என் டீ கடையில் 30 வருஷமா ராஜா பாட்டு மட்டும் தான்... - Hari Narayanan | Enga Appa Kadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2022
  • என் டீ கடையில் 30 வருஷமா ராஜா பாட்டு மட்டும் தான்... - Hari Narayanan | Enga Appa Kadai
    #HariNarayanan #EngaAppaKadai #Ilayaraaja
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

Комментарии • 98

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 года назад +53

    தொன்னூறுகளின் இறுதி என நினைக்கிறேன்..சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிய பஸ் பயணம்..என் ஞாபகம் சரியெனில் பஸ் பெயர் 'ரமணி' என நினைக்கிறேன்..அரன்மணை போல அலங்காரமான பஸ்..! இளையராஜா பாடல்கள் தாலாட்டுகின்றன..!'ராசாவே ஒன்னத்தான் எண்ணித்தான்'
    எஸ் பி ஜைலஜா குரல்..லயித்துபோய் கேட்டுக்கொண்டிருந்தேன்..! எனக்கு எதிர்பக்க சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர்..! நிமிர்ந்து ஒலிபெருக்கியை பார்த்தவர் அழுதுகொண்டே வந்தார்..! நான் அவர் அருகில் சென்று கேட்டேன்... ஏன் சார் அழறீங்க..என்னாச்சி என்றேன்..! பேசவேயில்லை அவர்..கள்ளக்குறிச்சி வந்துவிட்டது
    .இறங்கியபின் அவரிடம் கேட்டேன்..! சிவந்த கண்களோடு அவர் சொன்னார்..அந்த பாட்டு அந்த பாட்டு.. என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்..! இன்றுவரை என்னால் மறக்க முடியாத நாள்..! பொது இடம் என்ற நினைப்புகூட இல்லாமல் ஒருவரை ஒரு பாடல் அழவைக்கிறது ஏதோ ஒரு உணர்வை கிளறியுள்ளது என்றால்..!? அதுதான் இளையராஜா சார்..!!

    • @pondicherryvaathiyar6203
      @pondicherryvaathiyar6203 2 года назад +7

      எல்லோருக்கும் அப்படிப்பட்ட ஒரு தருணம் வாய்க்கப்பட்டிருக்கும்... but many might not exposed themselves publicly.....

    • @amusam7325
      @amusam7325 2 года назад +1

      Thx for sharing ur experience

  • @parthipanparthi520
    @parthipanparthi520 2 года назад +57

    நான் பிறந்தது 90 களில் ஆனால் இளையராஜா இல்லாமல் ஒரு நாளும் என் வாழ்வு நகர்வதில்லை..

  • @venkatasubramaniampiramana5777
    @venkatasubramaniampiramana5777 2 года назад +26

    உண்மையிலேயே இளையராஜா நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே நமக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்👍. அவரது இசை நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் எண்ணிலடங்கா. 😍
    இப்படி ஒரு பாமரன் மற்றும் வேற்று மொழி எளியவரின் இளையராஜா பற்றிய சந்திப்பு, மிகவும் அருமை. 👏👏👏இளையராஜா இல்லையேல் உண்மையில் நாம் ஹிந்தி மொழியினால் என்றோ ஆட்கொண்டு இருப்போம். From 1970s Raja's ராஜாங்கம் தொடர்கிறது...👌💪😀

  • @laddu756
    @laddu756 2 года назад +30

    இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் எத்தனை ஆயிரம் லட்சம் இல்லை கோடி ரசிகர்கள் உள்ளனர் நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

  • @sakthivel3706
    @sakthivel3706 2 года назад +17

    இசை தெய்வத்தின் கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.. நுங்கம்பாக்கம் சாலையில் நானும் பலமுறை இந்த தேநீர் கடையில் ராஜதேவனின் இசையினை அருந்தி மகிழ்ந்து உள்ளேன்..

