நல்ல பாடலை ஏன் கெடுத்தார் ARரஹ்மான்/ மல்லிப்பூ வச்சு வச்சு- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • மல்லிப் பூ வச்சு வச்சு வாடுது பாடல் விமர்சனம்
    #mallipoo_vachu_vachu
    #arRehman
    #vilari #alangudyVellaichamy #vendhuThanindhadhuKaadu_songs

Комментарии • 2,7 тыс.

  • @mfaroopiyausi5408
    @mfaroopiyausi5408 Год назад +4

    அந்த அம்மா படுறது உங்களுக்கு புடிக்கலனாலும் அவங்க படுறதுனாலதான் அந்த பாட்டே ஜோலிக்கிது

  • @நெடுஞ்சேரலாதன்

    இந்த குரலுக்கு தான் பாடல் ஹிட்டானது. நண்பரே!

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Год назад +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் ❤️😍 தாமரை ❤️❤️

  • @vijaymanoj.1340
    @vijaymanoj.1340 Год назад +31

    தாமரை அவர்கள் பெயரை போலவே அவரின் பாடல் வரிகளும் இனிமையானது அழகானது

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 Год назад +12

    கவிஞர் தாமரை அற்புதமான தமிழ் கவிஞர் இன்று இவர் மட்டுமே தமிழ் கவிதை எழுதி சொக்கிப்போகும் அளவில் இருக்கும்

  • @ganapathym3664
    @ganapathym3664 2 года назад +154

    7:10 உத்திரத்தை பார்த்தே நான் உக்கிவிடப்போறேன் - (உக்கி விடுதல் - மெலிந்து சோர்ந்து போதல், உத்தரம் - வீட்டின் மேல் மச்சி பகுதியை தாங்கி நிற்கும் மரக்கட்டை) தூங்காமல் அந்தரத்தில் உள்ள உத்திரத்தை ஏக்கத்தோடுப் பார்த்தே மெலிந்து போவேனோ என எழுதியிருக்கிறார்.

  • @naampirakkavittal6226
    @naampirakkavittal6226 2 года назад +15

    என்ன சொன்னாலும் அந்த பாட்டுல பாடுன பாடகி வாய்ஸ் தன்மைதான்
    அழகு

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 Год назад +1

      இங்கு அவர் குரலை பற்றி எந்த விமர்சனமும் இல்லை. அவருடைய உச்சரிப்பு தான் பெரிய பிரச்சனை. குரல் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் குரலை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய? ஒவ்வொரு மொழிக்கும் சரியான உச்சரிப்பு என்பது மிக மிக முக்கியம்.
      வேற்று மொழியினராக இருந்தாலும் சுசீலாம்மா ஜானகிம்மா சித்ராம்மா, சுஜாதா, ஸ்வர்ணலதா, ஸ்ரேயா கோஷல் இவர்கள் அனைவரும் மிகவும் சரியான உச்சரிப்பில் பாடுபவர்கள்.

  • @varshanrocks6497
    @varshanrocks6497 2 года назад +483

    இரட்டை அர்த்தங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகள் இல்லாத தோழ தமிழ் சொற்களை பயன்படுத்தி பாடல் ஆசிரியரான கவிஞர் தாமரை அவர்கள் எழுதிய வருகிறார் மிக்க மகிழ்ச்சி

  • @ako4761
    @ako4761 Год назад +26

    அக்கா தாமரை தமிழ் சமூகத்தில் பிறந்த ஒப்பற்ற கவிஞர். அக்காவுக்கு தம்பியின் புரட்சி வணக்கம்.. அதே போல் ஐயா இந்த பாடலை விளக்கம் தரும் விதம் மிக அருமை... நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்....நன்றி.....

  • @bakiyanathanarunbenetic8603
    @bakiyanathanarunbenetic8603 Год назад +11

    தாமரை..... மிகச்சிறந்த படைப்பாளி.... சூழ்நிலை முழுவதும் உள்வாங்கிய உணர்வு நிறை படைப்பு... வாழ்த்துக்கள் கவிஞரே... இசைப்புயல் முத்திரை நிறைவு...

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +294

    வரிகள், இசை, குரல் மூன்றும் ஒரே அலைவரிசையில் பயணித்தால் மட்டுமே அந்த பாடல் முழுமையாக உயிர்பெறும்.

    • @senthil4912
      @senthil4912 Год назад

      AR isai eppoluthume pedal varikalai kudithuvittu mola satham mattume ketkum ithai AR idam kettal nalla music system vangi pattu kelunu ehathalamana bathil than Varum..

  • @jaheerhussain9512
    @jaheerhussain9512 2 года назад +301

    சரியான விமர்சனம் அண்ணா உண்மையிலேயே சொல்லுகிறேன் எனக்கும் மனம் வருத்தம் நிறைய இருந்தது எப்படிப்பட்ட அழகான பாடல் எப்படிப்பட்ட அழகான இசையை இப்படி செய்து இருக்கிறார் என்று மனவேதனை மிகவும் அதிகமாக இருந்தது உங்கள் ஆதங்கத்தை கேட்டவுடன் எனக்கு மனபாரம் லேசாக குறைந்தது

    • @rameshram4061
      @rameshram4061 2 года назад +3

      True bro

    • @muthukumaransubramanian205
      @muthukumaransubramanian205 2 года назад

      AR Rahman Madhu Shri-ku neraiya vaaippugal kudukkanum .. arumaiyana ucharippu .. inimaiyana kural ..

    • @muthukumaransubramanian205
      @muthukumaransubramanian205 2 года назад

      AR Rahman Madhu Shri-ku neraiya vaaippugal kudukkanum .. arumaiyana ucharippu .. inimaiyana kural ..

