ஊமச்சிக்குளம் நாராயண கோனார் கிடைமாடுகள் | ஜல்லிக்கட்டு கன்று ரூ.10 ஆயிரம் | கீதாரி பயணம் 12

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024
  • #jallikattu_images #jallikattukalai #jallikattuperavai #jallikattu2023
    🔵 கன்றுகள் வாங்க தொலைபேசி எண்
    🔵 கிடைமாடு கீதாரி திரு.பூமாரி : 9751918747
    🔵 ஜல்லிக்கட்டு கன்று ரூ.10000 முதல் ஆரம்பம்
    🔵 பாரம்பரியமான ஊமச்சிக்குளம் நாராயண கோனார் கிடை மாட்டுக் கன்றுகள் கிடைக்கும்.
    ___________________________________________________
    🔵 பயண அனுபவம் 🔵
    நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடை மாட்டு கீதாரிகள் குறித்த பயணத்திற்கு ஆயத்தமானது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மார்கழி பனியுடன் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.
    தம்பி ராஜேஷ் கண்ணாவுடன் வழக்கம் போல் அதிகாலை 5:30 மணிக்கு ஆரம்பமானது. இருமல் அதிகமாக இருந்ததால், எப்படி பேட்டி எடுக்கப் போகின்றேன் என்ற பயத்துடன் பயணித்தோம்.
    தம்பியும், நானும் ஓரிடத்தில் இருந்து விருதுநகருக்கு புறப்பட்டோம். இடையில் ஒரு நிறுத்தம், குளிருக்கு சூடான தேனீர். தம்பி தேனீரை தவிர்த்தார். காரணம் நாட்டு மாட்டு மோர் குடித்தே ஆக வேண்டும் என்று. ஆனால் அதைத் தாண்டி எண்ணெய்யில் குளித்த உளுந்த வடை மற்றும் காலையிலேயே மிளகாய் பச்சியை தம்பி அசைபோட்டார். எனன் இரண்டு பேபரை எண்ணெய் வடியவிட்டார்.
    பாதி தூரம் செல்லும் வரை குளிர் தெரியவில்லை. கள்ளிக்குடிக்கு 10 கி.மீ முன்பாகவே குளிர் காதுகளை துளைத்துவிட்டது. ஒரு வழியாக கிடை மாடு போட்டிருந்த இடத்திற்குச் சென்று விட்டோம்.
    மணி 7 இருக்கும். ஆனாலும் பனி 5 மணி போல் இருந்தது. கிட்டதட்ட 1000 கிடைமாடுகள் அங்கு இருந்தன. பார்ப்பதற்கு அவவ்ளவு அழகாக இருந்தது. அந்த கூட்டத்தில் ஒரு காளை செம கொம்புடன் குளிர் காலத்தில் குதூகலமாக இருந்தான். Thumnail ல் அவனைத்தான் வைத்துள்ளேன்.
    நாம் சென்ற சிரிது நேரத்தில், கிடைமாட்டு கீதாரி திரு.பூமாரி அவர்கள் வந்துவிட்டார். ஊமச்சிக்குளம் நாராயண கோனார் மாடுகளைதான் தற்போது இவர் மேற்பார்வையில் மேய்த்து வரப்படுகிறது.
    400 மாடுகளுக்கு மேல் இருக்கும். ஊமச்சிக்குளம் நாராயண கோனார் குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினால் இதன் சிறப்பு கூடுதலாக இருக்கும் என்ற காரணத்தால், அதை தவிர்த்து பூமாரி அவர்களின் அனுபவத்தை மட்டுமே பதிவு செய்திருக்கின்றேன்.
    இறுதியாக பேட்டியை முடித்த உடன், தம்பி ராேஜஷ் எதிர்பார்த்த மோர் கிடைகக்வில்லை. காரணம் பொங்கிய சோற்றுடன் அனைத்தையும் கலந்துவிட்டார் சமையல்காரர்.
