Beauty பாட்டி | 80 வயதிலும் இளமை மாறாமல்அசத்தும் பாட்டி...பாட்டி கைபட்ட சமையலும் பாட்டியின் பாசமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Beauty #vigneshkitchen #sarasussamayal
    என் இனிய பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். சென்ற வாரம் நான் சீர்காழி சென்றிருந்தேன். விக்னேஷ் கிச்சன் விக்னேஷ் வீட்டில் விழாவுக்காக நான் அங்கு சென்றேன். விக்னேஷின் அரண்மனை வீட்டுக்கு செல்லும் முன்பாக விக்னேஷ் பாட்டியை பார்ப்பதற்காக சீர்காழி வீட்டிற்கு சென்றிருந்தேன். நானும் என் கணவரும் சென்றோம். நாங்கள் வருவதை பாட்டிக்கு முன்பே தகவலாக விக்னேஷ் கொடுத்திருந்தார். பாட்டி எங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார். பாட்டியின் கையாலயே எங்களுக்கு விருந்து சமைத்து கொடுத்தார். பாட்டியின் வயதைக் கூட பொருட்படுத்தாமல் எங்களுக்காக தானே சமையல் செய்து தானே பரிமாறி அன்புடன் உபசரித்து எங்களை கவனித்தது எனக்கும் என் கணவருக்கும் மிகவும் மகிழ்ச்சியே. இந்த வயதிலும் பாட்டி மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டியின் உத்வேகம் சுறுசுறுப்பு புத்துணர்ச்சியை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் ஏராளம். இன்றைய இளம் தலைமுறையினர் எப்பொழுதுமே நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்ல விஷயத்தையும் பாட்டி நம்மிடையே தெரிவித்தார். பாட்டியின் சுறுசுறுப்பும் பாட்டியின் சமையலும் ரசிக்கும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. இவ்வளவு பெருமைக்குரிய பாட்டியை சந்தித்து ஆசி பெற்று அதில் எனக்கும் என் கணவருக்கும் மகிழ்வே.பாட்டி தன் வீட்டில் தனக்கு உதவுபவர் களையும் தனக்கு ஈடாக அவர் வைத்திருந்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பாட்டிக்கு 80 வயது சஷ்டியப்தபூர்த்தி விழாவுக்காக தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். இவ்வளவு பெருமைக்குரிய தன்னிகரற்ற பாட்டியை நீங்களும் வணங்கி வாழ்த்துங்கள். உங்கள் அனைவரையும் என்றென்றும் என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன். நன்றி வணக்கம்.

Комментарии • 139