  • @pushpanathan9658
    @pushpanathan9658 2 года назад +24

    இவர் போன்ற ரசிகர்களில் நானும் ஓருவன்...

  • @pushpanathan9658
    @pushpanathan9658 2 года назад +27

    அவருடைய ரீரெக்கார்டிங்கும் ஒரு கேரக்டராக நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கும் அது தான் ராஜா!

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 года назад +7

    இளையராஜா ஐயா வாழும் காலங்களில்
    நாமும் வாழ்கிறோம் என்கிற பெருமை
    ஒன்றே போதும்....இளையராஜாவின் பாடல்களை
    கேட்கும்
    ஒவ்வொரு இளையராஜா ரசிகனுக்குள்ளும்
    பலவிதமான ஞாபகங்கள் வந்து வந்து போகும்....
    இதே போல் தினம் ஒரு இளையராஜா ரசிகரை பேட்டி எடுத்து
    பல ரசிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்...
    இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்...
    இளையராஜாவை கொண்டாடுவோம்... கொண்டாடிக் கொண்டே இருப்போம்...

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 2 года назад +14

    அட அடா அடா ஒரு டீ கடை நடத்தும் நபருக்கு இவ்வளவு இசை நுணக்கமா இது போன்ற அதிசயம் என் இசைஞானி ஒருவனால் தான் முடியும் அவன் ரசிகனாக இருந்தா தான் முடியும் உன்னை பார்க்கணும் போல இருக்கு நண்பரே சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக உங்களை சந்திப்பேன்

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 года назад +15

    மகிழ்ச்சியாக இருக்கிறது
    வாழும் கடவுள் இசை கடவுள்🙏

  • @jamaledrc
    @jamaledrc 2 года назад +10

    இனம், மதம், ஜாதி, வயது, வர்க்கம், பாலினம், இவற்றை கடந்து, நம் தமிழர்கள் அனைவரும் ஒரு சேர ரசிக்க, வியக்க, சிலகிக்க, வைத்த ஒரு விஷயம், அது ராசாய்யாவின் இசை மட்டுமே.....

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 года назад +13

    மிக அருமையான ரசிகர். ரசிக்கும் மனதை... ஹே தென்றலே... வாழ்த்துக்கள்..music ,the lifegiver..

  • @sureshk481
    @sureshk481 2 года назад +6

    Hari அண்ணா எவ்வளவு பக்குவமா பேசுறாரு பாருங்க. இளையராஜா வை பத்தி சில சூழ்நிலையை பேசும் போது அந்த முகத்தில் அவ்வளவு பெருமையும் பாவனைகளும் காட்டுறார்.
    ஒரு முக்கிய விஷயத்தை ஹரி அண்ணா சொன்னார். அதை நானும் இப்போது உணருகிறேன். அதாவது 20, 30 வருடங்களுக்கு முன்னால் ராஜாவின் மெட்டுகள் சில மெயின் கருவிகளின் இசைய மட்டுமே நாம் கேட்டு இருக்கிறோம். ஆனால் இப்பொழுது உள்ள நல்ல headphone, music system களில் எவ்வளவோ சின்ன சின்ன நுணுக்கமான இசைகளை நமக்காக அன்றைக்கே போட்டு வைத்திருக்கிறார். Hari அண்ணா இதை கவனித்து இப்பொழுது என்னைப் போலவே இன்னும் உற்சாகம் கொள்கிறார்... வாழ்த்துக்கள் அண்ணா.
    உண்மையில் நீங்கள் என் சார்பாக பேசி உள்ளீர்கள்.
    ஒவ்வொரு ராஜா ரசிகனுக்கும் இந்த எண்ணம் வரும்

  • @cbharathan1976
    @cbharathan1976 2 года назад +25

    One of the finest interview about Ilayaraja in recent time!! Sensible questions!!

