தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை! தினசரி வானிலை அனுமானம்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024
  • தமிழக வாட்ஸ் அப் குழுவில் இணைவதற்கு:
    chat.whatsapp....
    டெல்டாவெதர்மேன் தினசரி வானிலை அனுமானம் டிசம் 21, 2024
    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
    அடுத்த 36 மணி நேரத்தில் இந்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக கடலிலேயே வலுவிழக்க துவங்கும்.
    கடல் பகுதியில் தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளதால் தமிழக மீனவர்கள் டிசம் 23ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    இந்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு எந்தவித தாக்கமும், பாதிப்பும் இல்லை.
    தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட சற்றே அதிகரித்து காணப்படும்.
    இரவு நேரங்களில் மாநிலத்தின் ஒரிரு இடங்களில் குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
    தாழ்வு மண்டலம் முழுமையாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக தமிழகம் திரும்பும் போது டிசம் 25,26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Комментарии •