    • @arulsathya3670
      @arulsathya3670 Год назад

      Rasigan rasippan vinanai viathaippan vinai aruppan

    • @arulsathya3670
      @arulsathya3670 Год назад

      Thappanvanakku paadal thappakagathan irukkum

  • @SelvaKumar-up4ll
    @SelvaKumar-up4ll 2 года назад +34

    பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் நீங்கள் சொன்னதுக்கு பிறகு தான் இப்பாடலில் முழு அர்த்தமும் புரிந்தது நன்றி

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc Год назад +1

    அந்த பாடகியின் குரலில் இப்பாடலை பலமுறைக்கேட்டும் வார்த்தைகள் புரியவில்லை அருமையான பாடல் நன்றி தம்பி.

  • @mayilvaganan9890
    @mayilvaganan9890 Год назад +8

    பாடல் வரியில் இவ்வளவு புரிதல் தன்மை இருப்பது தெரிகிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் சொல்லும் போது ஒவ்வொன்றும் கேட்க அருமையாக இருக்கிறது. இந்த வீடியோ பதிவிட்ட வரைக்கும் விளக்கிச் சொன்னவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @prabakaranratha8582
    @prabakaranratha8582 2 года назад +63

    Swarnalatha Amma intha song ah paadi eruntha vera level but Amma ippothu namma kooda illa miss you

  • @yamininayaham7676
    @yamininayaham7676 Год назад +15

    பொதுவா தாமரை பாடல் வரிகளில் ஒரு பெண்ணின் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு அழகான வரிகளை பாடியவர் கெடுத்து விட்டார் என்றே கூறலாம், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி.

  • @nandagopalmoopanar2907
    @nandagopalmoopanar2907 Год назад +8

    நியாயமான ஒரு உண்மையான தமிழரின் ஆதங்கமும் வேண்டுகோளும்!என்னுடைய எண்ணக் கிடக்கையும் அது தான்

  • @govindangovindan923
    @govindangovindan923 Год назад +42

    கணவன் உடனில்லா மனைவி எப்படி கடினப்படுவாள் என்பதை இப்பாடல் வரிகளின் மூலம் அருமையாக உணர்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @jayaramant1001
    @jayaramant1001 Год назад +199

    இந்த பாடலை. கேட்கும் போது நான் இதை தான் உணர்ந்தேன் நல்ல தமிழ் உச்சரிப்பு இல்லை என்று . நீங்கள் சொல்வது சரியான கருத்து

    • @shivangikdmmaxchannel7193
      @shivangikdmmaxchannel7193 Год назад

      ruclips.net/user/shortsEZkYcZu8OCg?feature=share
      ruclips.net/user/shorts3YJKKtFRntU?feature=share

    • @insaarmohamed3219
      @insaarmohamed3219 Год назад

      நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்று மொழி இல்ல. புரிஞ்சா சரி. மாற்று மொழிப்பாடல்கள ரசித்து கேட்டதில்லையா?

    • @balachander4199
      @balachander4199 Год назад +1

      Absolutely right very good music, lyrics too good but the pronunciation extremely bad.

    • @balachander4199
      @balachander4199 Год назад +1

      Yes isaipuyil has killed the song

  • @CFKUMAR-qd5zz
    @CFKUMAR-qd5zz 2 года назад +177

    சரியான விமர்சனம்....எத்தனையோ நல்ல உச்சரிப்புடன் கூடிய பாடகர்கள் இருக்கும்போது....நம்ம மொழி பாடகியை பாட வைத்திருக்கலாம்...ARR இதை இனிமேல் இந்த தவறை தொடரமாட்டார் என நம்புவோம்....

    • @anjusekar986
      @anjusekar986 2 года назад

      Ongala ellam thiruthave mudiyathu thamil thamilan nu en sagureenga intha patla avlo mistake ila avunga voice nalla eruku different voice music pathi theriyama pesurathu oru singer ahh en kevala paduthureenga appo ethuku kekureenga ellarum en matha patu kekave matanga romba panathanga athan thamilana velila mathika matikanga

    • @fsaletsoniya3117
      @fsaletsoniya3117 2 года назад +3

      @Sathish Kumar தமிழ் உச்சரிப்பு தெரிந்த தமிழ் பாடகர்களுக்கு தமிழ் நாட்டில் பஞ்சமா???

    • @mathankumar2433
      @mathankumar2433 Год назад

      மிக கேவலமான உச்சரிப்பு .....

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 года назад +189

    உண்மையில் பாடலை கேட்டு ரசித்து விமர்சனம் செய்ததற்காக நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @rarunkumar1477
    @rarunkumar1477 2 года назад +9

    நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல பாடல் தமிழை நன்றாக உச்சரிக்க கூடிய பாடகியை பாட வைத்திருக்கலாம். இசை, பாடல் வரிகள் மற்றும் குரல் வளம் அருமை

    • @parusundari1967
      @parusundari1967 2 года назад +1

      பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஐசரி சார் தாங்கள் கோட்டைவிட்டது வருத்தமாக உள்ளது

    • @dhevads2359
      @dhevads2359 Год назад

      பாடல் voice கேட்கவே இனிமையாக இல்ல! ஐயோ கடுப்பா இருக்கு!

  • @rathanreviews
    @rathanreviews Год назад +12

    பாடலைக் கேட்டு ரசித்தேன்
    ஆனால் உங்கள் பதிவை கேட்டபிறகுதான் அர்த்தங்கள் அறிந்தேன். நன்றி தமிழா 💐
    கவிஞர் தாமரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
    இசையமைப்பாளர் ரகுமான் அவர்கள்
    மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம் Pls 🙏

  • @ayyavunavaneethakumar1919
    @ayyavunavaneethakumar1919 Год назад +139

    நீங்கள் சொன்னது உண்மை.ரகுமான் அய்யா இனிமேலாவது தமிழ் தெரிந்தவர்களை வைத்துப் பாடல் பாட வைக்கனும் என்பது எனது வேண்டுகள்

    • @moorthymoorthy9699
      @moorthymoorthy9699 Год назад +1

      Superb sir

    • @m.baskaranm.baskaran4771
      @m.baskaranm.baskaran4771 Год назад +3

      நீங்கள் சொல்வது தவறு ! பாடல் ஆசிரியர்கள் முதலில் எனது பாடல் வரிகள் புரியும்படி இசை இருக்க வேண்டும் என சொல்லனும் ! துனிவுவேண்டும் ! வைரமுத்துபோல் !
      பணத்துக்கு ஆசேப்பட்டால் ! சேந்தினால் என்ன? சிந்தினால் என்ன ?
      போங்கப்பா ?
      தலைகனம் பிடித்தவர் என்கிற பட்டம் வேண்டுமா ?

