How the Digestive System Works ? | Tamil | Niruban Talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Any Copyright issue,
    contact us: onlychakra@gmail.com
    Whatsapp : +91 9080355158
    Copyright Disclaimer :
    under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

Комментарии • 3,9 тыс.

  • @kalaivani5698
    @kalaivani5698 2 года назад +5312

    என்ன தான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய் மொழியாகிய தமிழில் விளக்கத்தை கேட்கும் பொழுது மேலும் அதிகமாக விளங்கி கொள்கிறோம். மிக்க நன்றி அருமையான விளக்கம் 🙏🏽

    • @ilayaperumal9177
      @ilayaperumal9177 2 года назад +28

      💪

    • @santhanalakshmi4475
      @santhanalakshmi4475 2 года назад +9

      @@ilayaperumal9177 7

    • @shankar837640
      @shankar837640 2 года назад +20

      Ipadiye pesi pesi than oru vela soothuku ration la free rice kedaikuma nu line la nikurom :( bro.
      Ipadi sonnavanga pasangalam vote vangitu periya posting la irukanunga, avanga pasangalam foreign la padikuranga.
      Namba ipadiye pesitu iruka vendithan.

    • @Kumarell
      @Kumarell 2 года назад +47

      தாய்மொழியின் சிறப்பு

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 2 года назад +28

      Teachers ivalo explanation na school ku solli kodutha easy ya puriyum nanba

  • @mayilvaganan9890
    @mayilvaganan9890 2 года назад +62

    முதலில் வீடியோ பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் படிப்பறிவு இல்லாதவன் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழில் அழகாக கூறிய விதம் மிகவும் அருமை இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு எத்தனை பேருக்கு மெடிக்கல் ஐ பற்றி தெரியும் என்பது தெரியாது இருந்தபோதிலும் நீங்கள் சொன்ன விதமும் காட்டிய விதமும் மிகவும் பிரமாதம் பாராட்டுக்கள்

  • @rasalraj3192
    @rasalraj3192 4 месяца назад +19

    படிக்காத பாமரனுக்குக்கூட விளங்கும் படி தமிழில் விளக்கினார்கள் வாழ்த்துக்கள்.

  • @abdulbros271
    @abdulbros271 Год назад +23

    மாஷா அல்லாஹ்..
    இறைவன் படைப்பு எவ்வளவு பிரமிப்பானது

    • @charless3440
      @charless3440 6 месяцев назад +1

      அப்போ மத்த தெய்வம் எல்லாம் boomer ah இருக்காத நண்பா அனைத்து மதமும் அனைத்து மக்களும் சமம் ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @sathikbatcha9111
    @sathikbatcha9111 2 года назад +17

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பயனுள்ள பதிவு பார்த்தேன் அதனால் ஓர் 👍லை க்கும் போட்டேன் நன்றி வணக்கம்

  • @godwinm5869
    @godwinm5869 Год назад +40

    இவ்வளவு அழகா மனிதனை உண்டாக்கி.. அவனுக்குள்ள இருக்கிற எல்லாத்தையும் பார்க்கும்போது எவ்வளவு ஆச்சரியமா இருக்கு... மனிதன் என்பவன் தானாய் உண்டானவன் அல்ல. தேவன் மனிதனை படைத்தார் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் இல்லை

    • @Josparkle
      @Josparkle 2 месяца назад +1

      👏nice bro

  • @vigneshvicky710
    @vigneshvicky710 2 года назад +16

    எதாவது ஒரு வீடியோ பார்க்கும்போது எப்போ முடியும்னு தோணும் ஆனா உங்களோட இந்த வீடியோ ஏன் முடிந்தது என்று தோணுது ப்ரோ, செம்ம கிளீயர் explanation👌👌👌

