குசேலோ பாக்யானம் | திருமதி விசாகா ஹரி குழுவினர் | மாயூரம் ராதாகல்யாணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2024
  • கண்ணனே சேவை செய்த திருவடி
    அண்ட சரசரமே அவன் படைப்பெனினும், அவன் படைப்பை சார்ந்து இல்லை என்றாலும், தன்னை ஒருவர் சுத்தமான உள்ளதுடன், பிரேமை பொங்க, கண்ணன் சரணமே கதி, அவனை வணங்குதல் ஒன்றே விதி என்று எவர் வாழ்கிறாரோ அப்போது அவன் தன் ஸ்திதியை மாற்றி கொள்கிறான். அனுகிரகம் என்பது பக்தனை மேம்படுத்தும், பகவானை கட்டுப்படுத்தும். இந்த கட்டுப்பாட்டினை அவன் தன் கருணையினாலேயே தனக்கு அமைத்துக்கொள்கிறான். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தன் நண்பன் தன்னை காண பாத யாத்திரையாக நடந்து வந்ததால், பிரேமை பொங்கி, கால் பிடித்து விட்டான் கண்ணன். கண்ணன் சேவை செய்த திருவடி எதுவெனில் ஒன்று குருவின் திருவடியாக இருக்கவேண்டும் அல்லது குசேலரின் திருவடியாக இருக்க வேண்டும்.
    யார் இந்த குசேலர், அப்படி என்ன செய்தார் ?
    திருமதி விஷாகா ஹரி குசேலோ பாக்யானத்தில் எடுத்துரைக்கிறார்
    #mayuramradhakalyanam #radhekrishna #vishakahari #krishna #srisrianna #sampradayam #sanatandharma #hinduism #dussehra #sudhama #kuchelobhagyanam #carnaticmusic #ramram

Комментарии • 46