கோழி, புறாக்களுக்கான மரக் கூண்டு செய்யும் முறை | Chicken, Pigeon Cage | Hello Madurai | TV | FM

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • கோழி, புறாக்களுக்கான மரக்ச கூண்டு குறித்த நேர்காணலுக்கு 06.07.2021 வைகை ஆற்று ஓரத்தில் சென்று கொண்டு இருந்தோம். நாம் பேட்டிக்கு கேட்டு வைத்திருந்தவரிடம் நாம் சென்ற நேரம் கூண்டுகள் இல்லை, கொஞ்சம் தொலைவில் பெரிய அளவிலான கூண்டுகள் கண்ணில் தென்பட்டது.
    அங்கே சென்று பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், அதன் உரிமையாளர் உயர்திரு.சோனையா அவர்கள் எங்களிடம், கூண்டு வாங்க வந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு, என்ன வேண்டும் சார் என ஆரம்பித்தார். நாங்கள் வந்த நோக்கத்தை கூறியவுடன் சரி, பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
    லாக்டவுன்கு முன்பு கூண்டு விலை ரூ.2,500 தான் சார், இப்ப எல்லா விலையும் ஏறிவிட்டது. அந்த கூண்டு இப்ப 500 ரூபாண் ஏறி, ரூ.3,000க்கு விற்பனை செய்கின்றோம். பெருசா ஒன்னும் இப்ப வியாபாரம் இல்ல. இப்பதான் கொஞ்சம் சூடு பிடித்துள்ளது. இனி லாக்டவுன் இல்லாமல் இருந்தால் வியாபாரம் பழைய நிலைக்கு வரும் என்று கூறினார்.
    அதன் பின் அவருடைய கூண்டு செய்யும் அனுபவங்களை பதிவு செய்து கொண்டோம். கிட்டதட்ட ஆறு அடிவரை கூண்டு செய்யலாம் என்றார். நானும் அதன் அருகில் நின்றேன் ரொம்ப அழகாக இருந்தது, அந்த படத்தைதான் அட்டைபடமாக அப்படியே பயன்படுத்திக் கொண்டேன்.
    கடுமையான வெயில், காட்சியில் அது உங்களுக்கே தெரியும். கம்பி கூண்டுகள் பற்றி நாங்கள் இதுவரை வீடியோ எடுக்கவில்லை என்பதால், அது குறித்த அறிவு ஏதும் இல்லை. ஆதலால் அதை பற்றி பெரிதாக பேச விரும்பவில்லை. மரக் கூண்டு என்பது நான் சிறுபிள்ளையில் இருந்து பார்த்துள்ளேன்.
    அந்த காலத்தில் பலரும் மாடிக்கு வந்து புறா கூண்டு செஞ்சு கொடுப்பாங்க. அப்படிலாம் இவுங்க செய்து கொடுப்பாங்களா என்று நான் கேள்வி கேட்கவில்லை. மேலும், இந்த மரக் கூண்டு கண்டிப்பா கம்பி கூண்டை விட அதற்கு ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் இது இயற்கை அல்லவா.
    எனக்கு தெரிந்த சில கேள்விகளை கேட்டுள்ளேன். மீதமுள்ள கேள்விகளை வேறு ஒரு மரக் கூண்டு தயாரிப்பில் கேட்டுத் தெளிவோம் என்பதால். உங்களுக்கு நிச்சயமாக இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
    பேட்டி முடிந்ததும், திரு.சோனையா அவர்கள் அன்போடு சார், கலர், டீ எது சாப்பிடுறீங்க என்றார். எதுவும் வேண்டாம் அண்ணே என்றோம். ஏனெனில் வெயிலுக்கு எனக்கு டீ பிடிக்காது. கலர் சுத்தமா பிடிக்காது. பேட்டியும் சீக்கிரமா முடிந்துவிட்டது ஆதலால். கடைசியா கிளம்பும்போது சார் ஒரு கை பிடிங்க இந்த கூண்ட அங்க நகர்த்தி வைக்கணும் என்றார்.
    நானும், கேமரா தம்பி ராஜ் குமாரும் சேர்ந்து பாகுபலி போல கூண்ட தூக்கி நகர்த்தி வைத்தோம். திரு.சோனையா அவர்களுக்கு ரொம்ப சந்தோசம். ஆனா எனக்குதான் இ சுதந்திரமா பறக்குறத ந்த கூண்டுக்குள்ள அடைச்சு வைப்பாங்களே... பாவமே... என்று தோனுச்சு.
    பைக்க எடுத்துக்கிட்டு அந்த வழியா கிளம்பினோம். வரிசையா மாடு அடிக்கும் இறைச்சி கடை. நிறைய நாட்டு மாடு கன்றுகள், எங்களை யாராவது காப்பாத்த மாட்டீங்களா என்று அவலமாக நின்றுகொண்டிருப்பதை பார்க்கும்போது, கையறு நிலையில் கடந்து சென்றேன்.
    அடிமாடுகைள பார்க்கும்போது என்னமோ எனக்குள் பெரும் அதிர்வலை ஏற்படாமல் இல்லை. மாடுகள் என்றாலே எனக்குள் ஏன் இத்தனை வாஞ்சை என்று தெரியவில்லை. ஒரு நாள் அடிமாடுகளை எல்லாம் வாங்கணும். அதை வளர்க்கணும். அதற்கான மரணம் இயற்கையா வரணும் அப்டினு ஆசை. இப்டி ஆசை.... என்னைப்போல் மாடுகளின் பிரியர்களுக்கும் நிச்சயமாக இருக்கும்.
    என்னதான் மனசுக்கு சமாதானம் செய்தாலும், கேட்கல, இப்ப கூட அந்த கன்றுகளை காப்பாற்ற முடியவில்லையே என்று மனசு கதறுகிறது. உணவுசங்கிலி ல மனிசன ஏன் விலங்குகள் விட்டு வைத்தது என்ற கேள்வியோடு ?
    நாளைக்கு ஒரு பாரமாடுகள் பற்றிய வீடியோக்கு போகின்றோம். மதுரையில் இந்த வகை மாடுகளை பயன்படுத்துபவர்கள் மிக மிக குறைவு. லாடம் அடிக்கும் வீடியோவில் அந்த மாட்டுக்காரர் அய்யாவை சந்தித்தோம். அந்தகாலத்து எஸ்.எல்.சி. படித்தவர். டச் ஸ்கிரீன் மொபைல் என்று செமையா பேசினார்.
    காலை 11 மணிக்கு அவரைதான் சந்திக்க போகின்றோம். இந்த மாடுகள் அவ்வளவு அழகு. கொம்புகளும் அதன் முக அமைப்பும் அப்படி எனக்கு பிடிச்சு போச்சு. அது எந்த வகையான மாடு என்பதை நாளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நாளை பயண அனுபவத்தை நாளை மறுநாள் உங்களிடம் பகிர்கின்றேன்.
    நன்றிகள் !!
    கோழி, புறா கூண்டு முகவரி
    பொன்னுச்சாமி பெட்டி கடை
    வைகை ஆத்து ரோடு, இஸ்மாயில்புரம் 6வது தெரு,
    முனிச்சாலை, மதுரை /19.
    தொலைபேசி எண் 98650 18127, 9095668044.

