ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? | Fluent Forever Book Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Get your copy of 'Fluent Forever' book: amzn.to/3YGh1kH
    Remnote invite to try (free version available): tinyurl.com/4v...
    எனது (இங்கிலிஷ்) தேவதைகள் | My (English) Angels | ஆங்கிலம் எனும் கதவு: • எனது (இங்கிலிஷ்) தேவதை...
    ***
    குழந்தைகள் மொழி கற்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?
    மொழி கற்றலின் ஐந்து அடிப்படை விதிகள் என்ன?
    ஏன் பாரம்பரிய மொழி கற்கும் உத்திகள் பெரிய பலன்கள் அளிப்பதில்லை?
    இன்றைய சூழலில் மொழி கற்க உள்ள புதுக் கருவிகள் எவை? (பல இலவசமாகக் கிடைக்கின்றன)
    மொழி கற்பதை விளையாட்டாக அணுகுவது எப்படி?
    ***
    உலகில் முதன்முறையாக நெடிய மொழி வரலாற்றில் சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்தவன் நான். ஆனால், மொழி கற்றலுக்கு எனக்குமான உறவு ஆரம்பத்தில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அது ஆங்கிலம் கற்பதிலிருந்து துவங்கியது.
    சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் தமிழ் வசமானது. ஆனாலும் பள்ளியில் தமிழில் சராசரி மதிப்பெண் தான். வாழ்க்கை சடாரென்று திசை மாறி +1இல் இங்கிலிஷ் மீடியம் சேர்ந்ததும் கை கால் உதறியது. கல்லூரிப்படிப்பும் போராட்டமாகத் தொடர்ந்தது. தமிழ் மேடைகள் மனஉறுதி தந்தன. ஆனால், மொழிப் பாடங்களிலும் சேர்த்து, ஒரு சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாகவே தொடர்ந்தேன்.
    மற்ற பாடங்களோ மொழியோ, விஷயம் சப்ஜெக்ட்டில் இல்லை, கற்கும் முறையில் இருக்கிறது என்று புரிந்தபோது, “ச்சீ! இதுக்கா பயந்தோம்!?” என்று விட்டுப்போனது.
    அதன் பிறகு, மொழியிலும் ஏறு முகம் தான்.
    இந்திய அயலுறவுப் பணியில் சேரும் அலுவலர்கள் ஒரு கட்டாய அயல் மொழியைக் கற்க வேண்டும். எனக்கு வாய்ப்பிருந்த நான்கைந்து மொழிகளில் சீன மொழியைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் இரண்டு: 1. எனக்குச் சீனமொழி துளியும் தெரியாது. 2. அது உலகின் மிகக் கடினமான மொழிகளில் ஒன்று என்று சொன்னார்கள்.
    பிறகு நடந்தவை, வரலாறு. எனது ஐந்து நூல்களில் இரண்டு சீனமொழியை அறிமுகப்படுத்துவன. மீதி இரண்டும் சீனமொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்புகள். அதில் முதலில் வந்த ‘கவித்தொகை: சீனாவின் சங்க இலக்கியம்’ என்கிற நூல் தான் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பில் வந்த முதல் நூல் என்று தெரியவந்தபோது, எனது பள்ளிக்கால மொழிப்பாட மதிப்பெண்களையும் நினைத்துக்கொண்டேன்.
    மொழி கற்றல் என்பதும் ஒரு திறமை தான். சரியான வழிகாட்டல் இருந்தால், யாரும் புது மொழிகளைக் கற்று பல மனங்களையும் புத்தம்புது உலகங்களையும் திறக்கலாம். இந்தக் காலத்தில் இது இன்னும் எளிதாகியிருக்கிறது.
    ஆனால், இப்போதைய எல்லா விஷயங்களையும் போல, இதிலும் உங்கள் வழிகாட்டிகளை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    இந்தப் பின்னணியில், மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளைத் தொடும் நூல்கள் எனக்குப் பிரியமானவை. நடைமுறையில் பயன்படும் விஷயங்களை எளிதாகச் சொல்லும் நூல்கள் அரிது. அவற்றில் நிச்சயமாக இடம்பெற வேண்டிய நூல் இது: Fluent Forever: How to Learn Any Language Fast and Never Forget It by Gabriel Wyner (“எப்போதும் சரளமாக: எந்த மொழியையும் விரைவாகக் கற்றுக்கொள்வதும் அதை மறக்காமல் இருப்பதும் எப்படி?” - கேப்ரியல் வைனர்)
    Fluent Forever என்கிற மொழி கற்கும் இணைய தளத்தை நிறுவி, அதன் மூலம் தனது மொழி கற்கும் வழிமுறைகளைச் சொல்லித்தரும் கேப்ரியல் வைனர், அமெரிக்காவில் மேற்கத்திய செவ்விசைப் பாடகர். ஐரோப்பா சென்று இசை கற்றுக்கொண்டபோது மொழி தடையாக இருக்கவே, மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு வெற்றி கண்டவர். இப்போது பன்மொழி வல்லுனர் (polyglot).
    அவருடைய நூலை அறிமுகம் செய்து, அதிலுள்ள முக்கிய விஷயங்களைப் பேசியிருக்கிறேன்.
    ***
    🌐📷💙🦜👔📽️ bio.link/dharan
    ***
    நான் யார்?
    🌳 ஸ்ரீதரன். சென்னை.
    👔 இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service). எனவே, நாடோடி.
    📕 உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி/சைக்கிள் பயணம் பற்றி 5 நூல்களின் ஆசிரியர்.
    Music Vlad Gluschenko - Autumn Walk - Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0

