கம்பன் கவி பேசும் கலெக்டர் - முனைவர் வீ. ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் | Music Drops

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 59

  • @bavanim3637
    @bavanim3637 Год назад +11

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்..... ஆச்சரியத்தோடு கவனித்தேன்... நீங்களெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்!! வளர்க தமிழ் புகழ்......

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 14 дней назад

    ஐயா வணக்கம். தங்களின் பேச்சாற்றல் மிக்க நன்று. தாங்கள் தூடியில் பணியாற்றும் போது வ.உ.சி. பற்றி பேசியது கண்டும், உங்களோடு 10 நிமிடம் நான் நெருக்கத்தில் பேசியது கண்டுமிக்க மகிழ்ச்சியடைகிறேன், வாழ்க வளமுடன், நலமுடன்.....❤❤❤❤

  • @natarajansrinivasan1
    @natarajansrinivasan1 Год назад +4

    மிக அருமையான இலக்கியப் பேச்சு.. இதயம் கனிந்த வாழ்த்துகள்

  • @balasubramanianperiaswamy8188
    @balasubramanianperiaswamy8188 Год назад

    Arumai.
    Arumai.
    Arumai.
    Congratulations collector sir.
    Fantastic speach.
    Very proud of you.
    Please continue your Tamil speech.
    Your speech remaining our Tamil kadal Mr.Nellaikannan Ayya.
    Thanks
    Thanks
    Thanks Sir.

  • @MuthuKumar-zt7qz
    @MuthuKumar-zt7qz Год назад

    மிகவும் அருமையான பேச்சு அய்யா உங்களின் நிர்வாகத்தின் கீழ் சில காலம் பணிபுரிந்தது எனது பாக்கியம் அய்யா வாழ்த்துக்கள் சா

  • @kuttykutty-z2e
    @kuttykutty-z2e 2 месяца назад

    மிக மிக சிறப்பு மிக்க தெள்ளத்தெளிவான பேச்சு... வாழ்த்துகள்........

  • @thirunavukkarasua881
    @thirunavukkarasua881 Год назад +2

    இன்தமிழ் உரை நிகழ்த்தி இனிய விழாவினை தொடங்கி வைத்த மற்றும் பலருக்கும் முன்னுதாரணமாக திகழும் ஆட்சியர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..... தங்களின் பேச்சை கேட்கும் காணொளி காணக்கிடைத்தது மகிழ்ச்சி

  • @krishnasamynatarajan2192
    @krishnasamynatarajan2192 2 месяца назад

    Classic speech on a classical and ancient Tamil literary work of Kamban. What an awesome speech amidst your busy beaurocratic work. People from RJPM and Viruthai district are gifted to have a elite collector in local language like Tamil.Born speaker with in depth knowledge in literary Tamil. 🎉🎉Hats off to this budding cabinet secetary of this country.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 Месяц назад

    இத்தனை நினைவாற்றல் வியக்க வைக்கிறது...

  • @Padmanaban.R-gj9df
    @Padmanaban.R-gj9df 8 дней назад

    ஐயா உங்கள் பேச்சு க்கு தலை வணங்கிறேன்

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez 7 месяцев назад +1

    மனம் நிறைந்த வாழ்த்துகள் மகனே. வாழ்க பல்லாண்டு. வாழ்க தமிழ் ❤❤❤

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 Месяц назад

    Hats off sir keep it up

  • @ganeshjayakumar979
    @ganeshjayakumar979 Год назад

    👌👌👌🙏🙏🙏🙏 -Jai Ganesh vpm

  • @PalaniDo
    @PalaniDo Год назад

    Nice information about kamban assets administration famous in tamil language that were listening in your super speech sir thank you

  • @bagyalakshmi7156
    @bagyalakshmi7156 Год назад +1

    💥அருமையான தமிழ் உரை 💥 தம்பி.நன்றி.🙏

  • @மா.சுரேஷ்.தமிழ்க்கட்டூர்

    விருதை மாவட்டத்தின் ஆட்சியரின் உரை நனி நன்று.