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      எங்க avarey singing ( காத்து ------------------ pooola இவள்ளவு gap எதுக்கு ( கேட்ட idu oru type of modulation??? என்கிறார் idai aaahhhh ohhhhhhh uuhhhhhhh அப்படின்னு---------------- அய்யோ நம்ம தமிழ் நிலமை இப்படிதான் poogum போல ( நானே tamil இப்போ taan கொஞ்சம் கொஞ்ச பேசுகிறீர்கள் என்று solkirargal

    • @aneeshaneesh86
      @aneeshaneesh86 Год назад

      Yes sir

  • @muthukumarana3093
    @muthukumarana3093 2 года назад +10

    தமிழ் பெண் உச்சரிப்பு இப்படி இருக்காது உங்கள் பதிவு சிறப்பு.

  • @classicalraju1
    @classicalraju1 2 года назад +50

    செல்லமாக சொல்லி இருக்கிறீர்கள் இதைக் கேட்கும் எல்லாருக்கும் உள்ள கவலைதான் உண்மை கண்டிப்பாக இது அவர் காதில் விழும்

  • @pradeepglow4480
    @pradeepglow4480 Год назад +41

    நம்ம மாநிலத்திலயே எத்தனையோ திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

    • @shivangikdmmaxchannel7193
      @shivangikdmmaxchannel7193 Год назад

      ruclips.net/user/shorts3YJKKtFRntU?feature=share

    • @shivangikdmmaxchannel7193
      @shivangikdmmaxchannel7193 Год назад

      ruclips.net/user/shortsEZkYcZu8OCg?feature=share

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +3

      சரியாக சொன்னீங்க தமிழ்லே தெரியாதவங்களை பாடவச்சது பெருமையாக இருந்தாலும் தமிழ் தெரிஞ்சவங்க நல்லா பாடுறவங்க எத்தினையோ பேர் வாய்பு இல்லாம இருக்காங்க என்னத்த சொல்ல கடவுள் துணை 🙏நான் கனேசன் முடியா

    • @kaderansari10
      @kaderansari10 Год назад +1

      உண்மையை உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழவேண்டும்

  • @rajendrann7797
    @rajendrann7797 Год назад +1

    அண்ணன் வெள்ளைச்சாமியின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது

  • @kumardevakadatcham9576
    @kumardevakadatcham9576 Год назад +1

    A r Rahman Thamari Madhushri combine combo Malli Poo song ..very best presentation ..

  • @dillibabu8847
    @dillibabu8847 2 года назад +102

    மிகச் சரியாக சொன்னீர்கள்... 👌👌👌 இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மதிப்பிற்குரிய தாமரை அவர்கள் எழுதிய இந்த வரிகள் புரியாமல் போனதுதான் வருத்தமான ஒன்று ... 😴 இந்தப் பாடல் வரிகளுக்கு கண்டிப்பாக அவர்களுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @sp.muthuramavelkutty6510
    @sp.muthuramavelkutty6510 2 года назад +12

    மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே,முக்கிக்கிட்டு மூக்கால பாடுரமதிரி,இது மாதிரி கிராமிய பாடல்களை உச்சரிப்பு தெளிவுடன் உருவாக்கவேண்டும்.நன்றி.

  • @morrisbabu2728
    @morrisbabu2728 2 года назад +22

    சரியான விமர்சனம்.....புதுமை என்ற பெயரில் தமிழ் உச்சரிப்பும்.....நல்ல குரல் வளமும் ....தேவை இல்லை என்ற பாணியை அறிமுகப்படுத்தியவர் ARR.....அதன் விளைவு தான் தமிழ் பாடல்களின் அலங்கோலம்......

    • @dhandapani.gg.dhandapani2445
      @dhandapani.gg.dhandapani2445 2 года назад

      Super aka Snnerkal ivan potta Visa Vithaithan All alluku puthumai Seirenu Solli Ottu mottha cinimavaium ketuthu kuttichuvar aaki vittarkal

    • @loveisbeautiful9859
      @loveisbeautiful9859 2 года назад +1

      உண்மை ஐயா!
      அழகிய சொற்களால்
      அமைந்த பாடலை...
      தமிழ் தெரிந்த எவருமே
      இல்லையா... இதைப் பாட?
      ரகுமான் செய்தது தவறே!

  • @vijaykrish9726
    @vijaykrish9726 Год назад +4

    நன்றி , இதை போல பல பாடல்கள் சிறந்த உச்சரிப்பு மிக்கவர்கள் பாடினால் இன்னும் நம் இதயத்தை தொட்டிருக்கும் என்று எண்ணுவது உண்டு , even though iam average tamil knowledge.

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 Год назад +1

    Antha suzhalilal vazhum pothum than ,therium oru Aon Epadi thanudiya manaviyai, vittu prithirukum ,thavipuku, kidatha, Arumaruthu intha padal.We are. Salute and proud of u madam Thamarai.

  • @arunachalamm9809
    @arunachalamm9809 2 года назад +31

    உண்மைதான் தலைவரே, நம்ம தமிழ் பாடகர்களை வைத்தே பாட வைத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்...கிராமிய வாசம் கலந்திருக்கும்...

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 2 года назад +1113

    கவிஞர் தாமரை, ஆங்கில சொற்கள் கலக்காமல் இன்று எழுதும் ஒரே நபர்...

    • @manorajan3115
      @manorajan3115 2 года назад +25

      ரஹ்மான் இந்த பாடலை Mathushiri ஐ வைத்து கொலை பண்ணி விட்டார்.