Комментарии • 131

  • @Payani
    @Payani  2 месяца назад +5

    வீடியோவைப் பார்த்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி! 🙏 மறக்காம Subscribe பண்ணுங்க 💐🥰👍 : bit.ly/YesPayani

  • @dhanaassociate7009
    @dhanaassociate7009 Год назад +29

    புதிய மொழியையும், புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ள துடிக்கும் அனைவருக்கும் மிக சிறந்த பாடம்.

    • @Payani
      @Payani  Год назад

      மிக்க நன்றிங்க! 🙏🌺🌹

  • @neethiraja4878
    @neethiraja4878 2 месяца назад +3

    ஐயா
    , எனக்கு இன்று வரை மொழியை கற்பதில் தடுமாற்றம் தான். உங்கள் வீடியோ உற்சாகமாக இருக்கிறது

    • @Payani
      @Payani  2 месяца назад

      ரொம்பப் பெரிய விஷயம் இல்லை. சந்தோஷமா, விளையாட்டா பேசிப் பழகுங்க. வாழ்த்துகள்!

  • @muhammedibrahim4980
    @muhammedibrahim4980 Год назад +8

    அருமை ஐயா, நன்றி சார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். F = -F கூற்றின் படி உங்களுக்கும் நல்லவை விளையட்டும் ...

    • @Payani
      @Payani  Год назад

      மிக்க நன்றிங்க! 🌻

    • @Quotes123Quizzes
      @Quotes123Quizzes Месяц назад

      Whats that F=-F ?

    • @muhammedibrahim4980
      @muhammedibrahim4980 23 дня назад

      @@Quotes123Quizzes in physics newton's 3 rd law.
      Every action is an equivalent to opposite reaction.

  • @jaisart8992
    @jaisart8992 Месяц назад +1

    ஐயா சிறப்பான பதிவு, ஐயா அப்படியே journal எழுதுவது எப்படி மற்றும் dairy எழுதுவது எப்படி, அதை பற்றி ஒரு விளக்க விடியோ ஒன்னு போடுங்க ஐயா

    • @Payani
      @Payani  Месяц назад

      மிக்க நன்றிங்க! 🙌 Journal எழுதுவது பற்றி அவசியம் பேசுகிறேன் . நான் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன் . பயனுள்ளதாக இருக்கிறது .

  • @lovelivingbeingschannel1803
    @lovelivingbeingschannel1803 2 месяца назад +1

    Sir i am also studied in Tamil medium upto 10 th standard and studied 11th &12th in English medium. Now I am preparing for UPSC exam. It's like miracle a person same like me.

