உடையார் பாகம் 1 அத்தியாயம் 42

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025
  • #audio book #udayar #balakumaranpesugiren #உடையார்
    உடையார் முன்னோட்டம்
    அமரர் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் மூலம் பிற்காலச் சோழர் வரலாற்றை வெகு அழகாய் தமிழர் நெஞ்சில் பதிய வைத்துள்ளார் அவர் போட்டுக்கொடுத்த மேடையில் அடுத்த எழுத்தாளன் தன் நாடகத்தை அரங்கேற்றி அது எளிதாகிறது
    இந்த நாவலில் ராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சை பெரிய கோவில் கட்டும் விஷயத்தை நான் மையமாக எடுத்துக் கொள்கிறேன் சோழர் கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து இருக்கிறேன்
    இதற்கு ஸ்ரீ நீலகண்ட சாஸ்திரியும் ஸ்ரீ சதாசிவ பண்டாரத்தார் எனக்குத் துணை இவர்கள் தமிழர் நாகரிகத்தை தமிழருக்கு காட்டிய தமிழர்கள் சரித்திர பேராசிரியர்கள் இன்றைய தமிழ்நாட்டின் மையம் அன்றைய சோழ மண்டலம் அதைப்பற்றி தெரிந்து கொள்ளாது தமிழர்கள் இருந்துவிடக்கூடாது அன்றைய வாழ்க்கை இன்று போல் இல்லை நாம் ஏற்றுக்கொள்ள முடியாத மாறுபாடான விஷயங்கள் அவர்கள் கொண்டிருந்தார்கள் இப்போதை விட சாதாரண ஜனங்கள் அதிகம் நேர்மை நாணயத்துடன் வாழ்ந்தார்கள்.
    பலமுறை பலநூறு முறை சோழ மண்ணில் அலைந்து
    மனதில் வாங்கி விஷயமெல்லாம் இதில் ஊடுஆடுகின்றன
    தொல்பொருள் துறையில் உள்ள கல்வெட்டு ஆராய்ச்சி நண்பர்கள் பல்வேறு தகவல்களை சொல்லி இருக்கிறார்கள்.
    சனகாதி முனிவர்கள் இருவரையும் ராஜராஜன் கருவூர்த் தேவர் என்று சொல்லி வருகிறோம். வலப்பக்கம் சரிந்த கொண்டையும், பெரிய மீசையும், இடுப்பில் துண்டு, கழுத்தில் மணிமாலையும், ஒரு கால் மடித்து உட்கார்ந்தபடியும் இருக்கும் ராஜராஜன் சில படங்களில், சிற்பங்களில் காட்சியளிக்கிறார்.
    பிரம்மராயர் இருக்கலாம் என்ற எண்ணத்தோடு அடையாளம்
    தெரியாத ஒரு அழகு ஐம்பொன் சிலை தஞ்சை ஆருங்காட்சியகத்தில் இருக்கிறது. அவன் பரம்பரையினர் வணங்கிய பெண் தெய்வங்கள் பட்டீஸ்வரத்தில் தஞ்சாவூரில் இன்றும் வழி வழிபட்டுக் உரியவர்களாக இருக்கிறார்கள்.
    காவிரியில் நீர்வரத்து அன்றும் பிரச்சனை
    நாகப்பட்டினத்தில் புயல் காலகாலமாக விஷயம்
    பெண்ணடிமைத்தனமும், மதச் சண்டை, முதுகில் குத்துவதும் எல்லா காலங்களில் மனிதன் இயல்புகள்.
    இவையெல்லாம் இருப்பினும், இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை துல்லியமாக கணக்கிட்டு எப்படி கட்டினான் இந்த கோவிலை? எது உந்துதல்? யார் துணை? உழைப்பு? ஏது காசு? எவர் நிர்வாகம்? எங்கிருந்து பாறை? எவை வாகனம் வியந்து வியந்து இவைகளை
    யோசிக்கும் போது கிடைத்த நாவல் இது.
    இப்படிக்கு
    பாலகுமாரன்
    licence under creative commomns : By attribute 3.0
    creative commomns.org/licenses/by/3.0
    For any copyright concers,contact us at our devaboomi01@gmail.com we will act upon your query immeditately
    / @devaboomi633

Комментарии •