  • @kaviyadharsinibalamurugank7868
    @kaviyadharsinibalamurugank7868 Год назад +1

    மிக மிக அருமையாக பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். தமிழ் வாழ்க

  • @energyarasan9599
    @energyarasan9599 Месяц назад

    Superb collector sir

  • @poongothaim6724
    @poongothaim6724 Год назад

    மிக அருமையான சொல்லாற்றல் தங்களுக்கு .மிக ஆற்றல் மிக்க ஆட்சி தலைவர் கிடைத்த விருதுநகர் மாவட்டமக்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 Год назад

    Excellent Speech sir

  • @அப்பைகருங்குருவி

    கம்பன் கவிநயத்தை
    கரும்புச் சாறாக பிழிந்து
    செவிக்கி மாற்றி
    இனியதமிழாய்,
    என்றும்
    இளைய தமிழை
    தந்த
    இளையவர்,
    இனியவர்
    எங்கள் மாவட்ட ஆட்சியருக்கு
    நன்றி!. நன்றி!. நன்றி.
    👌👏🌹🙏

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 3 месяца назад

    Collector's speech superb great

  • @MaaSeKu
    @MaaSeKu 3 месяца назад

    🎉அருமை! அற்புதம்!!🎉

  • @RajKumar-xd2mt
    @RajKumar-xd2mt 2 месяца назад

    அருமையான கருத்துக்கள் சார்

  • @TMurugan-k7e
    @TMurugan-k7e 3 месяца назад

    God bless you

  • @GuruVideoAC
    @GuruVideoAC Год назад +3

    4:20
    ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
    பூசை முற்றவும் நக்குபு புக்கென
    ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
    காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ.
    8:00 மூலத்தை மெல்ல மெல்ல காப்பியா அடித்தான் அள்ள அள்ள அதைக்கொண்டு காப்பியம் படைத்தான்
    வான்மீகம் தந்தவற்றை வன்டமிழில் தான் வாங்கி ஆன்மிகம் தளும்பும் ஒரு அறநூலாய் ஆக்கிவைத்தான்
    8:25 ஆற்றுப் பெருக்கோ, உடைப்பெடுத்தே ஓடிவரும் ஊற்றுப் பெருக்கோ?
    சீற்றமுள காற்றுப்பெருக்கோ? கவிக்கம்மா யாது உனது பாட்டுப் பெருக்கு பகர்
    9:51 வைரமுத்து சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கிவைத்த கவிப்புலவன் வைத்தான்
    10:46
    வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
    நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
    தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
    வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.
    11:29
    மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
    காதலர்தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
    தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்
    பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப்புக்கான்.
    12:26
    வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்; நெடுவயிரத் தோளான்
    நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்;
    வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், மிதிலை வந்த,
    சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்.
    13:51
    பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
    செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
    அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
    வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
    14:31
    'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
    இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
    கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
    உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'!
    14:45
    கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு /தேசிகவிநாயகம் பிள்ளை
    15:16 தோள் கண்டார். தோளே கண்டார்.
    தொடு கழல் கமலம் அன்ன
    தாள் கண்டார். தாளே கண்டார்;
    தடக் கை கண்டாரும். அஃதே;
    வாள் கொண்ட கண்ணார் யாரே.
    வடிவினை முடியக்கண்டார்?-
    ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
    உருவு கண்டாரை ஒத்தார்.

    16:30
    வெய்யோன் ஒளி தன் மேனியின்
    விரி சோதியின் மறைய,
    பொய்யே எனும் இடையாளொடும்,
    இளையானொடும் போனான் -
    ‘மையோ, மரகதமோ, மறி
    கடலோ, மழை முகிலோ,
    ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
    அழியா அழகு உடையான்.

    17:20 'நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
    தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
    எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
    அந்தோ! இனி, வாய்மைக்கு ஆள் உளரே மற்று?' என்றான்.
    18:59
    நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
    அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
    கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர்
    மலை கிடந்தது போல, வணங்கினான்.
    19:42
    'ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச்
    சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
    வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
    போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே?
    20:05
    'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
    கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
    ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
    யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான்.
    20:56
    வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி
    நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
    பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை,
    'நன்று' என, நாயக விடுதி; நன்றுஅரோ.
    21:53
    "மூக்கு இலா முகம்" என்று முனிவர்களும் அமரர்களும்
    நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
    நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் கருங் கடலுள்
    போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்' என்றான்.
    23:04
    'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
    போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
    தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
    கார்க் கோல மேனியானைக் கூடுதி, கடிதின் ஏகி,
    23:20
    'தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்
    வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,
    உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,
    தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்?
    23:40
    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாகிற்பின் சாக்காடு
    இரந்துகோள் தக்கது உடைத்து / திருக்குறள்
    25:50
    வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
    எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்
    இடன் நாடி ழைத்த வாறே?
    'கள் இருக்கும் மலர்க்கூந்தல்' சானகியை
    மனச்சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
    தடவிதோ ஒருவன் வாளி !