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +16

    குறிப்பாக இசைஞானி குறலில் பாடல் கேட்டால் கண்கலில் கண்ணீர் வரவழிக்கும் மனம் வேதனை நீங்கும் அனைவருக்கும் இன்னோ தாய் இசைஞானி நன்றி அண்ணா

    • @RameshKumar-qi1qw
      @RameshKumar-qi1qw 2 года назад

      குறிப்பாக "மரத்த வச்சவே(ன்) தண்ணி ஊத்துவா(ன்) மனச பாத்துதா(ன்) வாழ்வ மாத்துவா(ன்) ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பா(ன்) ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்! இந்த பதிவின் ஒவ்வொருவரின் உணர்வு பூர்வமான கமென்ட்களை படித்தாலும் கண்ணில் நீர் துளிக்கிறது!

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +4

    பொதுவாக பெரும்பான்மை ராஜா
    ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் என்னவெனில் உலகின் Number one raja
    Fan நான்தான் எண்பது.
    ஆனால் இந்த டீ கடை
    ரசிகர் தம்பிகளா நான்
    தான் உங்களுக்கெல்
    லாம் அப்பன் என்று நம்
    கண்களை திறந்தவர்.

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 2 года назад +11

    இசைஞானியின் ஆன்மீக முகம் அற்புதமானது . அதை பற்றியும் பேசினால் புதிய புதிய தகவல்கள் ரசிகர்களுக்கு கிடைக்கும் .

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 года назад +18

    இளையராஜா பலருக்கு பெயராக மட்டும் தோன்றும், என்னை போன்ற பலருக்கு அந்த பெயர் உயிரில் கலந்த ஆத்மார்த்தமான உணர்வு.
    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்!!

  • @r.natarajan2652
    @r.natarajan2652 2 года назад +11

    I am a 70's kid , Ella rasigar sarbaga avar oda petti iruntha mathiri Nan feel panren. Very very nice conversation about Raja sir, avar sonnathu athanaiyum unmai nanga ellam live ha enjoy panna group. Thanks a lot avarukkum
    Petti eduthavarukkum nanri.

  • @HasanandHasan65137
    @HasanandHasan65137 2 года назад +20

    ஒரு மனிதன் தற்கொலை செய்துக்கொள்ளப்போகிறான் அவன் இளையராஜா என்கிற தெய்வத்தின் பாடலை கேட்டு மனம் மாறி உயிர் வாழ்கிறான் அதுதான் இசைஞானி இளையராஜா என்கிற வாழும் தெய்வம்

    • @jeganathankamali6490
      @jeganathankamali6490 2 года назад +4

      இதற்கு நான் சரியான உதாரணம். இந்த நன்றிகெட்ட வேதனையான உலகத்தில் நான் பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். ஆனால் நான் இப்பொழுது என் பிள்ளைக்காக உயிரோடு இருப்பதற்கு என் இசை கடவுள் இசைஞானி தான் காரணம். இசைஞானி இளையராஜா என்னுடைய இன்னொரு தாய். என் தாய் அன்பை போலவே என் இசைஞானி இளையராஜாவின் இசை 🙏🙏🙏🙏🙏

    • @karthikvarshink3022
      @karthikvarshink3022 Год назад +2

      ​@@jeganathankamali6490arumai sir Raja Raja than

  • @MaskSpencers
    @MaskSpencers 2 года назад +20

    Intha kadaila naa neraya thadava tea kudichi irukken but intha photos Ellam parpen kadaiye rombha vithyasama irukkum but inniku dan avar story teriyuthu thank you for your interview vishan bro unga voice a kekkumpothu enakku sj suriya voice madiriye irukku bro 👍

  • @naantamizan6953
    @naantamizan6953 2 года назад +28

    I believe, many lives nowadays peacefully, happily, energetically and lively because of இளையராஜா.
    Cannot imagine tamil cinema industry without him.