    • @abuajmal1442
      @abuajmal1442 2 года назад +2

      சினேகன்

    • @yogeshpadh3718
      @yogeshpadh3718 2 года назад +7

      ​@@manorajan3115 SPB அவர்களை பாட வைத்த ஏக் துஜே கேலியே-லும் இந்த குறையை வட இந்தியாவில் சொல்லப்பட்டது. ஆனால் ஹிட் ஆச்சா இல்லையா?

    • @MahaLakshmi-td1sm
      @MahaLakshmi-td1sm 2 года назад +10

      நல்ல.இருக்கு.குரல்.சும்மா.குறை.

    • @attakathidinesh5087
      @attakathidinesh5087 2 года назад +3

      Umadevi the ideal writer

  • @prabhaprabha994
    @prabhaprabha994 2 года назад +450

    அருமையாய்ச் சொன்னீர்கள் அய்யா... தமிழ் பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    • @manin8352
      @manin8352 2 года назад +4

      உண்மை

    • @annamalaiv.ar.683
      @annamalaiv.ar.683 2 года назад +1

      No better then other language singers she is average singer

    • @samishami3105
      @samishami3105 2 года назад +2

      Yes

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 Год назад

      Ulagathaleyee TAMILAN mattum dhan ..
      Tamil tamil tamil nu wastaaa perachana panringga .
      Ellam Indians dhanee.
      Enaverii pidithavargal tamilians 80%.

    • @shivangikdmmaxchannel7193
      @shivangikdmmaxchannel7193 Год назад

      ruclips.net/user/shorts3YJKKtFRntU?feature=share
      ruclips.net/user/shortsEZkYcZu8OCg?feature=share

  • @a.ramdasramdas1077
    @a.ramdasramdas1077 Год назад

    நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.ஏதோ ஒரு பாட்டு ஓடிக். கொண்டிருக்கிறது என்ற ஒரு எண்ணம் அப்போது இருந்தது.ஆனால் இவ்வளவு அருமையான பாடல் வரிகள் அதில் உள்ளது என்பதை நான் அப்போது அறியவில்லை.

  • @thanigamalai9237
    @thanigamalai9237 Год назад +17

    உன்மையிலே வெளி ஊர்ல வேலை செய்யும் நன்பர்களுக்கு இந்த மாதிரி ஒரு அற்புதமான பாடல் சுகமாக இருக்கும் பாடல் பாடிய மதுஷிக்கும் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @kaliannan8712
    @kaliannan8712 2 года назад +9

    மிகவும் அற்புதமான பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பாடல் சிறந்த சொல்லாடல் மற்றும் யதார்த்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள் கவிஞர் தாமரையின் மெனக்கெடல் வீணான வேதனை எனக்கு. நான் இந்த பாடலை கேட்டு வழக்கமான சில புதிய படப்பாடல்கள் போல இதுவும் புரியாத பொருளற்ற பாடலென்றே கடந்து போய்விட்டேன். தங்களது பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களது பதிவை பார்த்து விட்டு பிறகு பலமுறை பாடலை திரும்ப திரும்ப கேட்டபிறகே கவிஞ தாமரையின் தமிழ் வீணாகிவிட்டதே என தோன்றுகிறது. ரஹ்மான் இனிமேலாவது தமிழ் நன்றாக உச்சரிப்பு வரவழைத்து பாடகர்களை பாட செய்ய வேண்டும். மேலும் மண் மணம் கொண்ட சூழலுக்கான பாடல்களுக்கு ஏன் நம் பாரம்பரிய இசை வாத்தியங்களை பயண்படுத்தமாட்டேன் என்கிறார். சில நல்ல பாடல்கள் இசை வாத்திங்கள் என்ற பெயரில் சில இயந்திர சத்தங்கள் பாடல்களை சிதைத்தது போன்ற நிகழ்வுகளும் உண்டு. இந்த விசயத்தில் இளையராஜா வை நினைக்கத் தோன்றுகிறது. ரஹ்மான் நவீன இளைஞர்களுக்கு என யோசித்து தனது originally யை விட்டு விலகி போகிறாரோ என்ற சந்தேகம். அவர் அவருடைய இசையை எவ்வித சமரசமும் இல்லாமல் வழங்கினால் காலம் கடந்தும் நினைக்கப்படேவார்.ஏனெனில் தமிழரான அவருக்கும் தமிழை காக்கும் கடமை உண்டல்லவா. பொன்னியின் செல்வனில் நம் மண்ணின் இசை எங்கே ரஹ்மான். பொன்னியின் செல்வன் இசை பற்றி சீக்கிரம் நீங்கள் ஒரு பதிவு பதிவேற்ற வேண்டும். நன்றி.

    • @VILARI
      @VILARI  2 года назад

      நன்றி

    • @thamilathamila2602
      @thamilathamila2602 2 года назад +1

      Ponniyin selvan is the best album of music history . Wait until movie release. No one can compose music other than ARR for PS 1

  • @kgvel797
    @kgvel797 2 года назад +13

    இந்த ஒரு பாடல் மட்டுமா இந்த இசையமைப்பாளர் மட்டுமா 99% பாடல்களின் வரிகளை தேட வேண்டியுள்ளது

  • @rasukrish5191
    @rasukrish5191 2 года назад +15

    நிச்சயம் ரஹ்மான் அவர்களை சென்றடைய வேண்டிய காணொளி.

  • @davidjee3968
    @davidjee3968 Год назад

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கள்ளக்காதல் போல நான் மெல்ல பேச வேண்டும் யாரும் சத்தம் கேட்கும் போது பொய்யாக தூங்கவேண்டும் மிகவும் அருமை

  • @sanjeevs3566
    @sanjeevs3566 Год назад +1

    மதுஸ்ரீ பாடிய குரல் அருமை நன்றி தாமரை மற்றும் ரஹ்மான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @anandrengu8328
    @anandrengu8328 2 года назад +56

    விருமன் பாடல் வரிகள் தெளிவாக புரிந்ததால் தான் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது

    • @jackyjuslin1056
      @jackyjuslin1056 Год назад +2

      முக்கால்ல முக்கபேல்லா பாடல்களும் அப்படி தான நண்பா!