  • @maniprabhu2825
    @maniprabhu2825 Месяц назад +2

    எனக்கு ரஷ்யா மொழி கத்துக்க ஆசையா இருக்கு.
    ஒரு நல்ல வழி சொல்லுங்க 🙏

    • @Payani
      @Payani  Месяц назад

      அயல்மொழி கற்றுக்கொள்ளும் apps முயலுங்கள். யூடியூபில் தேடிப்பாருங்கள். மொழி என்பதால், நூலாக வாசிப்பதை விட, ஒலியாக, ஒளியாக உள்வாங்குவது வேகம் கூட்டும். வாழ்த்துகள்!

  • @dossjeyakumar557
    @dossjeyakumar557 2 месяца назад

    மிகவும் பயனுள்ள காணொலி..... புதிய மொழியை கற்க மிக அருமையான வழிகாட்டி...

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க! 🙌

  • @vanumas
    @vanumas 2 месяца назад +2

    பிற மொழியை கற்பதற்கு உஙகள் பதிவு எனக்கு ஊன்றுகோலாக அமைந்தது. மிகவும் எளிமையான வழிகளை அமைத்துக்கொடுத்தற்கு நன்றி !

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! 🌹

    • @DhanaLakshmi-bf4dk
      @DhanaLakshmi-bf4dk 2 месяца назад

      😊😊p po😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊m0😊p po

  • @gobikumar5282
    @gobikumar5282 2 месяца назад +1

    தரமான தகவல். மிக்க நன்றி..

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க! ️

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 2 месяца назад

    வாழ்க்கைக்கு உபயோகமான பதிவு
    நன்றி ஐய்யா

    • @Payani
      @Payani  2 месяца назад +1

      மிக்க நன்றிங்க! 🙌

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 месяца назад

    மிக எளிமையான நம்பிக்கை தரும் பதிவு.. நன்றி❤

    • @Payani
      @Payani  2 месяца назад

      மகிழ்ச்சிங்க. நன்றி!

  • @thennavan7
    @thennavan7 2 месяца назад

    மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! 🌻

  • @drjms12
    @drjms12 2 месяца назад

    You are being very down to earth. Learning a new language is feasible only if it is necessary and not as a passion. Do you agree sir

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya 2 месяца назад

      Not like that. When you're in need, you can't immediately learn a language. You need at least a few a year to practice. So start learning before you think

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க. புது மொழி கற்கும் அவசியம் வந்தால் (வேலை, காதல், பயணம்...) அந்த மொழி பேசும் சூழலில் இருப்போம் என்பது ஒரு அனுகூலம் தான். ஆனால், ஆசைக்காகப் படித்து பயன் பெறுபவர்கள் எக்கச்சக்கம் உண்டு. முயலுங்கள். வாழ்த்துகள்.

  • @ChelvanKKara
    @ChelvanKKara 2 месяца назад

    Much Obliged. By this I verified myself that I am on right track.

    • @Payani
      @Payani  2 месяца назад

      Glad to hear this. Thanks!

  • @M.Sweatha
    @M.Sweatha Месяц назад

    அருமையான பதிவு அய்யா 🙏🏻

    • @Payani
      @Payani  Месяц назад +1

      மிக்க நன்றிங்க! 🙏

  • @krishna_saadhu
    @krishna_saadhu 2 месяца назад

    Wow.very interesting sir. I am a portrait artist. Not only i have passion of english language. I have been studying vocabulary everyday

    • @Payani
      @Payani  2 месяца назад

      Glad to know. Best wishes. Cheers!

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 месяца назад

    Really really very useful video, i am interested in learning languages, so it is very useful sir. Thanks to universe.

    • @Payani
      @Payani  2 месяца назад

      So nice of you. நன்றிங்க! ❤

  • @thangarathinamj4878
    @thangarathinamj4878 2 месяца назад

    மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி ஐயா!

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! ️🙏

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Год назад +2

    பிரமாதமான வீடியோ சார் தங்களது பணி சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளது வாழ்த்துக்கள் 🌺🌹

    • @Payani
      @Payani  Год назад

      நன்றிங்க! 🙏

  • @rameshm425
    @rameshm425 11 месяцев назад +1

    Good message sir. I am 52 years old how to develop my english sir. Spoken &writing.

    • @Payani
      @Payani  6 месяцев назад

      மிக்க நன்றிங்க! 🙌 Best wishes!

