Anyone will fall in love with the Tamil language hearing this. Astounding knowledge in this ancient language. Thanks to aasiriyar for sharing the knowledge embedded in this language. I am fortunate and thankful for learning from this aasiriyar.
இந்த வகுப்பை ஏற்பாடு செய்து அனைவரும் பயன் பெருமாறு இனையத்தில் பதிவேற்றம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி🙏 ஐயா ஜெயராஜ் அவர்களுக்கு பனிவான நன்றி 🙏🙏🙏
ஐயா...உங்களிடம் தமிழ் கற்காமல் போனது என் துர்லபம்... பிழைப்புக்காக பொறியியல் படித்துவிட்டு படிக்காமல் விட்ட நம் மொழியின் பெருமையை நினைந்து இப்போது வருந்துகிறேன்..
ஐயா திரு. இலங்கை ஜெயராஜார், துனைக்கொண்டு, பரிமேலழகர் உரையினை படிக்க நான் என்ன தவம் செய்தேனோ? உரைவீச்சின் ஆழந்த சிந்தனை, அந்த இராமாயணம் குறிப்பு, வியக்க வைக்கிறது. எமது பணிவின் வணக்கம்.
குறள் ; 20 நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
ஐயா வான் சிறப்பு குறித்த தங்களது சிறப்புரை சுவாதி நட்சத்திரத்தில் விளைந்த நன்முத்து போன்று சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி. தங்களை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும் முத்து
25/09/22 ஐயா தாங்கள் வாயிலாக திருக்குறளின் அகரத்தின் சிறப்பும் கடவுளின் முக்குணதால் முவரையும் குணத்தால் பொருளையும் கல்வின் பயன் இறையை படித்தும் வானின்( மழை) உயிர் அமிர்தம் என்றும் வான் இன்றி உலகமும் அறமும் இல்லை என அறிகிறோம்
அதிகாரம் 2. வான்சிறப்பு [அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
இரண்டு வரிகளில் இரத்தினச் சுருக்கமாக திருக்குறள்;நான்கு வரிகளில் முழுமையான பொழிப்புரை திருப்தியாக உணர்ந்து கொண்டோம் என இருமாந்த எமக்கு குறளின் ஒரு வரியை எமக்கு உணர்த்த ஒரு மணி நேரம்கூட போதாது என நச் என்று ஒரு கொட்டு. மனத்தின் வலி தாங்க இயலவில்லை. தமிழ் மொழி பிரசவித்த குழந்தைகள் எத்தனையோ..... தொட்டுக்கூட பார்க்கவோ பழகவோ முனையவில்லை. தேர்வுக்கு..... தேர்வு செய்தவை நீங்க. வெட்கி தலை குனிகிறோம் 70 வயதில். பயனில்லை. இருப்பினும் குரு தரும் அமிர்தத்தை தற்போது ஒரு துளியேனும் சுவைக்கும் பேறு அருளிய இறைக்கு தலை தாழ்த்தி வணங்குகிறோம். ஓம்.
ஐய்யா குருவே வணக்கம். உங்கள் உரை சிறப்பு. மற்றும் அடுத்த 9,10,11,12,13,....... ........பாகங்கள் எங்கே? தயவு செய்து தாமதிக்காமல் தொடரட்டும். ஐய்யா இதனால் எல்லோருக்கும் பயனளிக்கும் இது திண்ணம்.இவர்களில் இவனும் ஒருவன் ஐய்யா. சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் நன்றி ⚘☇💥🔥🌏
குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)
Yes, in those days, both Tamizh and English classes were conducted like this. One student should stand and read sentence by sentence and the teacher explaining every word took and taught in the entire class. Then there was no doubts arising Nd no necessity for any notes. So the relationship is called the teacher and the taught or the tutor and the taught only. Nowadays the relationship is only teacher and the student, and thy students should have separate tuition classes after school. Thendam, thendachilavu.. education lootings!!?