    • @tamilmaniarasakumar9418
      @tamilmaniarasakumar9418 Год назад +1

      Viruman hit ah?

  • @tkthamizhan4509
    @tkthamizhan4509 2 года назад +19

    மிக அழகிய தமிழ் பாடல். இசை ஆதிக்கம் இல்லை பாராட்டுக்கள் ARR. தமிழ் கவிதை மணக்கும் பாடலில் தமிழ் ஜீவன்(உயிர்) இல்லையே!

  • @sureshr4637
    @sureshr4637 2 года назад +8

    பாடல் மிக அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. இசையும் அருமையாக உள்ளது.

  • @ghousebasha1306
    @ghousebasha1306 Год назад +6

    அந்த அம்மா பாடியதால் தான் செம்ம ஹிய்ட் எங்களுக்கு நல்லா பாடல் வரிகள் புரிகிறது

  • @arunasreearunasree2586
    @arunasreearunasree2586 Год назад +3

    இந்தக் குரலுக்காக தான் இந்த பாடல் மிகப்பெரிய அளவிற்கு பாராட்டு பெற்றிருக்கிறது 🔥

  • @lanka1378
    @lanka1378 2 года назад +6

    உண்மையில் உங்களுடைய விளக்கம் அருமை தமிழ்நாட்டில் எத்தனையோ பெண் ஆண் பாடகர்கள் இருக்கின்றார்கள் தவமாய் தவம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படியான தருவாயில் கச்சை துன்று வாங்க கொச்சுக்குப் போன
    கதைதான் இது.

  • @_nammasattam5857
    @_nammasattam5857 2 года назад +108

    அழகான வரிகள், இனிய இசை, நல்ல குரல்.. ஆனால் வார்த்தைகள் சிதைந்து போனது....
    உச்சரிப்பு சரியாக இருந்திருந்தால் பாடலின் தாக்கம் பன்மடங்கு இருந்திருக்கும்.. இந்த பாட்டை கேட்டவுடன் எனக்கு தோன்றிய அதே கோவம்..
    நல்ல விமர்சனம் 👍🏼👍🏼 அருமை 👍🏼👍🏼

    • @jloganathan237
      @jloganathan237 Год назад +3

      அருமையான விமர்சனம்

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 года назад +5

    மிகவும் அருமையா சொன்னீங்க நானும் இந்தபாடலை முதலில் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன் பதிவுக்கு நன்றி

  • @KLLveerarajan
    @KLLveerarajan Год назад +1

    அழகாக, இனிமையாக 90களில் போய் கொண்டிருந்த திரைப்பட பாடல்களை,
    இந்த புன்னியவான் தமிழ் படவுலக எண்டரிக்கு பிறகு பாடல்களின் போக்கையே மாற்றி விட்டார்.
    கெடுத்து விட்டார்.
    இனிமையான பாடல்களே இல்லை.
    இவருக்கு பிறகு வந்த இசையமைப்பாளர்களும் இவரையே பின்பற்றுகிறார்கள்.
    என்னா பாடுறாங்கனே தெரியலே.
    புரியும்படியான வார்த்தைகளே இல்லை.
    பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை.
    எல்லா புகழும் இந்த ரஹ்மானையே சாரும்.

  • @MaruthuPandianJournalist
    @MaruthuPandianJournalist Год назад +1

    தமிழுக்கு A.R. ரஹ்மான் செய்த துரோகம் இந்தப் பாடல். சூப்பர் சிங்கர் பாடகிகள் எத்தனையோ பேர் இருக்க தமிழ் பேசத் தெரியாத இந்தப் பாடகி தேவை தானா ?
    - மருது பாண்டியன் -
    போடிநாயக்கனூர்

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 2 года назад +5

    1990 களுக்கு முன்னாடி வரை பாடல் வரிகளும் இசையும் ஒழுங்காகத் தான் பயணம் செய்தது அது இசையையும் பாடலையும் தனித்தனியாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு தான் பாடல் வரிகளை உள்ளே அடக்கிவிட்டு இசை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இப்போதென்ன ஆகிட்டென்னா. இசைப்பிரியர்கள் அனைவரும் வெளிவரும் ஒரு சில பாடல்களில் பாடல் வரிகள் புரியாமல் அவரவர் காதுகளில் வார்த்தைகள் எப்படி விழுகிறதோ அப்படியே ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் அழகான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப் படும் பால்கள் காணாமல் போய் தலையில் டமாரம் அடிக்கும் பாடல்கள் மிகவும் சிறிய காலத்திற்கு மட்டும் பிரபலமாகி மறைந்து விடுகிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் அழகான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பாடல்களை தமிழை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே பாட வேண்டும்.....

    • @durgairaj5926
      @durgairaj5926 Год назад

      1992 க்கு அப்புறம் தான் தமிழ் பாடல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது

  • @சூர்யாகவிதைகள்

    பின்னணிப் பாடகி சுவர்ணலதா அம்மா உயிரோடு இன்று இருந்து இருந்தால் நிச்சயம் ரகுமான் சுவர்ணலதா அம்மாவைத் தான் பாட வைத்திருப்பார்...

    • @MrSrinirocks
      @MrSrinirocks 2 года назад +18

      Unmai dan avangaluku apt ana song ithu

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 2 года назад +20

      ஏன் தற்போது தமிழ் நன்றாக பேசக்கூடிய பாடகிகள் இல்லையா என்ன?

