Thendral Vanthu Theendum Pothu - Avatharam (1995) - High Quality Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • MOVIE - Avatharam (1995)
    MUSIC DIRECTOR - Ilaiyaraaja
    SINGER - Ilaiyaraaja and S. Janaki
    LANGUAGE - Tamil
    Wonderful Music By Ilaiyaraaja. Use Headphone For Better Experience. Clear Audio To Hear. Like And Subscribe To My Channel.
    I don't own the copyright to any of these songs and they belong to the respective owners.
    #remastered #srihariss #hit

Комментарии • 2

  • @prasath.r2124
    @prasath.r2124 2 года назад

    அனைத்து பாடல்களும் மிக அருமை ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉 இசை மிக மிக அருமை qulatay 👍👍👍👍👍👍

  • @PS2-6079
    @PS2-6079 2 года назад

    1995-ம் ஆண்டு கமலம் மூவீஸிற்காக வைத்யநாதன் தயாரிப்பில், நடிகர்கள் நாசர், ரேவதி, பாலசிங்கம், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தியாகு, சச்சு, ஜூனியர் பாலையா, காகா இராதாகிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "அவதாரம்." நாசர் பிரதான கதாபாத்திரத்தில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் எழுதி இயக்கவும் செய்திருந்தார். இது அவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இளையராஜாவின் இசையில் ஆறு முத்தான பாடல்கள் திரைக்கதைக்கு வலுவூட்டும் விதமாக வாலிபக் கவிஞர் வாலியால் புனையப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!
    கதைப்படி,
    டெல்லி கணேஷின் நாட்டுப்புற நடனக் குழு, இந்து சமய நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய கலைப்பணியாற்றி வந்ததால் அதில் சேர்ந்து விட வெகுளியான நாசர் முயற்சிக்கிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அந்த நாடகக்குழுவில் உள்ள பாலசிங்கம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவரை குழுவை விட்டு நீக்கிவிட்டு நாசரை குழுவில் இணைத்துக் கொள்கிறார்கள். டெல்லி கணேஷின் மகள் ரேவதி பார்வை அற்றவள் எனத் தெரிந்தும் நாசர் அவளை காதலிக்கிறார். அவளும் அப்படியே!
    ஒரு மேடை நிகழ்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக டெல்லி கணேஷ் இறந்து போனதை அடுத்து அந்த நாடகக்குழுவில் இருதவர்கள் பிரிந்து சென்று விடவே, நாசர், ரேவதி இருவரும் நடனக் கலைஞர்களாக தொடர வேண்டும் என்று ஊரைவிட்டு புறப்பட்டு பாலசிங்கத்திடம் தஞ்சம் அடைகின்றனர். ஆனால் வில்லன் பாலசிங்கம், ரேவதியை கற்பழித்துவிட்டு நாசரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதும், அங்கிருந்து தப்பித்து வில்லனை பழிவாங்குவதும் தான் படத்தின் க்ளைமாக்ஸ்!
    படத்தைப் பொறுத்தவரை அனைத்து கதாபாத்திரங்களும் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்!
    பாலசிங்கத்தின் திறமை, இது அவருக்கு முதல் படம் அல்ல என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது நாசர் இயக்கிய முதல் படம் என்று நம்பமுடியவில்லை!
    அவரது திறமை பல இடங்களில் வெளிச்சம்போட்டு காட்டுவதை மறுக்க முடியாதல்லவா?
    இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது என்று சொன்னால் மிகையல்ல!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    பெண் : "எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
    உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது"
    ஆண் : "எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
    எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"
    காதலூறும் வரிகள்!
    இளையராஜா & S.ஜானகி குரலில் ஒலிக்கும் இந்தப்
    பாடலின் ஆரம்பத்தில் ஒருசில குரல்களாக ஒலிக்கும் கோரஸ் (Chorus) கேட்போரை எங்கேயோ அழைத்து செல்வதாக ஒரு பிரமை!
    இசையமைப்பாளரின் தனித்துவமான அடையாளங்களை காட்டுகின்ற பாடலாக அமைந்தது என்பது தான் நிதர்சனம்!
    பாடலாசிரியரும் அவரது பங்கிற்கு ஒவ்வொரு சரணத்திலும் அன்பைத் தவிர வேறு எதுவும் நிலையானது இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
    இன்ப துன்பத்திலும் மனதை இலகுவாக்கும் பாடல் என்பது மட்டுமல்ல, ஓராயிரம் முறைகேட்டாலும் சலிப்பு தட்டாதவாறு உருவாக்கியதை என்னவென்று சொல்ல?
    நிற்க...
    இந்த அழகான பிரபஞ்சத்தில் நம் எல்லோருக்கும் கிடைத்த இந்த வாழ்க்கை என்பது மிகக்குறைந்த கால அளவே. அதில் எண்ணில் அடங்கா எதிர்பார்ப்புகளும், சோதனைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் யாரையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்தாலும் கூட, அதையும் தாண்டி கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே....
    விவரிக்க வார்த்தைகள் இல்லை!
    மகிழ்ச்சியான சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி
    தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மனிதனே மாமனிதன்!
    இந்த பரந்த உலகில் நமக்கான வாய்ப்பு ஒருமுறை மட்டும் தானே?
    மனவருத்தம் எதற்கும் எப்போதுமே தீர்வாகாதபோது அதனை ஓரம் கட்டி அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றி பயணத்தை தொடர்வதுதானே புத்திசாலித்தனம்!
    மகிழ்வித்து மகிழுங்கள்
    வாழ்க்கை வாழ்வதற்கே...
    இப்படம் வெளியாகி சுமார் இருபத்தி ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் இன்றில்லை!
    பலர் ஓய்வு பெற்று விட்டார்கள் என்றாலும் கூட இப்படம் வெற்றிபெற்றமைக்கு அவர்களுடைய பங்கும் போற்றுதலுக்குரியது அல்லவா?
    அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.