1983-ம் ஆண்டு இளையராஜா பிக்சர்ஸிற்காக ஜீவா இளையராஜா தயாரிப்பில் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர்கள் பாலசந்திரன், அஸ்வினி, கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், முரளிமோகன், கெளரிசங்கர், VK. ராஜேந்திரன், வாசந்தி, கிழவி நல்லம்மாள், செந்தில், பேபி ஷாலினி, மாஸ்டர் ரிச்சர்ட்ஸ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "ஆனந்தக் கும்மி". இப்படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் இந்தப் பாடல்வரிகள்! "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா" கவிஞர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனையில் கருவாகி உருவான கதை, திரைக்கதைக்கு ஏற்ப ஜனித்த பாடல் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வைக்குள் ஐக்கியமாகியதின் வெளிப்பாடு தான் இந்தப் பாடல்! இசையரசி S.ஜானகி & SB.ஷைலஜா குரல்களில் ஒரு பாடலும், "பாடும் நிலா" பாலு குரலில் இன்னொரு பாடலும் என இரண்டு பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமையப்பெற்றதில் இளையராஜாவின் முத்திரை தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா? இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் அன்றைய பாலிவுட் திரை உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த திரையிசை ஜாம்பவான் RD.பர்மன் அவர்களது இசைக்குழுவை வைத்து பம்பாயில் பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் நிறைய ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! நிற்க. நான் "ஆனந்தக் கும்மி"யை பார்க்கவில்லை. இருந்தாலும் எப்போதாவது இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் எண்ண சிறகுகள் விரிந்து என்னையும் அறியாமல் எல்லை தாண்டி பறப்பதை என்னவென்று சொல்ல? அதுவொரு கனாக்காலம்! பயமறியா வாலிப வயதில் கட்டவிழ்ந்த காளை போல தறிகெட்டு ஓடும் எண்ணங்களை கட்டிப் போடுவது அவ்வளவு எளிதான விஷயமா என்ன? அனைத்தும் வண்ணமயமான எண்ணங்கள் தான் என்றாலும் கூட ஒரு வெற்றிக்கான பிரயத்தனம் தோல்வியை மண்டியிட வைக்கும் போது மொட்டுக்கள் மலராகவும், காய்கள் கனியாகவும், உருவிடும் வார்த்தைகள் யாவும் உருமாறி புதுக்கவிதையாகி மலர்ந்ததும் பருவம் செய்த கோளாறோ? இல்லையென்றால்.... வழி மேல் விழி வைத்து பல நாள் காத்திருந்து சந்தித்த போது விழிகளாலேயே மொழி பகிர்ந்து புன்முறுவல் பூத்தது வெறும் கனவல்ல... நிஜம் தானே! எதிர்பாரா சந்திப்பும், பேசிப் பழகி மகிழ்ந்து, மகிழ்வித்த மணித்துளியையும் கணக்கிட முடியுமா? கோயிலில் சாமியாக வந்து தந்த தரிசனத்தின் போது கூட அருகில், மிக அருகில் இருந்தபோதும் எப்படித்தான் அந்த ஒரு இடைவெளி ஏற்பட்டது என்று புரியாத புதிராக, மலராத மொட்டுகளாக திகழ்வதை இன்னமும் எண்ணிப் பார்க்கிறேன். சொந்த பந்தம் படைசூழ கோயிலில் இருந்து வெளி செல்கையில் எத்தனை முறை திரும்பி பார்த்தாய் என்பதை இன்னமும் நினைவிருக்கிறது அல்லவா? பிற்பாடு, எதிர்பாராத வேளையில் வெறும் ஒரு கூண்டுக்கிளியாகி விழி இரண்டும் நீர் மல்க சஞ்சலத்தோடு பிரிந்த போதும் கூட செய்வதறியாமல் ஒற்றி எடுத்தது உந்தன் விழி நீரைத் தானே அன்றி உன் இதயத்தில் தேக்கி