  • @vigneshwarannaval4
    @vigneshwarannaval4 Месяц назад

    அருமை ஐயா🙏

    • @Payani
      @Payani  Месяц назад

      மிக்க நன்றிங்க! 🌺

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 5 месяцев назад +1

    Useful Video, Thank you for sharing this wonderful video

    • @Payani
      @Payani  4 месяца назад

      You are most welcome. Cheers!

  • @sadasivamchinnathambi9624
    @sadasivamchinnathambi9624 2 месяца назад +2

    So nice sir

    • @Payani
      @Payani  2 месяца назад

      Thanks! 🌸

  • @Quotes123Quizzes
    @Quotes123Quizzes Месяц назад +1

    Sir, I'm 66 now. Is it possible to learn the Hindi language? Nowadays, wherever we move around our country, all the people speak in Hindi only, even though they know English.

    • @Payani
      @Payani  Месяц назад

      These tips are applicable to learn anything at any age. Best wishes.

  • @ishakumaran
    @ishakumaran 2 месяца назад

    அற்புதமான பதிவு !

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! 🙏

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 месяца назад +2

    Sir, Voice , very low !!!!..

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! 🌸 அடுத்த வீடியோக்களில் இந்த விஷயத்துக்கும் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.

  • @nithi178
    @nithi178 8 дней назад

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்ன பழமொழி உண்மையா? ஒரு சிறு குழந்தைகள் மொழிகளில் வரும் ஒலியை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியவர்கள் புரிந்து கொள்ள எளிதாக முடிவதில்லை. இதற்கு காரணம் மனம் வளர்ச்சி பெற்றதா? அல்லது?

    • @Payani
      @Payani  7 дней назад +1

      1. அந்தப் பழமொழி கற்றல் பற்றிய விஷயத்துக்குப் பயன்படுத்தல் ஆகாது. காலம் தாழ்த்தியும் கற்கலாம்.
      2. குழந்தைகள் ஒலியைப் 'புரிந்துகொள்வது' இல்லை - சும்மா, காப்பி அடிக்கிறார்கள். நாமும் மிமிக்ரி போல காப்பி அடிக்கக் கற்றுக்கொண்டால், மொழிகள் கடினம் இல்லை. நாம் இலக்கணம் புரிந்து படிப்பதால், நாம் கற்கும் வேகம் மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

  • @sukran4867
    @sukran4867 2 месяца назад

    வாழ்த்துக்கள் சேர்.சேர் நீங்கள் கொரிய மொழியை எப்படி இலகுவாக கற்றுக் கொள்வது என்பது என்பதினை எழுதியுள்ளீர்களா..அவ்வாறு எழுதி இருந்தால் தயவுவசெய்து குறிப்பிடவும்ஏனென்றால் கொரியாவுக்கு வேலைக்கா செல்வதற்கு இருக்கின்றேன்.அதற்கு கொரி Exam பாஸ் பண்ண வேண்டும்.

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க. கொரிய மொழி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் நான் கொரியா போயிருந்த சில நாட்களில் அவர்களின் தெருப் பெயர்களைப் படிக்கக்கூடிய அளவுக்கு எளிதான எழுத்து முறை என்பதை அறிந்தேன். தமிழுக்கும் கொரிய மொழிக்கும் உள்ள உறவுகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டேன்.
      இந்த வீடியோவில் சொல்லியிருப்பது எல்லா மொழிகளுக்கும் (எல்லா விஷயங்களுக்கும்) உதவும். உங்கள் கொரிய மொழிப் பயணம் சிறக்க வாழ்த்துகள். மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

    • @sukran4867
      @sukran4867 2 месяца назад

      @@Payani நன்றிகள் சேர்

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 Год назад +2

    Thank you, Sir. I am following and you are my inspiration, sir. In my school days, most of the words are mispronounced by my school teacher since I studied in a Tamil Govt school so if anyone pronounces the words in differently I don't feel comfortable and felt very bad. Is it possible to learn pronunciation properly now? 1. Pronunciation 2. No translation 3. SRS - Spaced Repetition. Thank you, sir. Feeling interested to learn after watching your videos. Thank you so much sir !

