வன்னியர் சங்கம் சார்பில், செப்டம்பர் 17, தியாகிகள் தினம், வீரவணக்கம் செலுத்தி அனுசரிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஓசூரில், வன்னியர் சங்கம் சார்பில், செப்டம்பர் 17, தியாகிகள் தினம், வீரவணக்கம் செலுத்தி அனுசரிப்பு.
    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கேட்டு, கடந்த 1987 ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, நடைபெற்ற போராட்டத்தின் பொழுது, 21 பேர் உயிர் தியாகம் செய்தனர். இதை அடுத்து 108 சாதியினருக்கும் 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனி இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
    இந்த போராட்டத்தின் பொழுது, உயிர் நீத்த 21 தியாகிகளை நினைவு கூறும் விதமாக, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி, தியாகிகள் தினமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    அந்த வகையில், ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் அக்னி அருள் தலைமையில், தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
    பேருந்து நிலையம் அருகே, வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தேவ். அருண் ராஜன், ஓசூர் மாநகரச் செயலாளர் குணசேகரன், உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உயிர் நீத்த 21 தியாகிகளின் புகைப்படங்களுக்கு, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    இதைத்தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தி, வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
    இதில், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தி, வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

Комментарии • 1

  • @SivaKumar-x5g
    @SivaKumar-x5g 14 дней назад

    வன்னியராக.மட்டும்இரு