Комментарии • 45

  • @vijayrajaliyar546
    @vijayrajaliyar546 3 года назад +15

    😍😍😍சேவல் வளர்க்கும் அணைத்து சோக்காளிக்கும் நல்ல பதிவு 🔥🔥👍

  • @selvamani3795
    @selvamani3795 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணே💯

  • @ragul7753
    @ragul7753 3 года назад +1

    ப்ரோ அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    Theliva kelureenga semaaa.... 👌👌👌👌👌👌👌👌

  • @GSIVA-mg4xt
    @GSIVA-mg4xt 3 года назад

    அருமையான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள் anna

  • @prakashperumal5640
    @prakashperumal5640 3 года назад

    அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருமையான பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள ஒன்று தொடர்ந்து பதிவுகளின் பயணங்கள் தொடரட்டும்

  • @NK_vlogs_king
    @NK_vlogs_king 3 года назад +2

    First view and like

  • @sureshkumarkutty4717
    @sureshkumarkutty4717 3 года назад +1

    Tharamana seika bro

  • @pmkbirds9074
    @pmkbirds9074 2 года назад +1

    Thank you bro seval kundu vakeden

  • @vallaivallai3577
    @vallaivallai3577 2 года назад +4

    Chennai delivery erukka ?
    Pura kundu vendum. 🤔😌

  • @visaganrani6676
    @visaganrani6676 3 года назад

    Gauges super sir.....