    • @Payani
      @Payani  Год назад +1

      Excellent. உச்சரிப்பைக் கற்றுக்கொள்ள இப்போதெல்லாம் நிறைய வழிகள் உள்ளன. சும்மா, யூடியூபில் 'How to pronounce [comfortable / excellent / omnipresent]?" என்று தேடினாலே போதும். Google search கூட இப்போதெல்லாம் உச்சரிப்பு (வாயசைப்பு உற்பட) உதவி தருகிறது.
      இந்தச் சானல்களையும் பார்க்கலாம்:
      www.youtube.com/@bbclearningenglish
      www.youtube.com/@englishwithcollinsdictionary
      Best wishes.

    • @3LegalBrains
      @3LegalBrains 8 месяцев назад

      அருமையான விளக்கம் ஐயா. நான் 60 வயதில் ஹிந்தி பாஷை கற்று வருகிறேன். தங்களது பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.🎉

    • @ganeshvinayagam9021
      @ganeshvinayagam9021 2 месяца назад

      Please don’t blame school teachers………..They are patient and make sure that each and every child learns in the class

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 9 месяцев назад +1

    Thank you master

    • @Payani
      @Payani  6 месяцев назад

      மிக்க நன்றி, ஷண்முகப்ரியா! 🙏

  • @sambamurthysubramaniam3856
    @sambamurthysubramaniam3856 2 месяца назад

    Sir, I would love to learn Mandarin Chinese.
    Can you please suggest some of your books and the way to buy them?
    Much obliged.
    Thank you

    • @Payani
      @Payani  2 месяца назад

      Glad to know. Instead of 'books,' go for language learning apps or websites. They are more useful.

  • @Johabz
    @Johabz 9 месяцев назад +1

    Valuable information

    • @Payani
      @Payani  6 месяцев назад

      Glad you think so! மிக்க நன்றிங்க! 🌸

  • @robertthilson9496
    @robertthilson9496 2 месяца назад

    Sir konjam sound aga pesungal

    • @Payani
      @Payani  2 месяца назад

      பின்னூட்டத்துக்கு நன்றிங்க. கவனத்தில் கொள்கிறேன்.

  • @vathsalasivaraj9074
    @vathsalasivaraj9074 2 месяца назад

    Thanks sir ❤🇱🇰❤

    • @Payani
      @Payani  2 месяца назад

      Most welcome. Cheers!

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Год назад

    சிறப்பு சார் 🌹
    மேலும் தங்களது பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள் 🌺

    • @Payani
      @Payani  Год назад

      மிக்க நன்றிங்க! 🙌

  • @SR-YC
    @SR-YC 4 месяца назад +1

    Great sir

    • @Payani
      @Payani  3 месяца назад

      மிக்க நன்றிங்க! 🙏

  • @hamshihamsu5461
    @hamshihamsu5461 2 месяца назад

    god bless you

    • @Payani
      @Payani  2 месяца назад

      👍

  • @sugumaranb1986
    @sugumaranb1986 3 месяца назад

    Super sir thank you

    • @Payani
      @Payani  2 месяца назад

      So nice of you. Thanks!

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 месяца назад

    Amicala spelling and meaning please?

    • @Payani
      @Payani  2 месяца назад

      Amygdala. அது நம் மூளையில் உள்ள ஒரு பகுதி. இந்த விக்கி தகவலைப் படித்துப் பாருங்கள். உதவக்கூடும். நன்றி.
      en.wikipedia.org/wiki/Amygdala

  • @zakeerkhan4243
    @zakeerkhan4243 2 месяца назад

    Easyana language English a sariyaha pronounce a pesikka kastam aha ikudu. Your great sir ... please give me a some idea learn trick

    • @Payani
      @Payani  2 месяца назад

      மற்றவர்கள் பேசக் கேட்பதும் அதைப்போல சொல்ல முயற்சிப்பதும் பயன் தரும். வாழ்த்துகள்.

  • @vijinatraj902
    @vijinatraj902 2 месяца назад

    Tq

    • @Payani
      @Payani  2 месяца назад

      All the best

  • @Gowsikgounder
    @Gowsikgounder 2 месяца назад

    ஐயா எனக்கு ர மற்றும் ற எழுத்து உச்சரிக்க முடியவில்லை ஐயா என்ன செய்வது என்று கூறுங்கள். மொழிகளை கற்பதில் மிகப்பெரிய பின்னடைவு எனக்கு ஏற்படுகிறது. தயவு கூர்ந்து கூறவும்

    • @Payani
      @Payani  2 месяца назад +1

      //உச்சரிக்க 'முடியவில்லை'// என்னும் விஷயம் புரியவில்லை, நண்பரே. அந்த ஒலிகளின் வேறுபாட்டை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப் புரிந்துகொண்டு பழகிப்பாருங்கள். அந்த ஒலிப்புகளை வீடியோக்கள் மூலம் தெரிந்துகொண்டும் பழகலாம். வாழ்த்துகள்!