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 2 года назад +7

    Great Salute To You Sir 🙏 About Our God Isai Ganani 🙏 இந்த நன்றிகெட்ட வேதனையான கேடுகெட்ட உலகத்தில் நான் பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். ஆனால் நான் இப்பொழுது என் பிள்ளைக்காக உயிரோடு இருப்பதற்கு என் இசை கடவுள் இசைஞானி தான் காரணம். இசைஞானி இளையராஜா என்னுடைய இன்னொரு தாய். என் தாய் அன்பை போலவே மிகவும் தூய்மையான அன்பு என் இசைஞானி இளையராஜாவின் இசை 🙏🙏🙏🙏🙏

  • @padmanabanm6761
    @padmanabanm6761 2 года назад +15

    I am Happy for Hari Anna, He is an encyclopedia of Isagnani Ilayaraja. God Bless him

  • @mahendranm9365
    @mahendranm9365 2 года назад +18

    Mastero's music touches and melts our hearts

  • @DineshKumar-cs1fo
    @DineshKumar-cs1fo 2 года назад +5

    Super HARI NARAYANAN sir 🙏🙏🙏🎻🥁🎺🎸🎸🎙🎸🎹🎙🎵🎼🎼 super my God ILLAIRAJA 🙏🙏🙏🙏🙏

  • @rapratu3055
    @rapratu3055 2 года назад +5

    Not a music director........music himself........ Ivlo deep ana fans irukura ore aal worldlaye raja dan😍😍

  • @annadurai9930
    @annadurai9930 2 года назад +4

    WoW சூப்பர்

  • @DineshKumar-cs1fo
    @DineshKumar-cs1fo 2 года назад +4

    Super HARI NARAYANAN 🙏🙏🙏🙏 SUPER MY GOD ILLAIRAJA 🙏🙏🙏🙏🙏🙏🎼🎼🎼🎵🎶🎶🎙🎹🎹🎹🎷🎸🎸🎺🎺🎻🎻🥁🥁🥁🎻🎻🎻👌👌👌 thence all Team 🙏🙏🙏

  • @jasirajaffer2154
    @jasirajaffer2154 2 года назад +7

    அழகான இன்டர்வியூ❤️

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 2 года назад +3

    இன்றும் என் வாழ்க்கையில் நடப்பது.
    என்னுடைய இரண்டு மகள்கள் திடீரென சண்டை போட்டு கொண்டு என்னை தூங்கவிடாமல் தொந்தரவு செய்வார்கள். அதிகமாக கோபப்பட்டு திட்டி விடுவேன். சில நேரங்களில் அடித்தும் விடுவேன்.
    எனது கோபத்தின் அளவீடை என் மனைவி சரியாக கணித்து... பிள்ளைகளுக்கு அடி நிச்சயமாக விழலாம் என நினைத்து...
    சின்ன கண்ணம்மா படத்தில் ராஜா சார் இசைத்த "எந்தன் வாழ்வில்... பாடலை சட்டென ஒலிக்க விடுவார்.
    பல்லவி முடிந்து முதல் சரணம் துவங்குவதற்குள்ளேயே என் கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்து விடும்.
    இளையராஜாவை துணைக்கு வச்சிக்கிட்டு உன் மகள்களை காப்பற்றிக் கொள்கிறாயோ... என சிரித்தவாறே மனைவியை கிண்டல் செய்வேன்.
    இன்றும் என் மகள்கள் உங்களின் கோபத்தில் இருந்து நாங்கள் தப்பிக்க காரணமே ராஜா சார் தான் அப்பா என்பார்கள்.
    அவர்களும் ராஜா சாரின் தீவிர ரசிகைகளாக உள்ளனர்

  • @steelman2k8
    @steelman2k8 2 года назад +6

    Love you rajagaru

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +1

    இந்த அனுபவம் எனக்கு நேர்ந்ததுபோலவே உணர்கிறேன் காரனம் நானும் சென்னையில் தேனீர் விடுதி வைத்திருந்தேன் மவுன்ரோடு அருகில் எல்லிஸ் ரோட்டில் 1993 காலகட்டம் அது இப்படித்தான் நானும் என் கடையில் எந்தநேரமும் ராஜாவின் பாடல் ஒலித்ததுகொண்டேஇருக்கும் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் என் ஆத்மாவில் கலந்திருக்கிறார் அவர் இசை இல்லை என்றால் நான் இல்லை வாழ்க இசை கடவுள் இளையராஜா ஐயா அவர்கள் நன்றி நன்றி நன்றி நன்பர்களே

