாளை பிடித்துத் தள்ளிவிட்டு, முன் அனுமதிகூடப்பெறாமல் சுவாமியின் அறையில் நுழைந்தார்.
    சுவாமிஜி அப்போது அமர்ந்து ஏதோஎழுதிக் கொண்டிருந்தார். இவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் சுவாமிஜி முகத்தைத்தூக்கி, வந்தது யாரென்று பார்க்கவில்லை. சிறிது நேரம் கழிந்தது. கால்வே சென்ற நாள் நடைபெற்றதுபோலவே அன்றும் நடைபெற்றது. தலை கவிழ்ந்திருந்த நிலையிலேயே திடீரென்று சுவாமிஜி, ராக்ஃபெல்லரின் வாழ்க்கையைப்பற்றி, அவர் மட்டுமே அறிந்திருந்த அவரது கடந்த காலங்களைப் பற்றி கூறத்தொடங்கினார். இறுதியாக, நீங்கள் சேர்த்துள்ள பணம் உண்மையில் உங்களுக்கு உரியது அல்ல. உலகிற்கு நன்மை செய்வதற்காக கடவுள் உங்களிடம் அந்தப் பணத்தைத் தந்து வைத்திருக்கிறார், அவ்வளவு தான். எனவே உங்கள் பணத்தால் உலகிற்கு நன்மை செய்யுங்கள் என்று கூறினார்.
    சுவாமிஜி கூறியவை ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் சொல்வதா என்று அவருக்குத் தோன்றியது. எனவே வணக்கம் கூட சொல்லாமல் வேகமாக அறையை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் சுவாமிஜியின் ஆளுமை எல்லைக்குள் வந்த ஒருவர் அவரால் ஆட்கொள்ளப்படாமல் ருப்பாரா? ராக்ஃபெல்லரிடமும் சுவாமிஜியின் ஆற்றல் வேலை செய்தது.
    ஒரு வாரம் கழிந்திருக்கும். ஒரு பொதுத்தொண்டு நிறுவனத்திற்குப்பெரிய தொகையை நன்கொடை அளிக்க முடிவு செய்தார் ராக்ஃபெல்லர். அதற்கான திட்டங்களை விரிவாக எழுதி, அதை எடுத்துக்கொண்டு முன்பு போல் அதே வேகத்தில் மீண்டும் சுவாமிஜியிடம் வந்தார். அது போலவே அனுமதியின்றி அவரது அறைக்குள் சென்றார் . அன்றும் சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தைஅவர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள். நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.
    சுவாமிஜி அசையவும் இல்லை. தலை நிமிர்ந்து ராக்.பெல்லரைப் பார்க்கவும் இல்லை. அமைதியாக அனைத்தையும் படித்தார். படித்து முடித்ததும், நன்றி சொல்ல வேண்டியது நான் அல்ல, நீங்கள் தான் என்றார். ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை அது!
    கடவுள் வழிகாட்டுகிறார்.
    -
    சர்வமத மகாசபை நிறைவுற்ற பிறகு சுமார் 2 மாதங்கள் சுவாமிஜி சிகாகோவில் தான் தங்கினார். ந்த நாட்களில் அவர் இந்து மதம், அத்வைதம், மறுபிறவி, ஜாதி, வர்ணாசிரமம், இந்து சமுதாய பழக்க வழக்கங்கள், சுயநலமின்மை பற்றிய இந்துக் கருத்து என்று பல தலைப்புகளில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அப்போது வீடுகள், ஹோட்டல்கள் என்று பல இடங்களில் அவர் தங்க நேர்ந்தது. ஒவ்வொரு சூழ்நிலையும் இறைவனிடமிருந்தே வருவதாகக்கொண்டு, அதற்கு ஏற்ப அமைதியாக என்னை அமைத்து வந்துள்ளேன். அமெரிக்காவில் முதலில் நான் சற்று குழப்பத்தில் தான் இருந்தேன். இறைவனால் வழிகாட்டப்படுபவனாக இருப்பதே எனது வழக்கம். அந்த முறையை விட்டுவிட நேருமோ, எனக்கு நானே வழி தேடிக்கொள்ள வேண்டியிருக்குமோ என்று பயந்தேன். எவ்வளவு மோசமான நன்றிகெட்ட செயல்! இமயத்தின் பனிமூடிய உச்சிகளிலும் , எரியும் வெப்பம் மிகுந்த இந்தியச் சமவெளிகளிலும் என்னை வழிகாட்டி அழைத்துச்சென்ற அதே இறைவன் இங்கும் எனக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் சித்தமாக உள்ளதை நான் தெளிவாக காண்கிறேன். அந்தப் பரந்தாமனின் பெருமை ஓங்குக! நான் அமைதியாக எனது பழைய முறையைக் கடைப்பிடிக்கிறேன். யாரோ தங்குமிடமும் உணவும் தந்து உதவுகிறார். யாரோ வந்து இறைவனைப் பற்றிப்பேசுமாறு கேட்கிறார். இறைவனே அவர்களை அனுப்பி வைப்பதை நான் அறிகிறேன். என் கடமை கீழ்படிவதே. தினசரி வாழ்வில் எனக்குத்தேவையானவை கிடைக்குமாறு அவரே உதவுகிறார். ஆக, அவரது விருப்பப்படியே அனைத்தும் நிகழும், என்று எழுதுகிறார் சுவாமிஜி.
    தொடர்ந்த சொற்பொழிவுகள், வகுப்புகள், பேட்டிகள், பயணங்கள் என்று சுவாமிஜியின் வாழ்க்கை எவ்வளவு தூரம் பரபரப்பாக அமைந்ததோ, அவ்வளவு தூரம் அவரது மனம் உயர் தளங்களில் திளைத்தது. அவர் எங்கு தங்கினாலும், எந்த வேலைகளில்ஈடுபட்டிருந்தாலும் இறைவுணர்விலேயே திளைத்தார்.

Комментарии • 6

  • @m.s.ramasubramanianmadurai7752
    @m.s.ramasubramanianmadurai7752 3 года назад +3

    Ram ram

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 3 года назад +1

    🙏🙏💐💐👌👌

  • @babyravi7956
    @babyravi7956 3 года назад +2

    ஐயா உண்மை,துணிச்சல் பற்றி சுவாமியின் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கின்றது

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад +1

    GREAT

  • @இந்தியபாரததேசம்

    டெஸ்லாவும் சுவாமிஜியும் வீடியோ வேண்டும்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад

    உலகின் முன்னணி பணக்காரர்
    பட்டியலில் எங்கள் இசைஞானியும்
    இருந்திருக்க வேண்டும் பொக்கிஷம்
    இவர் இசை மதிப்பு மிக்க பகவத்
    கீதை பைபிள் குரான் போன்ற
    தெய்வீக நூல்களுக்குச் சமம் 🙏🙏🙏
    அவர் பணத்தாசைக் கொள்ளவில்லை
    ஆனால் அவர் இசை விலை 💎
    மதிக்க முடியாத பொக்கிஷம்🙏