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anyone will fall in love with the Tamil language hearing this. Astounding knowledge in this ancient language. Thanks to aasiriyar for sharing the knowledge embedded in this language. I am fortunate and thankful for learning from this aasiriyar.
எனக்குவயது அறுபது இதை முப்பது ஆண்டுகளுக்குமுன் கேட்டிரருந்தால் என்வாழ்க்கைவேறுமாதிரி இருந்திருக்கும் இந்த தலைமுறையினர் வாழ்க்கைசிறக்கட்டும்
Man age120, okay okay okay
இந்த வகுப்பை ஏற்பாடு செய்து அனைவரும் பயன் பெருமாறு இனையத்தில் பதிவேற்றம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி🙏 ஐயா ஜெயராஜ் அவர்களுக்கு பனிவான நன்றி 🙏🙏🙏
ஐயா...உங்களிடம் தமிழ் கற்காமல் போனது என் துர்லபம்... பிழைப்புக்காக பொறியியல் படித்துவிட்டு படிக்காமல் விட்ட நம் மொழியின் பெருமையை நினைந்து இப்போது வருந்துகிறேன்..
துர்லபம் என்ற வார்த்தை பிரயோகம் இங்கே தவறு பரவாயில்லை
தமிழ் கற்காத குறைக்கு தான் வருந்துகிறீர்களே
இவரைக் கொண்டு திருக்குறள் முழுமையும் உரை நிகழ்த்தச் செய்ய வேண்டும். அற்புதமான விரிவுரை. கேட்கக்கேட்க இனிமையாக உள்ளது.
?.
குறள் : 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய்நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)
Vera level
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏🙏🙏🙏🙏
அறம் பெருகட்டும் ❣️
அய்யாவின் உரையை கேட்டான்
போதும்
நாட்டில் உள்ள அனைவரும்
நிம்மதியாக வாழ்வார்கள்
இப்போது விவேகானந்தர்
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏😍👌🤩💖💐🍊மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
அவரைத் தெரிந்தவர்கள் அவரைப் பத்ம விருதினுக்குப் பரிந்துரைக்கலாமே!
குறள் ; 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
உங்களை போன்ற நல்ல வர்கள் வாழ்க
ஐயா திரு. இலங்கை ஜெயராஜார், துனைக்கொண்டு, பரிமேலழகர் உரையினை படிக்க நான் என்ன தவம் செய்தேனோ? உரைவீச்சின் ஆழந்த சிந்தனை, அந்த இராமாயணம் குறிப்பு, வியக்க வைக்கிறது.
எமது பணிவின் வணக்கம்.
குறள் ; 20
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
ஐயா வான் சிறப்பு குறித்த தங்களது சிறப்புரை சுவாதி நட்சத்திரத்தில் விளைந்த நன்முத்து போன்று சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி. தங்களை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்
முத்து
அடுத்த பாகத்திற்க்காக காத்திருக்கிறோம்....நன்றி
25/09/22 வான் ( மழை) சிறப்பு குறித்து ஐயா அவர்கள் மூலம் பெருந்தொண்டாற்றி
25/09/22 ஐயா தாங்கள் வாயிலாக திருக்குறளின் அகரத்தின் சிறப்பும் கடவுளின் முக்குணதால் முவரையும் குணத்தால் பொருளையும் கல்வின் பயன் இறையை படித்தும் வானின்( மழை) உயிர் அமிர்தம் என்றும் வான் இன்றி உலகமும் அறமும் இல்லை என அறிகிறோம்
Namaskaram GuruJi Humble Pranams
Thank you for this perfect teachings with excellent explanations. Sincere Gratitude always
OM SIVA SIVA
உயர் வள்ளுவம் சிறப்பு
அருமையாக இருக்கிறது.ஐயாவுக்கு வணக்கம்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் உடைய மறுபிறப்பு ஐயா.பரிமேலழகர் இவருடைய வழி தோன்றலே தாங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வணக்கம்.