  • @tlvreality9200
    @tlvreality9200 2 года назад +11

    உணவு உண்ண நபி வழி
    1. உணவை தரையில் உட்கார்ந்து உன்ன வேண்டும்
    2. கை விரல்களால் சாப்பிட வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் விரல்களை நன்கு சூப்ப வேண்டும்
    3. தண்ணீர் சிறு சிறு மிடராக குடிக்க வேண்டும் டம்ளரில் வாய் வைத்து குடிக்க வேண்டும் அந்நாந்து குடிக்க கூடாது
    4. வயிற்றை மூன்று பகுதியக பிரிக்க வேண்டும் ஒன்று உணவு இரண்டாவது தண்ணீர் மூன்றாவது காற்று
    5. உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிப்பது அல்லது இடையிடையில் குடிப்பது நன்று உணவு உண்டு முடித்த பின் குறைந்தது 15 நிமிடங்கள் தண்ணீர் அருந்தாமல் இருக்க வேண்டும்
    இவையெல்லாம் 1400 வருடங்களுக்கு முன் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் கூறிய அறிவுரைகள்

  • @thalaivararmykmi8510
    @thalaivararmykmi8510 11 месяцев назад +14

    இந்த வீடியோவில் நீங்கள் துவக்கத்தில் சொல்லுவது போல அசிங்கமானது அருவருப்பானது எதுவுமே கிடையாது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn Год назад +16

    அல்ஹம்துலில்லா .இறைவன் படைப்பில் மிக சிறந்த படைப்பு மனித படைப்பு.மனிதன் உடல் தான் அதிசயம்.

  • @invisible6172
    @invisible6172 Год назад +13

    நான் பிரமிக்க தக்க அதிசயமாய் உண்டாக்கப்படதால் உம்மை துதிப்பேன் ஆமென்

  • @sripriya-wn7fl
    @sripriya-wn7fl Год назад +8

    இறைவன் எவ்வளவு பெரிய அரிவாளி 😊😊😊😊😊😊

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm 2 года назад +9

    விளக்கம் அளித்த அதுதமிழில்ஆகாஎன்ன அற்புதம்இதுபோலபயனுள்ளதகவல்தரமேலும்

  • @businessenquirytv
    @businessenquirytv Год назад +11

    அய்யோடா என்ன ஒரு பேச்சு திறமை நீங்க மருத்துவரா

  • @aravindhswamy4579
    @aravindhswamy4579 21 день назад +5

    அற்புதமான தொழில் சாலை😂

  • @prasannavenkatesankbbps6525
    @prasannavenkatesankbbps6525 Год назад +12

    ஒரு அறிவியல் பாடத்தை தமிழ் தமிழ் மீடியம் இங்கிலீஷ் மீடியம் பசங்களுக்கு புரியக்கூடிய அளவுக்கு அருமையா நடத்தி இருக்கீங்க சூப்பர்

  • @chuttyachu...189
    @chuttyachu...189 2 года назад +11

    ரொம்ப நல்ல விளக்கம் சகோதரா...ஆசிரியர் பணிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் எடுத்தால் மிக நன்று... வாழ்த்துக்கள்

  • @jebamary7278
    @jebamary7278 4 месяца назад +7

    கடவுள் மிகச்சிறந்த படைப்பாளி, மிகவும் தெளிவான விளக்கம் நன்றிகள் சகோ

  • @ammuguna2364
    @ammuguna2364 2 года назад +12

    அருமையான விளக்கம்.... இனிய தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

  • @jahabarsathik552
    @jahabarsathik552 2 года назад +12

    படைத்தவனுக்கு அணைத்துப் புகழும் உரித்தானது

  • @kavin-qd6xi
    @kavin-qd6xi Год назад +6

    மருத்துவ ஆங்கில வார்த்தைகளை நீக்கி தமிழில் சொன்னால் நன்றாக புரியும்.

  • @ammuammu-nn3qc
    @ammuammu-nn3qc Год назад +8

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆக உள்ளது..இது மாதிரி பல நல்ல விஷயங்களை ... share பன்னுங்க sir..👍👍

  • @G.Sundar.Achari
    @G.Sundar.Achari Год назад +8

    கடவுளை நாம் பல தடவை திட்டி இருப்போம் எனக்கு ஒன்றுமே செய்ய வில்லையே என்று.
    இதை விட வேறென்ன வேண்டும் 🙏🙏