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +1

    அதுதான் இசை ஞானி மன்னிக்கவும் நம்ம இசை ஞானி நன்பர்களே சந்தோஷமா நன்பர்களே வாழ்க நன்பர்களே நம் இசை ஞானி இசையுடன் நன்றி

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +5

    Mr.Hari is one of those super great fans of isai gnani raja sir.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +2

    சமீப காலமாக போக்குவரத்து சிக்னலில் கூட இந்த இசை அரசரின் பாடல்கள் தான் போட்டிருப்பது மிகவும் பெருமையான விஷயம்

  • @le...le...6488
    @le...le...6488 2 года назад +5

    இளையராஜா குடும்பத்தில் ஒரு அங்கம் ....???

  • @vinothm63
    @vinothm63 2 года назад +8

    Yen ayyavai pattri interview ketathu romba santhosam... 😊 Apdi feel panna vachi irukar ilayaraja...👍

  • @arvindravichandran1024
    @arvindravichandran1024 2 года назад +14

    Think about the wealth of musicality by this man, Raja has done the magic, true Raja lover will just love to watch people talk about him.

  • @kavyashni256
    @kavyashni256 2 года назад +5

    Stil im listening Raja sir songs when im upset

  • @saswinsasvanth2779
    @saswinsasvanth2779 2 года назад +5

    Super na

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 2 года назад +7

    Fantastic amazing interesting interview lovely my favorite all time . Illayaraja sir 🙏💐🍫👍🎼♥🎼💛🎼💜🎼💚🎼❤🎼💙🎼

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +1

    என் ராஜா எங்கள் ராஜா நம்ம ராஜா இது எங்கள் ராஜா எங்களுக்கு தந்த உரிமை நன்றி அண்ணா நெறியாளர் நன்பருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @ragavanips8778
    @ragavanips8778 2 года назад +4

    Super

  • @sankarramasamy848
    @sankarramasamy848 2 года назад +3

    Wow hari inline your speech

  • @manojbym
    @manojbym 2 года назад +6

    Well said Sir..

  • @luckan20
    @luckan20 2 года назад +6

    Excellent interview. Maestro is an incomparable musical genius.

  • @GowriShankar-jc6so
    @GowriShankar-jc6so 2 года назад +5

    It’s true king 🤴🙏👍👌💐❤️💗🔥

  • @harishps3633
    @harishps3633 2 года назад +5

    Long live raja sir

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +4

    Wow wow wow what a beautiful person

  • @praveenjaicb
    @praveenjaicb 2 года назад +8

    Hari outstanding interview had tears 😭 when this gentleman spoke and the way u carried it.. one request do interview with youngsters what they feel about his songs..

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +1

    அண்ணன் ஹரி நாராயணன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @mahendranm9365
    @mahendranm9365 2 года назад +8

    Mastero's music heals us.

  • @v2kitchen488
    @v2kitchen488 2 года назад +5

    Father shop our fav point @nungambakkam..

  • @mahendranm9365
    @mahendranm9365 2 года назад +7

    God of music.

  • @juju57887
    @juju57887 Год назад +2

    அருமையான ரசிகர்👌👏👏👏

  • @pandianarumugam166
    @pandianarumugam166 2 года назад +3

    Super my Pro

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 Год назад +1

    ஐயா இளையராஜா அவர்கள் நல்ல இசையை உருவாக்கியவர் மட்டும் அல்ல இம்மாதிரியான நல்ல மனிதர்களையும் உருவாக்கியிருக்கிறார்.