வாழ்வின் போதும் வாழ்வுக்குப் பின்னரும் வழிகாட்டும் வள்ளுவம்.
Very nice to hear.
மிக அருமையான உரை
1:39:20 பகவத்கீதை 3:11 ஒப்பிடுக
அதிகாரம் 2. வான்சிறப்பு
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
நன்றி ஐயா🙏🙏🙏
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
நீங்கள் எங்களுக்கு மழை 🌹
இரண்டு வரிகளில் இரத்தினச் சுருக்கமாக திருக்குறள்;நான்கு வரிகளில் முழுமையான பொழிப்புரை திருப்தியாக உணர்ந்து கொண்டோம் என இருமாந்த எமக்கு குறளின் ஒரு வரியை எமக்கு உணர்த்த ஒரு மணி நேரம்கூட போதாது என நச் என்று ஒரு கொட்டு. மனத்தின் வலி தாங்க இயலவில்லை. தமிழ் மொழி பிரசவித்த குழந்தைகள் எத்தனையோ..... தொட்டுக்கூட பார்க்கவோ பழகவோ முனையவில்லை. தேர்வுக்கு..... தேர்வு செய்தவை நீங்க. வெட்கி தலை குனிகிறோம் 70 வயதில். பயனில்லை. இருப்பினும் குரு தரும் அமிர்தத்தை தற்போது ஒரு துளியேனும் சுவைக்கும் பேறு அருளிய இறைக்கு தலை தாழ்த்தி வணங்குகிறோம். ஓம்.
மிக்க நன்றி ஐயா
இறையருளால் அறம் தனை அகம் சேர்ப்போம்.
அன்புடன்
Can anyone help me to suggest how I can get better Tamil dictionary for spiritual search of words
Tq
👣🙏 அருமை நன்றி ஐயா.
ஐய்யா குருவே வணக்கம். உங்கள் உரை சிறப்பு. மற்றும் அடுத்த 9,10,11,12,13,....... ........பாகங்கள் எங்கே? தயவு செய்து தாமதிக்காமல் தொடரட்டும். ஐய்யா இதனால் எல்லோருக்கும் பயனளிக்கும் இது திண்ணம்.இவர்களில் இவனும் ஒருவன் ஐய்யா. சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் நன்றி ⚘☇💥🔥🌏
அனைத்தும் உயர் வள்ளுவம் என்னும் பெயரில் 179 வரை வந்துள்ளன.
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
@1:27:20
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
@1:39:19
குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
@2:04:50
குறள் 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
@2:20:02
8:10 ------- Vaansirapu Explanation
குறள் : 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)
நன்றி ஐயா
21:15 -------(11)
2:09:00 ------- Avvaiyar
குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)
1:27:20 -------(17)
57:00 -------(15)
2:04:50 -------(19)
2:20:03 -------(20)
39:00 -------(12)
1:14:39 -------(16)
53:55 -------(14)
அருமை ஐயா
Yes, in those days, both Tamizh and English classes were conducted like this. One student should stand and read sentence by sentence and the teacher explaining every word took and taught in the entire class. Then there was no doubts arising Nd no necessity for any notes. So the relationship is called the teacher and the taught or the tutor and the taught only. Nowadays the relationship is only teacher and the student, and thy students should have separate tuition classes after school. Thendam, thendachilavu.. education lootings!!?
ஐயா உங்கள் அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம் இருளில் இருந்த எம்மை அறம் என்ற ஞான ஒளி எம் உள்ளத்தில் விதைத்தீர்கள்
அருமை அருமை
அருமை
Arumai...
Eilangai jaya raj eilangai vendra rasa and eilakiyathai vendra rasa ivar
1:29:34 mugandhu edukum ruclips.net/video/BNMwu6e6sZo/видео.html
அஃதாவது நன்றி ஐயா
What's there to dislike
Telling me reasons will be correct to dislike!!
1:39:20 -------(18)