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan8861 Год назад +5

    இன்றைய கால கட்டத்திற்கு தேவையான பதிவு...மிக்க நன்றி 🙏🙏

  • @maingate7417
    @maingate7417 2 года назад +10

    பள்ளி மாணவர்களுக்கு தேவையான வீடியோ!ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதைவிட சிறப்பானது !🌹

  • @AbdulKareem-ug8xh
    @AbdulKareem-ug8xh Год назад +17

    இவ்வளவு அற்புதமா படைத்த அல்லாஹ் மிகப் பெரியவன்

    • @LatheesSanjimma
      @LatheesSanjimma 7 месяцев назад

      போடா பன்னி

    • @AHUKAM
      @AHUKAM 4 месяца назад

      Yeiiii😡😤​@@LatheesSanjimma enna ithu habit

  • @videoanand
    @videoanand 11 месяцев назад +8

    இது வரைக்கும் இப்படி எளிமையாக எவரும் எந்த வீடியோலயும் விளக்கியது இல்லை. வாழ்த்துக்கள் 👏👏👏

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 2 года назад +9

    உடம்பு லைபரெரி மாதிரிஅமைதியாஇருக்கனும் எரிச்சலும் கரைச்சலும் ஆகாது அருமையான காணொலி

  • @ashraffahamed9414
    @ashraffahamed9414 Год назад +9

    சுப்ஹானல்லாஹ்.....
    படைத்தவனின் வல்லமையை போற்றுவோம்

  • @Velvoom
    @Velvoom 10 месяцев назад +5

    அது என்ன அளவுக்கு அதிகமாக மது கொடுக்காதீர்கள் என்று சொல்கிறீர்...
    மதுவே குடிக்க கூடாது என்று சொல்லுங்கள்...

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 года назад +9

    இதுவரை என்னுடைய வகுப்பில் இவ்வளவு ஆழமாக நடத்தவும் இல்லை நானும் கவனிக்கவும் இல்லை ஆனால் நீங்க ஒரு பேராசிரியருக்கும் மேல அருமையான தமிழ் விளக்கத்துடன் சொல்லிரீக்கீங்க நீங்க நாளைக்கு நம்ம ஊரு பசங்களுக்கு டாக்டர் ஆகுவதற்கு வழிவகை செய்யுங்க 👌👍🙏

  • @Pravinkumar-lp1bi
    @Pravinkumar-lp1bi 2 года назад +11

    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இந்தப் பதிவை பார்க்கவும்.The God created the world with his word.

  • @harish-u1y
    @harish-u1y 11 месяцев назад +8

    வணக்கம். தம்பி
    இந்த உடல் நலம் பற்றிய
    மிகவும் முக்கியமான
    விசயங்களை மிக தெளிவாக பதிவு செய்து இருக்கீங்க
    உங்கள் குரல் வளமும்
    புரியாதவர்கள் கூட
    புரிந்து கொண்டு
    செயல் படும் அளவுக்கு
    சொல்லிய விதத்தில் உள்ள
    பணிவான தன்மை
    இது எல்லாவற்றையும் விட
    ஒவ்வொரு மனிதனுக்கும்
    குழந்தைகள் முதல்
    பெரியவர்கள் வரை
    முக்கிய மாக பார்த்து
    பயன் அடைய வேண்டிய
    பொக்கிஷம்.
    நன்றி. நன்றி நன்றி

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 7 месяцев назад +1

      வணக்கம் வாழ்க வளமுடன் ‌‌ 👌👌👍🙏🙏அருமையான விளக்கம் அழகான தமிழில் விளக்கிய விதம் அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @calebramesh4236
    @calebramesh4236 Год назад +23

    கடவுள் எப்படியா பட்ட நம் உடலில் பிராசஸை வைத்துள்ளார் பாருங்கள், கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம், இதை அருமையாக தெளிவுபடுத்தின உங்களுக்கு நன்றியையும் வாழ்த்துதலையும் தெரிவிக்கிறேன்🙏🙏

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 Год назад +7

    நல்ல பதிவு இன்றய வாழ்வில் ஆரோக்கியமாக வாழ எடுத்து கொள்வோம் இந்த பதிவை சிறப்பாக கூறிஉள்ளார் நண்பர் 💐💐💐💐🙏