  • @mrluk62
    @mrluk62 Год назад +2

    Initially Viswanathan & Ramamoorthy, then Viswanathan and finally Ilayaraja. Then there is nobody to fill his place. RAJA SIR IS ALWAYS GREAT.

  • @ragavanips8778
    @ragavanips8778 2 года назад +3

    ❤️❤️❤️❤️

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    ஹரி நாராயணன் அண்ணன் சொல்கிறவிதமே மிகவும் அழகு நன்றி அண்ணா

  • @sschandran5497
    @sschandran5497 2 года назад +4

    4:10
    100% True

  • @ksenthil9253
    @ksenthil9253 2 года назад +3

    Super sir

  • @Senthilkumar-mm6bb
    @Senthilkumar-mm6bb Месяц назад

    வாழ்த்துக்கள் ஹரி நாராயணன் சார்.

  • @anbu282
    @anbu282 2 года назад +9

    Raja sir illana tamil song eh irunthirukathu😊

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +3

    சுகம்.....இனிமை....அருமை...‌....‌நன்றி.

  • @kavyashni256
    @kavyashni256 2 года назад +3

    Tamil is mother of other languages and first language on earth...

  • @elayarajahbalu
    @elayarajahbalu 11 месяцев назад

    I cried...❤❤❤

  • @amusam7325
    @amusam7325 2 года назад +4

    Please share the address of this coffee shop please

  • @sureshkannan7615
    @sureshkannan7615 2 года назад +6

    Isai legents. Ilaiyaraja sir mattum illai. Niraaiya isai manitarkal. Irukkirarkal arumugam narayanan

  • @ganeadams
    @ganeadams 2 года назад +3

    Address pls..

  • @gejikumarm5926
    @gejikumarm5926 2 года назад +2

    👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 2 года назад +4

    Antha manushan kadavulthaanya.

  • @prasadramanathan2048
    @prasadramanathan2048 2 года назад +1

    Hari sir great interview. please make him to meet illayaraja maestro. let it be a surprise to him. very hard process. such a great fan should meet him.
    if this happens it is great. we want to see. this video

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад +2

    💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamani5215
    @selvamani5215 Год назад

    இசை ராஜா

  • @srinivasanarumugam19
    @srinivasanarumugam19 11 месяцев назад

    Location of this tea shop please

  • @cutiedoll3428
    @cutiedoll3428 Год назад

    na Chennai la irunthapo en favourite place at morning 6 am suda suda samosa vera level memories 😇

  • @movievenky7946
    @movievenky7946 2 года назад +1

    இந்த டி கடை எங்க இருக்கு

  • @venkatesh_taily
    @venkatesh_taily Год назад

    12:40 la edho nenjam thananana thananana song ena movie? please yarachu solunga

    • @MPJANA
      @MPJANA 8 месяцев назад

      உதயகீதம் படத்தில் உள்ள 'என்னோடு பாட்டு பாடுங்கள்' என்ற பாடல்

  • @baskarvsbaski9751
    @baskarvsbaski9751 2 года назад +3

    Address pls

  • @harenesundar5519
    @harenesundar5519 2 года назад +2

  • @immanuelgodwithus328
    @immanuelgodwithus328 2 года назад +1

    Kkoiwl

  • @naveen0856
    @naveen0856 2 года назад +3

    இந்த கடையில எத்தனை தடவை இளையராஜா வந்து இருக்கிறார்..

    • @abdulagees6101
      @abdulagees6101 2 года назад +4

      அங்க உக்காந்து ஒரு சுத்து சுத்தி பாருங்க.. இளையராஜா அங்கேதான் இருக்கார்.

  • @keepsmilekeepstrong3196
    @keepsmilekeepstrong3196 2 года назад +1

    Bro background music songs use panuriga nu copyright claim panu Rira porru thalaivan

    • @ir43
      @ir43 2 года назад +6

      அறிவுக்கொழுந்து

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 6 месяцев назад

      ஐயா நீங்கள் அறிவு மேதாவி