தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024
  • தன்னறம் இலக்கிய விருது முன்னெடுப்பின் 2021ம் ஆண்டிற்கான விருதினை எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்குவதில் நிறைகூர்ந்த மகிழ்வுகொள்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை உலராத உயிரீரத்தோடு பதிவுசெய்துவரும் படைப்புத்தொடர்ச்சிக்காக இவ்விருதை நாங்கள் அவருக்குப் பணிந்து அளிக்கிறோம். நொய்யல் ஆற்றின் நீர்ப்பெருக்கு போல, எளிய மனிதர்களின் வாழ்வுக்கதையை இரத்தமும் சதையுமாகத் தன்னுடைய படைப்பின்வழியாக பாவனையின்றி வெளிப்படுத்தும் தேவிபாரதி அவர்களின் அகம் கொண்டிருக்கும் தாகம் எக்காலத்தும் வற்றாதது. காலங்கள் கடந்தும் இவருடைய படைப்புகள் நிச்சயம் அதிர்வுகளை உருவாக்கும்.
    எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் தன்னுடைய வாழ்வுப்பாதை குறித்து நினைவு மீள்கிற அனுபவ உரையாடலே இக்காணொளிப் பதிவு. பாரதி கோபால், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், விமல் ஆகிய தோழமைகளின் கூட்டுழைப்பில் இது சாத்தியமடைகிறது.
    நன்றியுடன்,
    தன்னறம் நூல்வெளி
    9843870059 / www.thannaram.in

Комментарии • 38

  • @starmohan8145
    @starmohan8145 27 дней назад

    அனைத்து துன்களையும் அனுபவித்தாலும் யாரிடமும் எவ்வித சமரசங்கள் செய்யாமல் துனிந்து செயல்படுகிறவர் தேவி.

  • @punithasripunithasri6365
    @punithasripunithasri6365 2 года назад +25

    எங்கள் பெரியப்பா என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் வணங்குகிறேன் 🙏🙏

  • @radhamalaradha9094
    @radhamalaradha9094 5 месяцев назад +1

    உண்மை எளிமை நேர்மையான பேச்சு

  • @joelprabhakaran5066
    @joelprabhakaran5066 3 месяца назад

    🥺🖤 Indha manushan pesnaale kannula thanni varudhu enaku
    Kaaru mama ku na imagine panna uruvame ivar dhan

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 10 месяцев назад +1

    மிக அருமையான புத்தகம் நீர்வழிப் படூஉம் மிக எளிய நடையில் செறிவான அனுபவங்களின் தொகுப்பு.. படித்து முடித்து நாவலை அசைபோடும்போது வாழ்தல் எவ்வளவு சிறப்பானது என்பதை பல அனுபவங்களின் ஊடாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது .. வாழ்தல் அந்த கணத்தில் முழுமையாக இருத்தல் .. குறை நிறைகளை தாண்டிய மனித மாண்பும் இந்த வாழ்வும் மிக பெரியது..

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 года назад +7

    வாழ்க்கையில் மிச்சம் என்பது ஏதுமில்லை. அனுபவங்கள் என்பதைத் தவிர. (தேவிபாரதி).
    மாறாத அன்பு கொண்ட தேவிபாரதி வாழ்க பல்லாண்டு .

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 11 месяцев назад +2

    சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தோழர்

  • @amirthavarshinip9758
    @amirthavarshinip9758 2 года назад +11

    he îs My Grand Father We in tirupur avarukku odhappu Seri illa athaan koral varala

    • @pradeepelangovan
      @pradeepelangovan 2 года назад +1

      We love your grandfather. Take care of him. Thank you

  • @MuthiahAnnamalai
    @MuthiahAnnamalai 11 месяцев назад +1

    very nice interview and heartfelt biography by Devibarathi sir

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 11 месяцев назад +1

    சிறப்பு நன்றிங்க தோழர் 🎉❤❤❤❤❤

  • @poonkodiviswanathan1731
    @poonkodiviswanathan1731 11 месяцев назад

    தேவிபாரதி ஐயா தங்களது அலைபேசி எண் எனது தந்தை
    ப.க.பரமசிவன் அவர்கள் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க கூறினர்.
    🙏🙏🙏🙏🙏