வைத்த என் நினைவுகளையல்ல! திரும்ப வருவாய் என எதிர்பார்த்து காத்திருந்ததெல்லாம் வீண் என்று சொந்த பந்தம் காதுபட சொன்னாலும், நம் பந்தம் அத்தகையதா என்று மனசு நினைப்பதை வெளிக்காட்ட முடியுமா? ஆறுதலால் சமாதானமடையாத மனதினை அழுகையால் மட்டுமே சில நேரங்களில் சாந்தப்படுத்த முடியும் என்பதை மறுக்க முடியாதல்லவா? அழுது அழுது இப்போதெல்லாம் கண்ணீருக்கும் வறட்சி தான்! ஆயிரத்தெட்டு சிக்கல் இருந்தாலும் எல்லாமே சரியாகிவிடும் என்கின்ற அதீத நம்பிக்கை தானே வாழ்க்கை சக்கரத்தினை நகர்த்துகிறது! நான் பாடலில் லயித்து எதையெதையோ சிந்தித்து கற்பனை உலகில் மிதந்ததால் பாடல் முடிவுற்றது கூட தெரியாமல் போனதும் பாடலின் மீதுள்ள தாக்கம் தானோ? அது சொல்லிமாளாது! கனவுகள் தொடரும்! காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 16.09.2022
இசையில் இளையராஜா 100% சத்தியத்தைக் கடைப்பிடித்தார்....
இன்றுவரை அதே சத்தியம்தான் அவரைக் காப்பாற்றி வருகிறது......
Janaki Amma voice super 👌👌
Janaki amma awesome... Saraswathi janaki amma 🙏
உண்ணதமான
வரிகள் கொண்டு உயீருட்டும் பாடல் இதுவோ....
கேட்கவே சுகம் பார்க்கவும் இதம்....
கவிஞர் சத்யா
1983-ம் ஆண்டு இளையராஜா பிக்சர்ஸிற்காக ஜீவா இளையராஜா தயாரிப்பில் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர்கள் பாலசந்திரன், அஸ்வினி, கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், முரளிமோகன், கெளரிசங்கர், VK. ராஜேந்திரன், வாசந்தி, கிழவி நல்லம்மாள், செந்தில், பேபி ஷாலினி, மாஸ்டர் ரிச்சர்ட்ஸ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "ஆனந்தக் கும்மி".
இப்படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் இந்தப் பாடல்வரிகள்!
"ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா"
கவிஞர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனையில் கருவாகி உருவான கதை, திரைக்கதைக்கு ஏற்ப ஜனித்த பாடல் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வைக்குள் ஐக்கியமாகியதின் வெளிப்பாடு தான் இந்தப் பாடல்!
இசையரசி S.ஜானகி & SB.ஷைலஜா குரல்களில் ஒரு பாடலும், "பாடும் நிலா" பாலு குரலில் இன்னொரு பாடலும் என இரண்டு பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமையப்பெற்றதில் இளையராஜாவின் முத்திரை தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா?
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் அன்றைய பாலிவுட் திரை உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த திரையிசை ஜாம்பவான் RD.பர்மன் அவர்களது இசைக்குழுவை வைத்து பம்பாயில் பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் நிறைய ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
நிற்க.
நான் "ஆனந்தக் கும்மி"யை பார்க்கவில்லை. இருந்தாலும் எப்போதாவது இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் எண்ண சிறகுகள் விரிந்து என்னையும் அறியாமல் எல்லை தாண்டி பறப்பதை என்னவென்று சொல்ல?
அதுவொரு கனாக்காலம்!
பயமறியா வாலிப வயதில் கட்டவிழ்ந்த காளை போல தறிகெட்டு ஓடும் எண்ணங்களை கட்டிப் போடுவது அவ்வளவு எளிதான விஷயமா என்ன?
