454 வது நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு கூட்டம் |09.07.2024 || sky media

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024
  • 09.07.2024 செவ்வாய்க்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 454 வது வாராந்திர கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, பல்லடம் தாசில்தார் திரு.ஜீவா, பட்டய கணக்காளர் திரு.T.நடராஜன், ராஜேஸ்வரி மருத்துவமனை Dr.N.ராஜ்குமார், திருப்பூர் ரோட்டரி IMA இரத்தவங்கி திரு.G.செந்தில்குமார், விநாயக் பிளம்பிங் நிறுவனர் திரு.P.கிருஷ்ணமூர்த்தி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் திரு.K.S.ஆறுமுகம் மற்றும் பூமலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து மூவர் முற்றத்திலுள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திரு.ஜீவா அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அனைவரும் மூலிகை வனத்தில் மூலிகை செடி நடவு செய்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். செயல்தலைவர் திரு.K.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள், வனம் நிர்வாகிகள், அறங்காவலர்கள், இயக்குநர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பசுமை சார்ந்த கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். வனம் இந்தியா பவுண்டேசன் மற்றும் திருப்பூர் ரோட்டரி IMA இரத்தவங்கி இணைந்து, வனாலயத்தில், பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை இரத்ததானம் முகாம் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இன்றைய அன்னம் பாலிப்பு வழங்கிய அறங்காவலர், ஞானசஞ்சீவனம் குருகுலம் திரு.ஸ்ரீசசிகுமார் அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது.
    நன்றி
    TMS, வனம் ஊடகத்துறை

Комментарии •