  • @vignesh.s6902
    @vignesh.s6902 3 года назад +1

    Pottamari seval pathi podunga

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 3 года назад

    சூப்பர் ப்ரோ

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow Год назад +3

    Delivery irrukka bro

  • @shesanraja9758
    @shesanraja9758 3 года назад

    Good useful vedio

  • @aggressiveempire934
    @aggressiveempire934 3 года назад

    Uncle romba nanri neenga seval vachurukingala

  • @jamsheelaas8029
    @jamsheelaas8029 2 года назад +1

    Keralavukk delivery irukka 🤔

  • @visaganrani6676
    @visaganrani6676 3 года назад +1

    Koranjavela na yevalavu varum sir

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад

    👍👍👍👌👌

  • @TRICHYPIGEONLOFT2009
    @TRICHYPIGEONLOFT2009 3 года назад

    🔥🔥🔥❤️👍👍👍

  • @suthan8627
    @suthan8627 3 года назад +1

    Bro nagercoil iku pura kuda delivery iruka

  • @moulisivaratchagan2551
    @moulisivaratchagan2551 3 года назад

    👍👌❤️

  • @alexrajraj9918
    @alexrajraj9918 3 года назад

    Ariyalur Ku 4 doors Irukura Madhiri Cage Parcel panna Mothama Evvalavu Aagum Bro....

  • @SalaHassan-jq1fg
    @SalaHassan-jq1fg 11 месяцев назад

    Nagercoil

  • @vichuzr1237
    @vichuzr1237 3 года назад +3

    நாய்களுக்கான கூண்டுகளும் இங்கு கிடைக்குமா... அல்லது எங்கு கிடைக்கும்...

    • @maniraj2113
      @maniraj2113 3 года назад

      Kombai vishnu

    • @vichuzr1237
      @vichuzr1237 3 года назад

      @@hellomadurai நன்றிகள்

  • @rishwanthrishwanth6947
    @rishwanthrishwanth6947 3 года назад +1

    Bro intha cage rate evalavu bro

  • @vishvaaravinthg8782
    @vishvaaravinthg8782 10 месяцев назад

    20 seval ataiuramari kondu venum thala yavalo amount

  • @nkshorts_12996
    @nkshorts_12996 11 месяцев назад

    10 koli koondu evlo varum malai veyil thangra mari

  • @MThiyagarajanA
    @MThiyagarajanA Год назад

    Kundu seiya palagai engu kedaikum

  • @lovlydovlypets1040
    @lovlydovlypets1040 3 года назад

    Munichalai enga area

  • @saravanaperumal747
    @saravanaperumal747 2 года назад

    U namper anna

  • @SathishKumar-nc6xc
    @SathishKumar-nc6xc 3 года назад

    சென்னைக்கு அனுப்ப முடியுமா

  • @thinapradeep4000
    @thinapradeep4000 3 года назад +1

    Bro 6 room ulla koondu enna price bro

  • @MThiyagarajanA
    @MThiyagarajanA Год назад

    Salem anupa mudiuma

  • @VasanthKumar-uh2bo
    @VasanthKumar-uh2bo 3 года назад

    Dailvary irrka

  • @NAINEEREALESTATE
    @NAINEEREALESTATE 3 года назад

    சென்னையில் கோழி கூண்டு செய்பவர்கள் இருக்கிறர்களா?

  • @lesnaraugustin6596
    @lesnaraugustin6596 2 года назад +1

    கோழி கூண்டு செய்யும் பலகை எங்கு கிடைக்கும் அண்ணா?

  • @rajanrajan7465
    @rajanrajan7465 2 года назад +1

    Rajan

  • @edvinmary4538
    @edvinmary4538 3 года назад

    Bro 100 pura irruka cages price enna agum

    • @edvinmary4538
      @edvinmary4538 3 года назад +1

      @@hellomaduraina Kuwait la work pandra enga ooru thirukoilur amount soilu 100 pura rate ok na 200 pura veanu atha bro price soilu ga

  • @Allinalldancers
    @Allinalldancers 9 месяцев назад

    5 கோழி இருக்க கூண்டு