  • @hameedabdul8062
    @hameedabdul8062 Год назад +10

    மனிதன் உடம்பில் இறைவன் எப்படி படைத்துள்ளார்.நாம் என்றைக்காவது இதற்க்காக என்றைக்காவது இறைவனுக்கு நன்றி சொல்லி இருக்கிறோம்மா மிக மிக குறைவு

  • @sankarbala4015
    @sankarbala4015 2 года назад +10

    ஒரு மனிதனுக்கு தேவையான விஷயத்தை மிக தெளிவாக சொன்னதற்கு கோடி நன்றிகள். ஆரோக்கிய வாழ்க்கை உங்கள் வழியில்... 🙏🙏🙏

  • @rose-pj7pc
    @rose-pj7pc Год назад +11

    கடவுளின் படைப்பில் எவ்வளோ அதிசயங்கள்

  • @aasaithampi2094
    @aasaithampi2094 Год назад +5

    மிக தெளிவான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அண்னா

  • @vijayakanth8565
    @vijayakanth8565 2 года назад +8

    மிக்க நன்றி நான் 10 வருடம் RUclipsல் பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் உருப்படியான வீடியோ இது ஒன்று மட்டும் தான் தாங்களுக்கு மீண்டும் மிக்க நன்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏 அனைவருக்கும் பகிர்கின்றேன்

  • @vasanthir9685
    @vasanthir9685 2 года назад +12

    தமிழும், தமிழ் உச்சரிப்பும், அதை விளக்கி சொன்ன விதமும் அருமை 👌

  • @sureshsuresh-jo3ok
    @sureshsuresh-jo3ok 7 месяцев назад +5

    நல்ல விளக்கம்., அருமை.
    அப்படியே sugar பற்றிய விளக்கத்தையும் பதிவிடவும்.😊

  • @balanandanm5408
    @balanandanm5408 2 года назад +169

    ஆகா அருமையான பதிவு நன்றி 👍 தாங்கள் சொன்ன தகவல்களைத் தொகுத்து 6 முதல் 10 மற்றும் வகுப்புப் பாடப்பிரிவில் தொடர்ச்சியாக ஆரோக்கிய இயல் என்னும் பாடப்பிரிவாக நமது வாழும் தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்

    • @muthus6719
      @muthus6719 2 года назад +4

      yes correct

    • @thamaraiselvithamaraiselvi4439
      @thamaraiselvithamaraiselvi4439 2 года назад

      🙏🙏🙏

    • @thamaraiselvithamaraiselvi4439
      @thamaraiselvithamaraiselvi4439 2 года назад

      Super bro

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 года назад +3

      நாமும் நல்லா இருக்கனும் நம் தலைமுறையும் நல்லா இருக்கனும் என்று நினைத்ததும் அதை பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று எண்ணி பதிவு போட்டநீங்க உண்மையிலேயே சமுதாய அக்கறை கொண்ட மனிதர் சகோ😊🙌

    • @chitrachelladurai7752
      @chitrachelladurai7752 2 года назад

      @@muthus6719 hi

  • @DandapaniDkumar
    @DandapaniDkumar 2 года назад +10

    தற்யோதய. சூழலுக்கு மிக மிக. அவசியமான. பதிவு இது இதே போல் உடலின் பிற இயக்கங்கள் பற்றியும் மூட்டு ஜவ்வுகள் பற்றியும் விளக்கமான. வீடியோக்களை பதிவிடுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @kokiyuva312
    @kokiyuva312 Год назад +5

    உங்க தெளிவான பேச்சிக்கே இந்த video முழுக்க பாத்துட்டேன் அண்ணா நன்றி

  • @veeramani3906
    @veeramani3906 2 года назад +5

    👍👍 அருமையான தகவல் நான் எவ்வளவு நாள் யூடீயுப் சேனல் பார்த்துயிருந்தாலும் ஒரு பயனுள்ள தகவல் இந்த வீடியோ ரொம்பவும் பிடித்திருந்தது நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்லதொரு தகவல் வெளியிடுங்கள்

