நம்மாழ்வார் பற்றி இந்த சிறு பிள்ளை பேசுவதை பாருங்களேன் 🫡 | கடைமடை விவசாயி | Kadaimadai Vivasayi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இயற்கை செழித்த தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பின்நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். 1960-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த உடன் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பசுமைப் புரட்சியால் ஏற்படும் மாற்றங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தனது அரசு பணியை துறந்தார். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் ஏற்பட்ட விளைவுகளை தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்தார்.
    தனது அரசு பணியில் இருந்து விலகிய பின் ஜப்பானியச் சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இளமையின் உந்துதலில் விவசாயத்திற்காகத் தொடங்கிய நம்மாழ்வாரின் நெடும் பயணம் அவரது இறுதி மூச்சு வரை நீடித்து நிலைத்தே விட்டது. இன்றைக்கு ஏராளமான படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியதற்கு நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது என்றால் மிகையல்ல.
    வீரிய ரக விதைகளின் வருகையால் அழிவு நிலையிலிருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், யானை கவுனி என நூற்றுக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். நம் நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர். இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாக்களில் ஒருவர்.
    பாரம்பரிய விதை குறித்த பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். அதற்கு காரணம் ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தன் பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு கதறி அழுதார் நம்மாழ்வார். அவர் அப்படி அழுதது அவர் சொந்த நலனுக்கானது. இந்த மண்ணுக்கானது, மக்களுக்கானது.
    இதுப்போன்ற காணொளிகள் காண கடைமடை விவசாயி பக்கத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்...
    #நம்மாழ்வார் #சீமான் #இயற்கைவேளாண்மை #kadaimadai_vivasayi #tamil

Комментарии • 2

  • @bornagainamina
    @bornagainamina 5 месяцев назад

    அருமையான பேசிய மகளுக்கு பாராட்டுக்கள் 👌👏

  • @AkilaRavikumar-yw2pm
    @AkilaRavikumar-yw2pm 5 месяцев назад +1

    மிகச் சிறப்பான தெளிவான கருத்துக்கள்....வாழ்த்துக்கள்🎉