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад +37

      ஸ்வர்ணலதா அம்மா இறந்தது திரை இசை உலகிட்கு பெரிய இழப்பு. அபாரமான திறமை மிக்க பாடகி. உலகம் உள்ள வரை அவரின் குரல் ஒலித்து கொண்டு இருக்கும்

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 2 года назад +9

      @@rajendrannanappan2978 Yes very correct

    • @meerameera4245
      @meerameera4245 2 года назад +4

      Mm

  • @shabinshabi4527
    @shabinshabi4527 2 года назад +31

    சரியான பதிவு...3 நாள நானும் பொலம்பிட்டே இருந்தேன்..இனிமேலாவது நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ள பாடகர்களை பாட வைக்க வேண்டும்..

  • @umauma5781
    @umauma5781 Год назад +5

    A. R் mucik தாமரை வரிகள். மது ஸ்ரீ வாய்ஸ் சூப்பர் எத்துணை முறை கேட்டாலும் சலிக்காது

  • @rikasmohamed2820
    @rikasmohamed2820 Год назад +163

    பாட்டு முதல் முதல் கேட்கும் போதே, இதுதான் தோன்றியு, அழகான இசை, அருமையான வரிகள், ரம்யமான குரல், ஆனா உச்சரிப்பு தெளிவில்லை, இந்தப் பாடலோட உயிரே அதுதான். பாடலின் உடல் மட்டுமே இவ்வளவு கொண்டாடப்படுகிறது, உயிரும் இருந்திருந்தால்...

  • @spring5472
    @spring5472 2 года назад +5

    தாமரை mam ன் பாடல் வரிகள் எல்லாமே ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ,,,மறு வார்த்தை பேசாதே song எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும்

  • @jananielangovan4583
    @jananielangovan4583 2 года назад +8

    உணர்வுப்பூர்வமான பதிவு......இவர் கூறிய விஷயங்களை நானும் கவனித்தேன்....... மற்றபடி இந்த பாடல் எனக்கு மே மிகவும் பிடிக்கும்...

  • @samsbanu9604
    @samsbanu9604 2 года назад +71

    தரமான விமர்சனம்...போய்ச் சேருகிற காதுகளில் சேரனும்.
    பாராட்டுக்களய்யா.. 💐🙏

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 Год назад +1

      kathil vilunthalum ketkatha mathiri povar intha AR..

  • @vinodhramvs4543
    @vinodhramvs4543 Год назад +3

    ARR IS GENIUS; HE KNOWS THE PULSE OF YOUTH; HOW TO MAKE A SONG HIT; NOWADAYS ALL SONG LYRICS ARE UNDERSTANDING BY HEARING MORE THAN 3 OR 4 TIMES; IT'S TREND: HE IS ALWAYS UNIQUE AND HA D A PRINCIPLE OF ALL REGIONS AND RELIGIONS ARE INDIANS;: HE GIVES MORE HINDI HIT SONGS AND SELECT THE SINGER AS PER SITUATIONS; BY THE BY HE NEVER COMPROMISE HIS MUSIC AGAINST ANY THING

  • @MuthuMuthu-qs5hb
    @MuthuMuthu-qs5hb Год назад +1

    அருமையான விமர்சனம் , நீண்ட நாட்களாக எனக்கும் இந்த எண்ணம் உண்டு, கூடவே தாமரை அவர்களுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் , சுத்த தமிழில் பாட்டு எழுதுவதற்கு இந்த தமிழ்ச் சமூகம் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கும்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад +9

    இசை மட்டுமே இப்போது பாடல் பாடல் வரிகளை மனதில் நிற்காமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது .தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலந்தேன்.சுட்டால் பொன்சிவக்கும் சுடாமல் கண்சிவந்தேன் அதிலு மெலேடியக இசை வருமே.....பழரசதோட்டம் பனிமலர் கூட்டம் பாவை முகமல்லவா .சுவையான குளிச்சியான முகம் என்ன கற்பனை ...

  • @prakashveda8707
    @prakashveda8707 2 года назад +12

    அருமையா பாடல் வரிகள் விளக்கம் தந்தீர்கள்.கவிஞர் தாமரைக்கும் நன்றி 🙏🏻

  • @anandrengu8328
    @anandrengu8328 2 года назад +70

    பொன்னி நதி பாட்டு கேட்ட போது எனக்கும் வரிகள் புரியவில்லை..நானும் இதேதான் நினைத்தேன்..

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 Год назад +2

      kaluthai kathinamathiri irunthathu ponni nathi pattu...

    • @Mr619a26
      @Mr619a26 Год назад

      @@pukkatayanp5346 sootha saathuda da bunda maavane

    • @deadlydangerous3256
      @deadlydangerous3256 Год назад +1

      @@pukkatayanp5346 poda joker Funda 🤡

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Год назад

    பெண் என்பவள் இன்பத்துப்பாலை வெளிப்படையாக வெளிப்படுத்துவது.மரபும் இல்லை.வெளிப்படுத்தத் தயங்குவாள்.ஆனால் சகோதரி தாமரை திரை உலகில் பயணித்து எத்தனையோ தமிழ்ப் பெண் கவிர்களான ஔவை.காக்கைப் பாடிணி போன்றோருக்கு பெருமை சேர்க்கின்றார்.வாழ்த்துக்கள். அதை சிறப்பாக திறனாய்வு செய்த சகோதரருக்கு நன்றிகள்.🙏👍👍👍👍👍👍🙏

  • @Porkkalam
    @Porkkalam Год назад +3

    சாதாரண நடுத்தர வர்க்கம் உங்களைப்போல் தேவையற்ற ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க மாட்டார்கள். இன்றைக்கு ஒலித்து கொண்டிருக்கிற டப்பாங்குத்து பாடல்களுக்கு மத்தியில் ஒரு இனிமையான பாடல்! மிகப்பொருத்தமான குரல் தேர்வு. அதனால்தான் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கிறது! அபஸ்வரமான விமர்சனம்!