  • @s.mahimasatheeshkumar9380
    @s.mahimasatheeshkumar9380 Год назад +7

    வாழ்க வளமுடன் சிறப்பு நண்பரே பயனுள்ள தகவல்கள்
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
    உங்கள் வார்த்தை ஜாலங்கள் சூப்பர் அனைவருக்கும் புரியும்படி உள்ளது

  • @zeenathwaheedha6092
    @zeenathwaheedha6092 Год назад +5

    நான் ஷேர் பண்ணிட்டேன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @ifammohammed7809
    @ifammohammed7809 Год назад +7

    لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
    திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
    (அல்குர்ஆன் : 95:4)

  • @jayanthijayanthi3036
    @jayanthijayanthi3036 2 года назад +7

    தமிழில் பேசியதற்கு மிக மிக நன்றி, அருமையா சொன்னிங்க

  • @bilalahmedbilali1247
    @bilalahmedbilali1247 Год назад +7

    இறைவனின் அற்புதமான படைப்பு

  • @narasimhanm1208
    @narasimhanm1208 2 года назад +7

    எது வரை தெரிந்தும் தெரியாமலும் இருந்த தகவல் மிகவும் சிறப்பான முறையில் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே

  • @welcomeday6177
    @welcomeday6177 Год назад +12

    சுபஹானல்லாஹ் அல்லா மிக பெரியவன்

  • @balajia5756
    @balajia5756 3 месяца назад +6

    நாம் ஆழ்ந்து உறங்கும் போது எந்த மொழியில் கனவு வருகிறதோ அதுவே உன் தாய் மொழி
    அதுவே உன் சிந்தனை மொழி .
    இந்த காணொளியை தமிழில் பதிவு செய்த இந்த வலையொலி ஊடகத்திற்கு மிக்க நன்றி .

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 года назад +10

    மிகவும் அருமையான விளக்கம் குடலுக்குள்ளேயே ஒரு சுற்றுலா சென்ற திருப்தியடைந்தேன். ஓ, என்ன ஒரு பிரமிப்பான அமைப்பு. எல்லாம் இறைவனின் உருவாக்கம். ஆச்சரியமளிக்கிறது. நான் ஒருவன்தான் என நான் நான் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமக்கு உள்ளேயே பலபேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை இறைவன் உணர்த்துகிறான். நன்றி!

  • @christaljaya6739
    @christaljaya6739 2 года назад +12

    மொத்தத்தில ஒரு தொழிற்சாலையே உள்ள உள்ளது

  • @faizurrahmank6617
    @faizurrahmank6617 Год назад +4

    எல்லா புகழும் இறைவனுக்கே! அருமையான தகவல்.

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Год назад +7

    இந்த பதிவு பல பேரின் ரூல்ஸ் இல்லா வாழ்க்கையை சரிப்படுத்தும்.

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 Год назад +10

    பிரமாதமான விளக்கம். சிறு வயதில் படித்த படிப்பின் படைப்புகள் இவ்வளவு அழகாக விளக்கம் தந்துள்ளது பாராட்டுக்குரியது. இதற்கெல்லாம் யாராவது கிலாஸ்ஸா எடுத்தார்கள். அதனது வேலைகளை திறம்பட அற்புதமாக செய்து முடிக்கிறது. கடவுளின் படைப்பில் எத்தனை எத்தனை அதிசயங்கள். இந்த வீடியோ மூலம் பார்க்கும்போது வியப்பாக உள்ளது.

    • @ifammohammed7809
      @ifammohammed7809 Год назад

      لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
      திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
      (அல்குர்ஆன் : 95:4)

  • @vellorethiruvengadambhaske953
    @vellorethiruvengadambhaske953 Год назад +6

    Great sharing for every human. good food proper digestion helps healthy life to everyone. Thanks Brother 🎉🎉

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 года назад +5

    இப்பொழுது உள்ள அவசர சமுதாயத்திற்கு தேவையான ஒரு வீடியோ வாழ்த்துக்கள்.. இலங்கையில் இருந்து

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 Год назад +6

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே

  • @sekarsekar2507
    @sekarsekar2507 Год назад +4

    வித்தியாசமான பதிவு.
    இப்படிப்பட்ட பதிவை முதல் முறையாக பார்க்கிறேன்
    அருமையான விளக்கம்.
    நன்றி.

