பாடல் 87-88
HTML-код
- Опубликовано: 1 фев 2025
- 87.
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்த, என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே.
88.
பரம் என்றுனை அடைந்தேன், தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற,கை யான் இடப்பாகம் சிறந்தவளே.