உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால்போட்டு கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல, உழைப்பு தருகின்ற கம்பீரம்!
    கார், பணம், பதவி பார்த்து வருகின்ற மரியாதைகள் அவை போனதும் அவைகளோடே போய்விடும், உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர்போனாலும் போவதில்லை!
    கோவணத்தோடு நின்றாலும் குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக்கூடிய தைரியம் கடவுளுக்கு பின் விவசாயிக்கு மட்டுமே இருக்கிறது
    படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட கடவுள் தொழில் தான்.
    உழவுக்கு மட்டுமன்றி உழவனுக்கும் வந்தனை செய்வோம்...
    உன்பவன் விலை நிர்னயம் செய்யும் நிலை மாறி
    உழுபவர் விலை நிர்னயம் செய்யும் காலம் கனிந்திடட்டும்.

Комментарии •