  • @sasikala5108
    @sasikala5108 11 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள் இன்னும் நெறைய விருது வாங்க வேண்டும் 🎉🎉

  • @nitthish7273
    @nitthish7273 11 месяцев назад

    சில மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு, பக்குவமடையச்செயகிறது, பிறகுதான் தெரிகிறது இதுக்குத்தான் அந்த ஏற்ப்பாடென

  • @pathiteacheralambadi6810
    @pathiteacheralambadi6810 11 месяцев назад

    வாழ்த்துக்கள் தோழர்

  • @marimuthumazhuvendhi2834
    @marimuthumazhuvendhi2834 11 месяцев назад

    தமிழ் இலக்கிய உயரிய விருதான சாகித்திய அகாதமி விருதுபெற்ற திருமிகு தேவிபாரதி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @vaideegopu
    @vaideegopu 2 года назад +2

    அருமையான நேர்காணல்.தேவிபாரதி அவர்களுக்கு நன்றி

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 2 года назад +3

    அருமையான நேர்காணல். Tolstoy and Destevosky

  • @jithinvenkat1248
    @jithinvenkat1248 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா......

  • @govarthanamsuresh7267
    @govarthanamsuresh7267 2 года назад +3

    வணங்குகிறேன் ❤️❤️❤️❤️

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 11 месяцев назад

    வாசிப்பது சுலபம் வாழ்தல் எவ்வளவு கஷ்டம்...வலி

  • @SathishKumar-qh5lj
    @SathishKumar-qh5lj 11 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @gundammatalkies27
    @gundammatalkies27 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா!!

  • @SafathN
    @SafathN 11 месяцев назад +2

    26:30 கையில் சிகரெட்டோடு பேட்டி கொடுக்க, ஒரு தைரியம் வேண்டும் !

  • @KumarBharAadhi
    @KumarBharAadhi 2 года назад +2

    அந்த கையின் வழியா அவரோட உணர்வ கடத்தி கேமராவின் மூலம் காட்டிய கலைஞனுக்கு வாழ்த்துக்கள்...

  • @saravanakumarm6438
    @saravanakumarm6438 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @UCABCA-AMOHANRAJM
    @UCABCA-AMOHANRAJM 2 года назад +1

    அருமை❤️

  • @s.thiyagaraja6
    @s.thiyagaraja6 2 года назад +1

    background music is very nice.

  • @Kumarshanmugam5
    @Kumarshanmugam5 2 года назад +2

    ❤️🙏

  • @k.murugaboopathy
    @k.murugaboopathy Год назад

    சூப்பர்

  • @muthuvenkat6110
    @muthuvenkat6110 2 года назад +1

    🦋🦋🦋

  • @baskarbaskar8107
    @baskarbaskar8107 2 года назад +1

    என்னாச்சு தேவிபாரதி பேச்சில் எவ்வளவு தடுமாற்றம்?

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 года назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nandh-gx8lw
    @nandh-gx8lw 11 месяцев назад +3

    கொங்கு மண்டலத்தின் சொல்லா ஜாதிய துயர் இவர் வார்த்தைகளில் புரிகிறதா

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 11 месяцев назад

    அண்னே நீங்க சிகரெட் குடிப்பது என்பது உங்க ஆளுமைக்கு சரியா எனக்குப்படலை...வாழ்வென்பதில் சகலமும் உண்டெனிலும் இந்த கானொலியில் நீங்க புகைப்பிடிப்பது வாசகன் என்ற முறையில் பிடிக்கலை...நீங்க எழுதனும் நிறைய புகைப்பிடிப்பதை எங்களுக்கா விடுவிங்களா ?

  • @SureshSuresh-vv6xu
    @SureshSuresh-vv6xu 2 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா.....