  • @abdulkather9655
    @abdulkather9655 2 года назад +8

    இறைவன் மிக பெயரியவன்

    • @billa7595
      @billa7595 2 года назад

      அவங்களுக்கு பசிலா எடுக்காம 😶

  • @ManiKandan-hx7lj
    @ManiKandan-hx7lj 2 года назад +8

    நொறுங்கத் தின்றால் நூறு வயது

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 Год назад +4

    தம்பி,
    வாழ்த்துகளும்
    ஆசிகளும் மா...
    இறைவன் மிகப் பெரியவன்
    எத்துனையோ
    ஆளுமைகளை
    இந்த உடம்புக்குள்
    வடிவமைத்து இருக்கிறான்..
    இவ்வளவு நாளாக
    இதனை என் மனம்
    தேடியது..
    எனக்கு அவ்வளவு
    சந்தோசம்..
    இந்த நாள் இனிய நாள்..
    அனைவருக்கும்...

  • @dr.s.c.a.k1789
    @dr.s.c.a.k1789 2 года назад +7

    உங்க பேச்சு தெளிவா கேட்பதற்கு இனிமையா இருக்கு சகோ 👌☺️

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Год назад +6

    அருமையான பதிவு நன்றி தோழரே 🙂

  • @msaravananmsaravanan8874
    @msaravananmsaravanan8874 Год назад +4

    10 நிமிஷத்துல எவ்வளவு மெசேஜ் சொல்லிட்டீங்க சார்

  • @mahesh3733
    @mahesh3733 2 года назад +5

    சாப்புடுரதுல இவ்வுல விஷசயம் இருக்குனு, இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்...இது மாதிரி நிறைய Video போடுங்க Sir ...tq👌🙏👍

  • @manokar8796
    @manokar8796 2 года назад +8

    அருமையான விளக்கம் எல்லோரும் இதை அடுத்தடுத்து பகிர்ந்தால் எல்லோரும் இந்த பலனை தெரிந்து கொள்வார்கள் இப் பதிவை பகிர்ந்தவறுக்கு நன்றிகள் பல

  • @kingkishok7952
    @kingkishok7952 Год назад +5

    இந்த வாழ்க்கை இயற்கை கொடுத்த அழகான கொடை

  • @aathieasssravaran500
    @aathieasssravaran500 Год назад +7

    அருமை யான விளக்கம் அய்யா இனி நல்லா மென்று சாப்படுகிறேன்

  • @ansariansari9653
    @ansariansari9653 Год назад +7

    ஆற்றல்மிக்க.இறைவன்செயல்☝️☝️☝️.

  • @SelviAnandan-u9y
    @SelviAnandan-u9y 2 месяца назад +4

    விளக்கமாக சொன்ன அதற்கு நன்றி.வாழ்க பால்லாண்டுவாழ்க.

  • @7gkarthikeyan
    @7gkarthikeyan Год назад +5

    இந்த உலகில் மிக சிறந்த இயந்திரம் மனிதனின் உடல் உறுப்புகள்...

  • @vivekev9407
    @vivekev9407 Год назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abushaheed875
    @abushaheed875 Год назад +5

    இங்குதான் நாம் இறைவனை காண்கின்றோம்.

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 Год назад +5

    👌படிக்கும் மாணவர்களுக்கு இது போல் போடுங்கள்.மற்ற உறுப்புகளின் செயல்களை.நன்றி

  • @anbumariyanathan30
    @anbumariyanathan30 Год назад +9

    தமிழில் எந்த பதிவு எடுத்தாலும் அது சிறப்பாகவே இருக்கும்.
    இந்த பதிவிற்கு நன்றி.

  • @issaczion903
    @issaczion903 Год назад +4

    Wonderful அருமையான ஓர் பதிவு. மிகவும் பிரயோஜனமான ஓர் பதிவு சகோ.

