Rosewood/ஈட்டி மரம்/தோதகத்தி 🌳சேர சோழ பாண்டியர் காலத்தில் ஈட்டி யாக இருந்த 🌳
HTML-код
- Опубликовано: 31 дек 2024
- மருத்துவ நன்மைகள் மிக்க, மரப்பாச்சி பொம்மைகள்.
அக்காலத்தில், பெண் குழந்தைகளுக்கு வீடுகளில், மரப்பாச்சி பொம்மை எனும் மரத்தாலான சிறு பொம்மைகளை விளையாட வாங்கிக் கொடுப்பார்கள். அவற்றை குழந்தைகள் வாயில் வைத்து விளையாடினாலும், குழந்தைகளின் உடல் நலன் கெடாது, சொல்லப்போனால், அவர்களின் உடலுக்கு அவை நன்மையே செய்யும். எதனால் தெரியுமா, அந்த பொம்மைகள் யாவும் மருத்துவப் பலன்கள் மிக்க, ஈட்டி மரத்தில் இருந்து செய்யப்படுவதால் தான்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும், இரசாயனப் பூச்சுடன் கூடிய சைனா பொம்மைகள், அவற்றைத் தொட்டாலே, குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்புகளை உண்டாக்கி விடுகின்றன. இன்றும் கிடைக்கிறது மரப்பாச்சி பொம்மைகள், தேடி வாங்கிக் கொடுத்தால், குழந்தைகளின் உடல் நலம் காக்கலாமே!

அலங்காரப் பொருட்கள் தயாரிக்க :
இரும்பைப் போன்ற உறுதியும், எடுப்பான கருஞ்சிவப்பு வண்ணமும் கொண்டதால், ஈட்டி மரத்தில் இருந்து நிறைய மரப் பொருட்கள் செய்யப்பட்டன. மிக நுட்பமாக கைகளால் கடைசல் வேலை செய்யப்படும் மேஜை, நாற்காலிகள், கட்டில் மற்றும் அலமாரி தயாரிப்பில், இந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டன. நிறைய மரப்பொருட்கள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், ஈட்டி மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன.
மரங்கள் அழியும் நிலைக்கு வரும் வேளையில் அரசாங்கம், தோதகத்தி மரத்தை, தேசிய மரமாக அறிவிக்க, மரத்தை வெட்டி அழித்த, ஆபத்து நீங்கியது.