    ஆதலால், சோற்றுடன் கலந்த மோர் சாதம் எங்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. முல்லைப் பூவாய் சாதத்துடன் நாட்டு மாட்டு மோர் கலந்தது அத்தனை ருசி. சளி, இருமல் என எல்லாவற்றையும் மறந்து மருந்தாய் அதை எடுத்துக் கொண்டேன்.
    கூடுதலாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சில காய்கறிகள் கலந்த புளிக் கூட்டு, சோயா பொறியல் சுவைக்கு துணையாக இருந்தது.
    அதன் பிறகு சிறிது நேரம் காத்திருந்தோம். கிடையிலிருந்து கன்றுகள் பிரிக்கப்பட்டு, மாடுகள் மட்டும் மேய்ச்சலுக்கு செல்ல. அதற்கு இடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிடை மாடுகளில் இருக்கும் நீளமான கொம்புகளுக்கு வண்ணம் ( பெயின்ட்) பூசும் நிகழ்வு நடைபெற்றது.
    மிகப்பெரிய விசயம்தான் அது, பலரும் சேர்ந்து ஒரு மாட்டை பிடிக்க, பிறகு அதை தரையில் கிடத்த, வெறும் கையில் வணத்தை ஊற்றி கொம்பில் தடவ என இந்த காட்சிகள் இன்னும் என் நினைவில். வண்ணம் பூசப்பட்டு, மாடுகள் கன்றுகளை விட்டு பிரிக்கப்பட்டது.
    அப்படி பிரிந்து செல்லும்போது, சில மாடுகள் தங்களது கன்றுகளை விட்டு பிரிய மனமில்லாமல் கத்திக் கொண்டே, ஓடி ஓடி வந்து பார்த்ததை எப்படி வார்த்தையில் கூறுவது. மிருகங்ளுக்கு இருக்கும் உணர்வு நிச்சயமாக மனிதர்களை தாண்டியது என்றே கூறுவேன்.
    முதன் முதலாக கன்று ஈன்ற தாய் பசுவாக இருக்குமோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஏனெனில் சில பசுக்கள் இது வழக்கமான ஒன்றுதான் என்றபடி, தனது கன்றினை விட்டுச் சென்றது. அல்லது குட்டி பிறந்த ஓரிரு நாளாக கூட இருக்கலாம். எதுவாக இருந்தால் என்ன ? தாய்மையின் தனித்துவம் தனலாய் கொதித்தது.
    இறுதியாக கன்றுகளை கேமராக்குள் படம் பிடித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த பயணத்தில் உங்களை இதுபோல் சந்திக்கின்றேன். நன்றிகள்.
    ___________________________________________________
    🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க: Hello Madurai M.Ramesh 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    🔵 App Link: play.google.co...
    🔵Online Web Tv : hellomaduraitv...
    🔵 Facebook : / hellomaduraipage
    🔵 Facebook : / rameshhellomadurai
    🔵 Hello Madurai News website : hellomadurai.in/
    🔵 Agri News website : tamilvivasayam...
    🔵 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    🔵 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

