இரவு 10.00 மணி DD தமிழ் செய்திகள் [02.07.2024]

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • 1) நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி திட்டவட்டம்.
    2) மக்களவையில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக் கருத்துக்கள் - மக்கள் மத்தியில் உண்மையை மறுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து.
    3) உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.
    4) நீதிமன்றங்கள் வெறும் செங்கற்களால் ஆனவை அல்ல, மக்களின் நம்பிக்கையாலும், விருப்பங்களாலும் எழுப்பப்பட்டவை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் உரை.
    5) தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்.
    ******இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
    6) நீட் தேர்வை ரத்து செய்ய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
    7) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் - இந்தியா உதவியுடன் அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்.
    8) பிரேசிலில் கனமழைக்கு கு‍றைந்தது 179 பேர் உயிரிழப்பு - பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணிகள் தீவிரம்.
    9) தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் - வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் 4ம் தேதிவரை கனமழை எச்சரிக்கை.
    10) விம்பிள்டன் டென்னிஸ் - காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே.

Комментарии • 2

  • @MS_RAJAGOPALAN
    @MS_RAJAGOPALAN 3 месяца назад

    அற்புதமான செய்தி வாசிப்பு
    திரு.சங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்
    மெம்மேலும் வளர்க
    KEEP IT UP THE GREAT DD TAMIL

  • @sripriyan3554
    @sripriyan3554 3 месяца назад

    I watch DD only to read your news
    Wonder full Shankar