காலை 11.00 மணி DD தமிழ் செய்திகள் [18.11.2024]
HTML-код
- Опубликовано: 17 ноя 2024
- 1) பிரேசிலில் இந்திய கலாச்சாரத்தின்படி, பிரதமர் நரேந்திர மோதிக்கு உற்சாக வரவேற்பு - ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்
2) மறக்க முடியாத வரவேற்பு அளித்ததற்கு நன்றி - பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி சமூக வலைதளப்பதிவு
3) மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உறுதி செய்ய நடவடிக்கை - உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா விரிவான ஆலோசனை
4) மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் இன்றுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம் - அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பு
5) தில்லியில் காற்றுமாசை குறைக்க நடவடிக்கை - கனரக வாகனங்கள், கட்டுமானப் பணிகளுக்கு தடை அமலுக்கு வந்தது
6) டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகிற்கு முன்னோடியாக திகழும் இந்தியா - பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் பேச்சு
7) 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைய வேண்டும் - அனைத்து மாநில எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்புவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை
8) விவசாயிகளின் தேவையறிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
9) தனிப்பட்ட வேலைகளுக்கு ஆய்வு மாணவர்களை பயன்படுத்தக்கூடாது - மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்
10) இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமர சூர்ய பதவியேற்பு - ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்
11) லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - ஹிஸ்புல்லாவின் ஊடகப்பிரிவுத் தலைவர் உயிரிழப்பு
12) ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டி - பட்டம் வென்றார் இத்தாலியின் ஜானிக் சின்னா்