கருணாநிதி தன் மகனுக்குப் பெயர் வைக்க இவர்தான் காரணம்! |The Legend | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #Azhagirisamy #PattukottaiAzhagiir #TheLegend
    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராகச் சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.
    அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைப்பயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்.
    திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சைக் கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது. தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்தச் சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாகப் பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதைச் சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவன்தான் மு. கருணாநிதி.
    CREDITS
    Host - Suguna Diwakar
    Camera - SANDEEP
    Edit - ArunKumar
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp

Комментарии • 16