  • @krishnand3627
    @krishnand3627 2 года назад +6

    ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்திகளை படக்காட்சியோடு விளக்கிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் விளக்கத்தின் மூலம் மக்கள் உணவுகளை உரிய முறைப்படி உண்ணுவார்கள். இப்பதிவின் மூலம் நமது உடலமைப்பு எப்படிப்பட்டது உடலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
    உங்களுக்கு மெத்த நன்றி உரித்தாகுக.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @fahathfahath8406
    @fahathfahath8406 Год назад +6

    அல்லாஹ் துய்மயானவன் நம் உடம்பில் எவ்வளவு அதிசயம்

  • @christirajan6019
    @christirajan6019 9 месяцев назад +4

    மிகவும் விளக்கமாக எடுத்து கூறியதற்கு நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @savithrim946
    @savithrim946 Год назад +5

    அருமை! அருமை! மிக பயனுள்ள அருமையான பதிவு. நன்றி தம்பி. 🙂👌

  • @sangeethakaruppasamykarupp3951
    @sangeethakaruppasamykarupp3951 2 года назад +7

    படிக்க தெரியாதவர்களுக்கும் எளிதில் புரியும் படி நன்றாக விளக்கம் அளித்துள்ளீர். நன்றி

  • @vp487
    @vp487 3 месяца назад +4

    கர்ப்பமாக இருக்கும் போது இது மாறுபடும்..... அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க pls❤❤

  • @prasannavenkatesankbbps6525
    @prasannavenkatesankbbps6525 Год назад +5

    ரொம்ப ரொம்ப அருமையா எக்ஸ்பிளைன் பண்ணுங்க ப்ரோ சூப்பர்

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Год назад +7

    அப்பப்பா ரொம்ப நல்ல விளக்கம்

  • @ranadevetheekkathir3629
    @ranadevetheekkathir3629 Год назад +4

    நல்ல தகவல் நன்றி இதுபோன்ற பல்வேறு தகவல்கள் இன்னும் அனுப்புங்கள்

  • @Ansarismindvoice
    @Ansarismindvoice Год назад +6

    இறைவன் மிகப் பெரியவன் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி அமைச்சு இருக்காங்க பாத்திங்களா

  • @mr.seakillers4632
    @mr.seakillers4632 2 года назад +7

    நொறுங்க தின்றாள் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் ❤️❤️❤️❤️

  • @MuthuKumar-os5hb
    @MuthuKumar-os5hb Год назад +5

    நீங்கள் சொல்வது சரிதான்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +5

    கடவுளின் படைப்பு எவ்வளவு அற்புதமாக உள்ளது 👍👍👍👍👍🙏

  • @devaraj4926
    @devaraj4926 2 года назад +6

    நொருங்க தின்றால் நூறு வயது என்ற சொல்லுக்கு இந்த வீடியோ தொகுப்பு ஒரு சாட்சி

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db Месяц назад +2

    மிகத் தெளிவான விளக்கம்..
    உடலின் மொழி புரிந்து நடந்து கொண்டால் இந்த உலகில்
    அனைவரும் ஆரோக்கியமானவர்களே..
    இது போன்ற விழிப்புணர்வு இல்லாத
    அறியாமை மக்கள் தான் நோய் நொடிகளோடு ஆயுள் முழுவதும் மருத்துவரையே நாடுகிறார்கள்..

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 года назад +12

    அல்லாஹ்வின் படைப்பின் மகிமையே மகிமை.
    சுப்ஹானல்லாஹ்

  • @thayalinithayalini
    @thayalinithayalini Год назад +4

    சூப்பர் வீடியோ அண்ணா இதே போல நாங்களும் பின்பற்றுவோம் இதே மாதிரி வீடியோ இருந்தா அனுப்புங்க

  • @parthasarathy663
    @parthasarathy663 Год назад +4

    நம் உடம்பின் செயல்பாடே ஒரு ஆச்சரியம் தான்

  • @childartsandwriting2086
    @childartsandwriting2086 Год назад +6

    இதைப் பார்த்தாவது குடிப்பவர்கள் குடிக்காமல் இருக்கட்டும் புகைப்பிடிப்பவர்கள் புகை பிடிக்காமல் இருக்கட்டும் மிக்க நன்றி அன்பரே