அனைத்தும் வண்ணமயமான எண்ணங்கள் தான் என்றாலும் கூட ஒரு வெற்றிக்கான பிரயத்தனம் தோல்வியை மண்டியிட வைக்கும் போது மொட்டுக்கள் மலராகவும், காய்கள் கனியாகவும், உருவிடும் வார்த்தைகள் யாவும் உருமாறி புதுக்கவிதையாகி மலர்ந்ததும் பருவம் செய்த கோளாறோ?
இல்லையென்றால்....
வழி மேல் விழி வைத்து பல நாள் காத்திருந்து சந்தித்த போது விழிகளாலேயே மொழி பகிர்ந்து புன்முறுவல் பூத்தது வெறும் கனவல்ல... நிஜம் தானே!
எதிர்பாரா சந்திப்பும், பேசிப் பழகி மகிழ்ந்து, மகிழ்வித்த மணித்துளியையும் கணக்கிட முடியுமா?
கோயிலில் சாமியாக வந்து தந்த தரிசனத்தின் போது கூட அருகில், மிக அருகில் இருந்தபோதும் எப்படித்தான் அந்த ஒரு இடைவெளி ஏற்பட்டது என்று புரியாத புதிராக, மலராத மொட்டுகளாக திகழ்வதை இன்னமும் எண்ணிப் பார்க்கிறேன். சொந்த பந்தம் படைசூழ கோயிலில் இருந்து வெளி செல்கையில் எத்தனை முறை திரும்பி பார்த்தாய் என்பதை இன்னமும் நினைவிருக்கிறது அல்லவா?
பிற்பாடு, எதிர்பாராத வேளையில் வெறும் ஒரு கூண்டுக்கிளியாகி விழி இரண்டும் நீர் மல்க சஞ்சலத்தோடு பிரிந்த போதும் கூட செய்வதறியாமல் ஒற்றி எடுத்தது உந்தன் விழி நீரைத் தானே அன்றி உன் இதயத்தில் தேக்கி வைத்த என் நினைவுகளையல்ல!
திரும்ப வருவாய் என எதிர்பார்த்து காத்திருந்ததெல்லாம் வீண் என்று சொந்த பந்தம் காதுபட சொன்னாலும், நம் பந்தம் அத்தகையதா என்று மனசு நினைப்பதை வெளிக்காட்ட முடியுமா?
ஆறுதலால் சமாதானமடையாத மனதினை அழுகையால் மட்டுமே சில நேரங்களில் சாந்தப்படுத்த முடியும் என்பதை மறுக்க முடியாதல்லவா?
அழுது அழுது இப்போதெல்லாம் கண்ணீருக்கும் வறட்சி தான்!
ஆயிரத்தெட்டு சிக்கல் இருந்தாலும் எல்லாமே சரியாகிவிடும் என்கின்ற அதீத நம்பிக்கை தானே வாழ்க்கை சக்கரத்தினை நகர்த்துகிறது!
நான் பாடலில் லயித்து எதையெதையோ சிந்தித்து கற்பனை உலகில் மிதந்ததால் பாடல் முடிவுற்றது கூட தெரியாமல் போனதும் பாடலின் மீதுள்ள தாக்கம் தானோ?
அது சொல்லிமாளாது!
கனவுகள் தொடரும்!
காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
16.09.2022
என் பிடித்ததபாடல்
கேட்க செம்மையா இருக்கு
இசை கடவுள் இளையராஜா
சென்னையில் உள்ள பண்பலை வரிசை எல்லாம் இந்தப் பாட்டை இரவு தவறாமல் கேட்கலாம்❤
என்னை மயக்கிய பாடல்
My heart favorite ❤️❤️❤️❤️❤️ Song
Enku rombo pudchi song ithu ❤❤❤❤
My favorite song 😍😍😍😍
Super
Good audio ❤️❤️
Super music 🎶 ilayarja sir
This same tune was used by ilaya raja in a telugu movie named sitara for a song called jilibili palukula. Please listen.
I like this song 😛
My favourite one
1:52 🫶❤
🎉