புதுச்சேரியில் அரிச்சுவடி மனநிலை மையத்தில் குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • புதுச்சேரியில்
    அரிச்சுவடி மனநிலை மையத்தில் குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..
    ஜனவரி 26 2025 ஆம் வருடம் குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    அதன்படி புதுச்சேரியில் அரியாங்குப்பம் மணவெளியில் அமைந்துள்ள அரிச்சுவடி மனநல மையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது .
    புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி திலகர் வீதியில் அமைந்துள்ள அரிச்சுவடி மனநல பெண்கள் காப்பகத்தில்
    நாட்டின் 76 வது குடியரசுத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
    பின்னர் கேக் வெட்டி பழம் இனிப்பு ஆகியவற்றை மன நோயாளிகளுக்கு வழங்கி விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
    முன்னதாக குடியரசு தின கேக் வெட்டி அனைவருக்கும் பகிரப்பட்டது.
    மனநல மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    விழாவிற்கு மனநல மைய இயக்குனர் மருத்துவர் இளவழகன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்தார்.
    ட்ரஸ்டி அரசமாதேவி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.
    விழாவிற்கான ஏற்பாட்டினை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Комментарии • 1