சிறுகதை / Tamil stories / moral stories / கதை கதைப்போமா / இல்லறம்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- இல்லற இரகசியம்/ வாழ்க்கைக்கான மந்திரம்/Tamil stories/moral/life lesson@arulskadhaikadhaipoma #lifelessontamil #tamilstory
துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை'.
ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை.
இலக்கை அடைய ‘குச்சி' என்ற கருவி அவசியமாகிறது.
அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.
ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது.
பறவைகளுக்கு ‘குச்சியை'ப் போல மனிதர்களுக்கு ‘இல்லறம்' கருவியாகிறது.
‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.
‘இல்லறம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'.
இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.
இதுவே இல்லற ரகசியம் ❤️