#சிலம்பமும்_பறையும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • நமது சிலம்பக்கலையானது தற்காப்பு கலை ,பாரம்பரியம் கலை, வீரவிளையாட்டு மற்றும் பள்ளி விளையாட்டுக்களில் ஒன்று போன்ற பல்வேறு வகைகளில் இருந்து வருகிறது.
    இதேபோல்தான் சிலம்பத்தில் மற்ற தமிழ் பாரம்பரிய கலைகளுடன் உள்ள தொடர்புகளை விளக்கும் விதமாக தமிழ் நாட்டில் முதல் முறையாக #உயிர்க்கலை தற்காப்புக்கலை பயிற்சி பள்ளி மற்றும் #நிமிர்வு_கலையகம் பறை இசை பள்ளி சார்பாக சில முன்னெடுப்பு பயிற்சிகள் ,விளக்கங்கள் எடுத்து வருகிறோம்.
    இதன் முதல் பகுதியாகப் சிலம்பத்தின் காலடி பாடம் மற்றும் பறை ஆட்டத்தின் கால் அடவுகள் பற்றி காணொளிகள் பதிவிட உள்ளோம். இந்த மாதிரி காணொளிகள் முற்றிலும் சிலம்பத்தின் பல்வேறு கோணங்களில் இருந்து வேறுபட்டு மற்றொரு புதிய கோணத்தில் மட்டுமே பார்க்கப்படவேண்டிய ஒரு பகுதி.
    எனவே இந்தப் பகுதியில் பதிவிடப்படும் காணொளிகள் மற்ற கலைகளுக்கு உள்ளான தொடர்பை விளக்கும் விதமாக மட்டுமே இருக்கும்.
    சிலம்பம் பயிற்சி எடுக்கும் எவரொருவரும் எந்த கலையிலும் சிறந்து விளங்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த காணொளிகள் அமையும்.
    இதில் தற்காப்புக்கலை வரவில்லை, தற்காப்பு கலை ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று தவறான எந்த ஒரு கருத்தும் பதிவு செய்ய வேண்டாம்.
    விருப்பமுள்ளவர்கள் இந்த புதிய கோணத்தை பார்த்து பயன்பெறவும்.
    மேலும் தற்காப்புக் கலையாக வேண்டுமென்றால்
    தற்காப்புக்கலைகள் சார்ந்து எங்களின் மற்ற காணொளிகள் பதிவிட்டுள்ளோம் அதை பார்த்து பயன்பெறவும்.
    எங்களின் இந்த செயலுக்கு பறை இசை பயிற்றுவித்து உறுதுணையாக இருக்கும் நிமிர்வு கலையகத்திற்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி...

Комментарии • 15