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  Год назад

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @chellathaiselvaraj662
    @chellathaiselvaraj662 Год назад

    நன்றிகள் அய்யா.மிக அற்புதமானது

  • @renubala6592
    @renubala6592 Год назад +1

    மிக மிக அருமை

  • @mohananvadivel851
    @mohananvadivel851 8 месяцев назад

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @PandiDurai-fy9ik
    @PandiDurai-fy9ik 3 месяца назад

    அரூமை தம்பி

  • @arivolimurugan9497
    @arivolimurugan9497 Год назад +1

    சிறப்பு.
    மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தம்பி.

  • @sivagnanasundariarunachala7672

    மிகவும் அருமையான பேச்சு 💐💐💐🙏🙏

  • @soundararajanparamasivam4123
    @soundararajanparamasivam4123 Год назад

    Very fantastic speech in Tamil sir.

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 3 месяца назад

    Ayya super ayya

  • @thilagavathiprabhakaran472
    @thilagavathiprabhakaran472 Год назад +1

    அருமையான சொல்லாற்றல் தங்களுக்கு... 🙏🎉

  • @apothiraj2276
    @apothiraj2276 Год назад

    மிகச்சிறந்த உரை

  • @subamarimuthu1485
    @subamarimuthu1485 Год назад

    பெருமை மிகு
    வாழ்த்துகள் தம்பி

  • @subbulakshmitn
    @subbulakshmitn Год назад

    வணக்கம் மாவட்ட ஆட்சியர் அவர்களே
    விதியின் பிழை அன்று
    இறைவன் அருள் ஐயா

  • @rajasekarant6201
    @rajasekarant6201 4 месяца назад

    SooPer sir your Tamil arvam bl

  • @muthukumari6673
    @muthukumari6673 3 месяца назад +1

    Mk 🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌🙏

  • @deepashwina
    @deepashwina Год назад +1

    இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே...

  • @KurinjiMullai-hj9oh
    @KurinjiMullai-hj9oh Год назад

    உங்களின் பேச்சு மிக மிக இனிமை இன்னும் கொஞ்சம் மெதுவாகப் பேசினால் குறிப்பு எடுத்துக் கொள்ள ஏதுவாக அமையும்

  • @Vetrivelmuruga23
    @Vetrivelmuruga23 Год назад +2

    சுவைமிகு தமிழை
    சுகமாக பேசி
    அவையினர் அகம் மகிழ செவிமடுத்தவர் சிந்தை குளிர
    கம்ப சூத்திரம் எனும் சாமானியர்க்கு விளங்கா பொருளை சீர்படுத்தி சிற்றறிவுக்கு எட்டும் வகையில் அழகு உரைசெய்த ஆட்சியருக்கு வணக்கங்கள்.

  • @ArulanandamAnthonypillai
    @ArulanandamAnthonypillai 3 месяца назад

    I am getting more and more interested to attend these pattimantram. I see with shame that use of English terms in the middy of the speech to express certain thoughts, show that we are not having Tamil expressions to fully convey out thoughts. It is good to Avon English terms

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 Год назад

    அருமை சார்

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 5 месяцев назад

    Sir great

  • @vijayalakshmiperumalraja9203
    @vijayalakshmiperumalraja9203 Год назад

    Wonderful sir

  • @sudhac3913
    @sudhac3913 Год назад

    Classic speech on a Classical work

  • @arumugamv8718
    @arumugamv8718 Год назад

    அருமை

  • @perumalramakrishnan7067
    @perumalramakrishnan7067 Год назад +1

    தூத்துக்குடி மாநகராட்சி உங்களை இழந்தது பேரிழப்பு சார்

  • @swathikar3540
    @swathikar3540 Год назад

    பர்வீன் சுல்தானா அம்மா பேசிய காணொளி பதிவிறக்கம் செய்யுங்கள் 🙏

  • @LSMaths
    @LSMaths Год назад +1

    தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ!

    • @vimalasivasubramani2414
      @vimalasivasubramani2414 Год назад

      ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ...

  • @ganeshkumar2282
    @ganeshkumar2282 Год назад +1

    தலைசிறந்த சொற்பொழிவு

  • @pitchaispk7261
    @pitchaispk7261 Месяц назад

    நல்லது.

  • @pitchaispk7261
    @pitchaispk7261 Месяц назад

    நல்லப்பேச்சு.