கேட்க கேட்க சிந்திக்க வைக்கும் குருவின் பொன்மொழிகள்; பாகம் 4
HTML-код
- Опубликовано: 9 ноя 2024
- #Brahma_Suthrakulu
raja_yoga_patasalai
Polivakkam, #Tirruvallur.
#Tamil Nadu
9361102084
• Video
maps.app.goo.g...
#ராஜயோகப் பாடசாலை
#பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள்.
முருகன் ஆலயம்.
ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.
குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும்.
இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார்.
எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது.
கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம்.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு - தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர்.
#Must_Watch | #Brahma #Suthrakulu | #Tamil
#BrahmaSuthrakulu
#சாமியார்களால் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்
#துன்பம்_எங்கிருந்து_யாரால்_வருகிறது???
#தியானம்_என்றால்_என்ன? #what_is_Meditation
#கடவுளை #எவ்வாறு #வணங்கவேண்டும்
#கோபக்கார_நீங்கள்
#எந்த #கோயிலுக்கு #சென்றால் #என்ன #பலன் #கிடைக்கும்
#யார்_அசைவம் உண்ணக்கூடாது ???
#1_வருடத்திற்கு_முன்னரே_நான்_இதை _கூறிவிட்டேன்
#சர்க்கரை நோய் வர இதுதான் காரணம்
#இளம்வயதில்_மரணம்_ஏன் ??? தப்பிக்க வழி உண்டா ???
#இறந்தவர் வீட்டில் உணவு சாப்பிடலாமா ???
#கஷ்டமே இல்லாமல் சந்தோஷமாக வாழ்வது எப்படி !!!
#மனைவியை தாய்போல் எப்பொழுது நினைக்க முடியும் !!!
#ஒன்றை பிடித்தவருக்கு உண்மை வசப்படும்
#எந்தக் கோயிலுக்குச் சென்றால் நீங்கள் நினைத்தது நடக்கும்
#நீங்கள் அனுபவிக்கும் நோய்க்கு காரணம் இறைவனா ???
#உங்கள் படிப்பு எதற்கு உதவும் ???
#நீங்கள் கும்பிடும் கடவுளைப் படைத்தது யார் ???
#மனம் சொல்வதைக் கேட்கலாமா அல்லது கேட்கக்கூடாதா ???
#Must Watch | Brahma Suthrakulu | Tamil
#கணவன்-மனைவிக்கிடையே நம்பிக்கை இல்லையென்றால் என்னநடக்கும்
#நீ குருடனுக்கு சமம்
#உன் கஷ்டத்திற்கு யார் காரணம்??
#நான்யார்
#நான் பேசினால் சிலருக்குப் பிடிப்பதில்லை
#ஆடம்பரத்தை விரும்பும் மக்கள்
#வாழ்க்கைக்கு திருமணம் அவசியமா
#என் மரணம் எப்படி இருக்கும்
#எது மெய் எது பொய்
#நீங்கள் செய்யும் பாவங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா
#கடவுளுக்கும் வாகனத்திற்கும் என்ன சம்பந்தம்
##BrahmaSuthrakulu