  • @nasarnaser8399
    @nasarnaser8399 2 года назад +12

    வெளிநாட்டில் உள்ள உறவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @jaheerhussain9512
    @jaheerhussain9512 2 года назад +13

    ரொம்ப நாள் கழித்து அழகான இசை தந்து இருக்கிறார் என்று மனமகிழ்ச்சியோடு இருந்தேன் ஆனால் தாங்கள் சொல்வது போல் லிரிக்ஸ் சரிவர புரியவில்லை இந்த படத்தில் இன்னொரு பாடலும் உண்டு அதுவும் அப்படித்தான் அடங்காத ராட்டினத்தில் அந்தப் பல்லவியும் சரி வர புரியாமல் இருக்கும் லிரிக்ஸ் பார்த்து படித்தபின்பு தான் புரிகிறது

  • @rameshraja5657
    @rameshraja5657 2 года назад +7

    மிகவும் பயன் உள்ள பதிவு இது,, மிக்க நன்றி அய்யா,, எங்கள் மொழி புரியாதவருக்கு,, அதன் ஆழம் மற்றும் உணர்வு புரியாது 🙏,, கண்டிப்பாக இந்த காணொளி அவரை சென்று அடையும் 💐

    • @anjusekar986
      @anjusekar986 2 года назад

      Neena ellarum over ahh thamilan nu peruma pandranalatha nammla mathika matikanunga

  • @SafwansSamayal
    @SafwansSamayal Год назад +2

    உண்மை.இந்த பாடலுக்கு இந்த குரல் பொருந்தவில்லை.மனதில் ஒட்டவுமில்லை

  • @ponmuththuvel8918
    @ponmuththuvel8918 Год назад

    ஒரு..அன்பு நிறைந்த. பெண்.காமத்தை..மட்டுமே..சொல்வாளாகண்டிப்ப..பாடமாட்டாள்.....நலந்தானா..நலந்தானா..உடலும் உள்ள மும்.நலந்தானா. ஏன் பாடத்தோனவில்லை..அப்படி யானால்..பெண்என்பவள்.காமா..உணர்வில்தான்இருப்பாளா....தன்மனைவி..இப்படி. பாடுகிறாளே.நாம..ஊருக்குசெல்வதற்க்குள்..ஏதும்.தவறு.செய்துவிடுவாளோ...என.எண்ணம் தோன்றிவிடாதா....இந்த பாடலில்..காமமே..மேலோங்கி. உள்ளது..அன்பு. கருனை.பாசம்.இல்லை யே

  • @kumarsakthivel8550
    @kumarsakthivel8550 2 года назад +8

    உங்கள் விரிவாக்கம் மிக மிக அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @jayaprakashannamalai4580
    @jayaprakashannamalai4580 2 года назад +30

    பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களுக்கு மேற்கத்திய இசை பாணியில் சூபி இசை அமைக்கும் ரஹ்மான் அவர்களுக்கு பதிலாக இசையிலே மண்மணம் வீசும் இசையமைப்பாளர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஏனைன்றால் சில வரலாற்றுப் பாடல்களில் ஏதோ மிஸ் ஆகுற மாதிரி ஒரு வாட்டம் உள்ளது.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 2 года назад +5

      @Jayaprakash Annamalai சுத்தி வளைக்காம நேரடியா இளையராஜாவை போட்டிருக்கணூம்னு சொல்லுங்களேன்?

    • @tkv6720
      @tkv6720 2 года назад +6

      ஜி வி பிரகாஷ் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @bypassrider8789
      @bypassrider8789 2 года назад

      👍

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 года назад +2

      @@navnirmaansamrakshana4938 adhil enna thavaru?

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 года назад

      I too feel this

  • @vijaymani1052
    @vijaymani1052 2 года назад +4

    அழகான பாடலைப் பாடியே கெடுதல் இதுதான்

    • @rajamanis8293
      @rajamanis8293 2 года назад

      Amanga veechuveechunu kathi yerichala iruku.kadhu karuhudhu😡😡😡😡

  • @manikandankasinathan6742
    @manikandankasinathan6742 Год назад

    தங்களின் விமர்சனப் பார்வை அருமை. இப்பாடல் வரிகள் பிரிதலையும் நாகரிகமான புரிதலையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆற்றாமை; ஏக்கத்தை; அதிகரித்து தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறது. மொழியைக் குழைத்து செவிகளுக்கு விருந்து வைத்துள்ளார் தாமரை. மொழி ; அதனை மொழியும் குரல்; குரலோடு இசையும் இசை இம்மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்தால் பாடல் உச்சம் தொடும். உணர்வை பிரதிபலிக்கும். அப்படித்தான் இப்பாடல் மொழி குரல் இசை மூன்றும் சேர்ந்து உச்சம் தொட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள்...

  • @muthuraman693
    @muthuraman693 Год назад

    ரொம்ப முக்கியம் இந்த பாட்டும் விமர்சனமும்

  • @georgeb8555
    @georgeb8555 2 года назад +47

    A. R. Rahman is a great Music Director and the World praises him a lot. Bur, he should engage Tamil well- Known Singers. We salute you Sir.

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 2 года назад +17

    வரலாற்று வரிகளுக்கு சொந்தக்காரர் தாமரை அவர்களுக்கும்
    மது ஸ்ரீ குரலால் மதுபோல் போதை ஏற்றிய பாடகி மதுஸ்ரீ அவர்களுக்கு
    இசை வெள்ளத்தில் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தில் இருக்கும் இதயங்களை அனைத்தையும் இசை வெள்ளத்தில் நீந்துவிட்ட
    ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாராட்டுக்கள் பல

  • @araja8321
    @araja8321 2 года назад +4

    மிகவும் சரி…..👍

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 Год назад

    AR ரகுமான் இசை, பாடல் வரிகள் மற்றும் குரல் அனைத்தும் சூப்பர்

  • @animetime2694
    @animetime2694 Год назад

    A r Rahman songs ellam thadavaikkum issai best song A R music

  • @BalajiBalaji-sc8dv
    @BalajiBalaji-sc8dv 2 года назад +10

    நிச்சயமாக இதை நானும் உனர்ந்தேன் . என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடவேண்டும் இதே போல இருந்து இருக்கும் வார்த்தைகளும் சிதைந்திருக்காது.
    கருப்புதான் எனக்கு பிடித்த கலரு மற்றும் என்ன நெனச்ச என்ன நெனச்ச பாடல் பாடியுள்ளார்.