Комментарии • 36

  • @ramsamy7744
    @ramsamy7744 Год назад +11

    சமூகத்தில் உயர்ந்த மக்கள் கீதாரிகள்மட்டும்தான்

  • @apimannan7354
    @apimannan7354 Год назад +16

    கிடை மாடு கிடையாது ஆடு கோனார்களின் குலத்தொழில் ஆடு மாடு எங்கள் அடையாளம்

  • @seeivasangsupersong9092
    @seeivasangsupersong9092 Год назад +3

    கோனார் வாழ்த்துக்கள்

  • @villagelifestyle5161
    @villagelifestyle5161 Год назад +4

    இடையர் ❤❤❤

  • @p.muthusamygokulam3260
    @p.muthusamygokulam3260 Год назад +5

    என் பாட்டன் வாங்கி கொடுத்த வாரிசு மாடுகள் என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது

    • @hellomadurai
      @hellomadurai  Год назад

      மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Год назад +1

    வாழ்க மாடு இனப்பெருக்கம் வளர்க மாடு தொழில் வாழ்க

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 Год назад +2

    இந்த கிடை மாடுகள் வடமஞ்சுவிரட்டு க்கு சிறப்பாக இருக்கும்

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 Год назад +2

    சிவகங்கை மாவட்டம் கிளாதரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது

  • @malaimalai1070
    @malaimalai1070 Год назад +4

    வாழ்த்துக்கள்

  • @Maalaimathi
    @Maalaimathi Год назад +4

    அருமையான பதிவு அண்ணே... மேலும் பல கிடைகளுக்கு சென்று நாட்டினங்களை உயிர்பிக்கவும்... ரமேஷ் மற்றும் ராஜேஷ்கண்ணன் அவர்களுக்கு நன்றி.💥❤️

    • @hellomadurai
      @hellomadurai  Год назад

      மகிழ்ச்சி தம்பி...

  • @pmjpmj6012
    @pmjpmj6012 Год назад +2

    Excellent

  • @Babu-bo5bi
    @Babu-bo5bi Год назад +4

    அண்ணே ஐய்யாவோட அண்ணன் தம்பிகளயும் தனிதனி நேர்காணல் எடுத்து போடுங்கள்..காலத்தால் அழிக்க முடியாதது நினைவுகள் மட்டுமே..கிடை மாடு வளர்க்குறதுள
    உள்ள கஷ்ட நஷ்டங்களையும் கிடை மாடுகளை பற்றியும் அனைவரும் அறியட்டும்..ஐயா வாழ்க வளமுடன் நன்றி..

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Год назад +2

    மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்

    • @hellomadurai
      @hellomadurai  Год назад

      பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 Год назад +1

    திருச்சி கோசக்குறிச்சி அழகர்சாமி காளை நேர்காணல் வீடியோ போடுங்க சகோதரர் ப்ளீஸ்

  • @thevasaji4391
    @thevasaji4391 9 дней назад

    10000 madukala 😢😮

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 Год назад +2

    கிளாதரி கிடை கன்றுகள் வீடியோ போடுங்க சகோதரர் ப்ளீஸ்

    • @hellomadurai
      @hellomadurai  Год назад +1

      தொடர்பு எண் கிடைத்தால் பதிவு செய்யலாம். உங்களுக்கு தெரிந்தால் 9566531237 என்ற எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புங்கள்...

  • @BharathC-r6x
    @BharathC-r6x 22 дня назад

    கன்று கிடைக்குமா

  • @பெரியண்ணன்-ர9ச

    மாடுதான் எம் சொத்து...

  • @p.muthusamygokulam3260
    @p.muthusamygokulam3260 Год назад +4

    முத்து கோனார் இவர் பிறந்த ஊர் சாமியார் ஆலங்குளம் என்று அழைக்கப்பட்டது .இவர் என் பாட்டன் . இப்போது M.S. புதுக்குடியிருப்பு என்று அழைக்கப்பட்டது

  • @KamalakannanSubbarayan-hf6co
    @KamalakannanSubbarayan-hf6co 11 месяцев назад

    அண்ணா. வளர்ப்புக்கு. பொட்ட. கன்று. குடுப்பங்களா

  • @sakthi_edit_tn364
    @sakthi_edit_tn364 Год назад

    Bro madurai ya

  • @mariselvam8908
    @mariselvam8908 Год назад +1

    7கிடைமாடுவிடியோபோடுங்க

  • @SUKANT1998
    @SUKANT1998 Год назад

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 Год назад +3

    திருச்சி கோசக்குறிச்சி அழகர்சாமி காளை நேர்காணல் வீடியோ போடுங்க சகோதரர் ப்ளீஸ்