    • @Gowsikgounder
      @Gowsikgounder 2 месяца назад

      @@Payani ர மற்றும் ற எழுத்து பேச முடியாது ர என்றால் அல்லது வ என்று தான் கேட்கும். அது தான் ஐயா என்னுடைய பிரச்சினை. இருந்தாலும் தாங்கள் கூறியமைக்கு நன்றி

    • @ganesan-j9h
      @ganesan-j9h 2 месяца назад

      Thank you, From your guidance I am going to learn HEBREW, Now I am in Israel.

  • @KumaravelP-uk6dl
    @KumaravelP-uk6dl 2 месяца назад

    Please sir where are sir

    • @Payani
      @Payani  2 месяца назад

      வணக்கம், குமரவேல். என்ன கேக்கறீங்கன்னு சரியா புரியவில்லை . கொஞ்சம் விளக்கமா கேளுங்க. நன்றி.

  • @MohamedSuath
    @MohamedSuath 2 месяца назад

    புதிய மொழி என்பதை விட புதிய விடயம்

    • @Payani
      @Payani  2 месяца назад

      ஆமாம். மொழியும். நன்றிங்க.

  • @mohamedsaleem7706
    @mohamedsaleem7706 2 месяца назад

    Arumai Sir

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! 🌻

  • @sivakumar-qs6se
    @sivakumar-qs6se 10 месяцев назад

    Thank you sir

    • @Payani
      @Payani  6 месяцев назад

      மிக்க நன்றிங்க! 🌸

  • @loveall4969
    @loveall4969 2 месяца назад +1

    👍

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க! ️

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 2 месяца назад

    11:17 11:17

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 месяца назад +1

    Super super super

    • @Payani
      @Payani  2 месяца назад

      Thank you so much.

  • @Sivahfn
    @Sivahfn 2 месяца назад

    ஐயா எனக்கு தயக்கமாக இருக்க

    • @Payani
      @Payani  2 месяца назад +2

      உங்களுக்கு மட்டும் இல்லைங்க. எல்லாருக்கும் ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். சும்மா விளையாட்டா அடிச்சி ஆடுங்க. :-)

    • @Sivahfn
      @Sivahfn 2 месяца назад

      Endha mozhi kathukalam enru neenga konjam advise pannunga. 1.French 2. Japanese ​@@Payani

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 месяца назад

    Your voice is very low sir

    • @Payani
      @Payani  2 месяца назад

      நன்றிங்க. இனிவரும் வீடியோக்களில் இந்த விஷயத்தை இன்னும் கவனத்துடன் செய்கிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  • @raghuramsrinivasan1371
    @raghuramsrinivasan1371 Год назад

    • @Payani
      @Payani  Год назад

      🌸🙏🌹

  • @yasswanth8472
    @yasswanth8472 10 месяцев назад +2

    Get a girlfriend or boyfriend in that particular language to learn faster

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 месяца назад

    R u priest

    • @Payani
      @Payani  2 месяца назад

      No. Why?

  • @karthikeyanshanmugam-d2q
    @karthikeyanshanmugam-d2q 2 месяца назад

    useless

    • @Payani
      @Payani  2 месяца назад

      hmm. why so? In what way this could be improved to make it more useful?

  • @shaaradhabaalub5571
    @shaaradhabaalub5571 9 месяцев назад +1

    Thank you so much sir ur video is very motivational for me im a student i need to contact you help me out to reach u sir im from chennai

    • @Payani
      @Payani  6 месяцев назад

      நன்றிங்க! 🌻 Best wishes.

  • @JanarthananNs
    @JanarthananNs 2 месяца назад

    Very nice sir

    • @Payani
      @Payani  2 месяца назад

      மிக்க நன்றிங்க! 🙌