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 2 года назад +7

    இலக்கிய நயமும் இயற்கை உணர்வுகளையும் குறுக்கும்நெடுக்குமான இழைகளால் எழிற்றமிழ் ஆடையாக்கி வழங்கியப் பாவலர் தாமரை அவர்கள் பல்லாண்டு வாழ்க!

  • @ugandarugandar3618
    @ugandarugandar3618 2 года назад +25

    உண்மை அண்ணா. தமிழ் பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். வாழ்க தமிழ்.

  • @thangapandiyan4282
    @thangapandiyan4282 Год назад +105

    A R sir வந்த பிறகு தான் எல்லா மொழிகளிலும் உள்ள புகழ்பெற்ற பாடகர் கள் தமிழில் பாடிய பெறுமை பெற்று தந்தார் வாழ்த்துக்கள் sir

    • @brokendonut770
      @brokendonut770 Год назад +6

      Ana tamilargal illa

    • @thinkdeep4613
      @thinkdeep4613 Год назад +1

      Ivalo varushama Vera endha paatayum kekalaya illa....?

    • @elroy7351
      @elroy7351 Год назад +3

      ஆமாம்.
      ழ உச்சரிப்பு ல ஆனதும்
      அதற்கப்புறம் தான்.

    • @basbasss4920
      @basbasss4920 Год назад +3

      ​@@elroy7351 தாங்கள் தயவுடன் போய் பழைய ராசாவின் யமுனை ஆற்றிலே பாடலை கேட்டு விட்டு கதறவும்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Год назад

      Ilayaraja vera uril irunthu vangala pada vaikilaya,. Ms mahadevan p suseela janaki spb pb srinivas ellam vera uru karngathan

  • @anianto20
    @anianto20 Год назад

    குரல் என்னமோ அருமையான ! உச்சரிப்பு பரிதாபம் .
    நீங்கள் சொல்வது மிக்க சரி .

  • @chozhapugazhendhi6700
    @chozhapugazhendhi6700 2 года назад +7

    பாடல்வரிகள் புரியவில்லை என்பது உண்மைதான். இசையும் பாடலும் சிறப்பு

  • @universalhero8856
    @universalhero8856 2 года назад +13

    நானும் கொண்டேன் இவ் வேதனை மிக அழகான தமிழை கூர்மை இல்லா கத்தியை கொண்டு வெட்டியது போல்....தாமரை தமிழ் உயிர் வாழ இனியாவது பெரிய தவறை திருத்தி கொள்ளுங்கள் எங்கள் ஆஸ்கர் நாயகன் அவர்களே சில வார்த்தைகள் என்ன பாடறாங்கனு தெரியல

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 2 года назад +13

    என் மனதில் பட்டதை அப்படியே கூறியமைக்கு மிகவும் நன்றி

  • @mhshmh3987
    @mhshmh3987 Год назад

    Super. Tamil nattil ulla mukkiyamana pirachanai theera vali sonnatharku nanri

  • @poongothaisrikaran7848
    @poongothaisrikaran7848 Год назад

    சரியாகச்சொன்னீரகள் அருமையான பாடல் வரிகள்
    பாடகியுன் குரல் இனிமைதான் நீங்கள் சொல்வதுபோல் வரிகள் இசைக்குள் புதைந்துபோய்விட்டது்் இசைப்புயல் அவர்கள் ஒரு தமிழ் ஆர்வலர் இதை கவனத்தில் கொண்டால் சிறப்பு
    வாழ்க தமிழ்!

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 2 года назад +732

    திரைத்துறையின் தவிர்க்கமுடியாத சாபம்
    இசை அமைப்பாளர்கள்
    பாடகர்களை கொண்டாடும் அளவிற்கு பாடலாசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை..

    • @ashokkumar-jh2nr
      @ashokkumar-jh2nr 2 года назад +10

      Very correct

    • @akkidevilgod4780
      @akkidevilgod4780 2 года назад

      sunni

    • @sudalaimanimani1733
      @sudalaimanimani1733 2 года назад +4

      அதெல்லாம் கண்ணதானொடு முடிந்தது

    • @gautammasil3618
      @gautammasil3618 2 года назад +3

      Neenga kondadunga status podunga post podunga yaru venanu sona

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +3

      Pulamaippiththan, Meththa, Muthukumar, pazhanibharathi, Vairamuthu, Thamarai.Paa,Vijai Ippadi palar kondadap padugirargale

  • @loveall7810
    @loveall7810 2 года назад +16

    இசை அமைப்பாளர் திரு.இளையராஜாவாக இருந்து இருந்தால் அவருடைய தமிழ்ப் புலமை, பற்று, தொழில் பக்தி இசை ஞானம் இவை அனைத்தும் இந்தப் பாடலை வேறு லெவலுக்குக் கொண்டு சென்று இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
    வாழ்க இசை ஞானி.
    வளர்க அவர் புகழ்

    • @yugirocker
      @yugirocker 2 года назад +1

      இந்த படத்துக்கு போய் இளையராஜாவா ,
      கேவலமான படம் இதுக்கு ரஹமான் இசை அமைத்ததே தவரு
      எதாவது பாட்டு மனசுல நிக்கிதா atleast hum பன்ற அளவுக்கு என்ன பாட்டு இதெல்லாம் ஒரு நாள் கூடநிலைக்காது

    • @SilambarasanTR_Fans_Club
      @SilambarasanTR_Fans_Club 2 года назад

      @@yugirocker edu seruppa nayee

  • @uthayakumar8953
    @uthayakumar8953 2 года назад +10

    இந்த குரலுக்காக தான் இந்த பாடல் கவனம் பெற்றது

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 Год назад +1

    This song super hit a r Rahman is best

  • @vishvavijay5606
    @vishvavijay5606 Год назад +1

    இந்த பாடலை 100தடவைக்கு மேல் கேடிருப்பேன்