உள்ளது நாற்பது - Ulladu Narpadu - Class 025

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • பக்தி மார்க்கம், ஞானமார்க்கம் இரண்டினிக்கும் மனிதகுலம் அண்ணாந்து பார்க்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்பவர் ஸ்ரீபகவான் ரமணர் ! அத்தகையதோர் அதிசய ஞானி அருளியதே உள்ளது நாற்பது! நான்கு வேதங்களின்; உபனிடதங்களின்; பிரம்ம சூத்திரங்களின்; ஆறு சாஸ்திரல்களின்; பதிணென் புராணங்களின் சாரமாகமாக விளங்குவது இந்த அற்புதப் படைப்பு! அவற்றின் ஸாரத்தை தீந்தமிழ்ச் சொற்களால் சாதாரண அறிவு பெற்றவருங்கூடப் புரிந்து கொள்ளக் கூடியவகையில் நேரடியாக எடுத்தியம்புவது இந்த நூலின் சிறப்பியல்பு! அது மாத்திரமின்றி அவற்றில் காணக்கிடைக்காத, தெளிவுபடுத்தப்படாத; ஆன்மிகப் பயணத்தில் சாதகர் பின்பற்றத்தக்க உளவுகளும் (hints), நுட்பங்களும் (subtleties), நுணுக்கங்களும் (nuances) இந்த நூல் முழுவதிலும் நிறைந்துகிடக்கின்றன. நூலில் பன்னெடுங்காலமாக சர்ச்சைக்குரியனவாக இருந்து வரும் விஷயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அவைகள் வருமாறு: 1. கண்ணெதிரே காணப்படும் உலகம் உண்மையா அல்லது பொய்மை? 2. விதி பெரிதா அல்லது மதி பெரிதா? 3. உலகம் ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டதனால் நாம் அதைப் பார்க்கிறோமா? அல்லது உலகத்தை மனம்தான் கற்பனை செய்கின்றதா? 4. நாம் உண்மையென நம்பி வாழும் மனம் நாம் தானா? அல்லது நாம் வேறு, மனம் வேறா? 5. உடலௗவிலான வாழ்க்கை, மனதளவிலான வாழ்க்கை என்னும் இவையிரண்டிற்கும் அப்பாற்பட்டு ஆன்மிக அளவிலான ஆன்ம வாழ்வு உள்ளதா? இருப்பின் அதை எவ்வாறு உணர்வது? 6. மதங்கள் பற்பல வகையில் மாறுபடுவதேன்? ஆயினும், அடிப்படையில் அவை எவ்வாறு ஒன்றுபடுகின்றன? மதங்களை ஆக்கபூர்வமான மனிதகுல வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது? 7. பக்தி உயர்ந்ததா அல்லது ஞானம் உயர்ந்ததா? 8. மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் சகலரோக நிவாரணியாக ஒரே ஒரு தீர்வு என்பது சாத்யமானதா? 9. ஞானிக்கு ஊழ்வினை உண்டா அல்லது இல்லையா? 10. அஷ்டமாசித்திகளினும் உயர்ந்த சித்தி எது? 11. தன்னத் தான் அறிதல் எவ்வாறு கடவுளை அறிதலாகும்? 12. கால, தேசங்கள் உண்மையில் உள்ளனவா அல்லது நம் கற்பனையா? மேற்கண்ட விவாதத்திற்குரிய நீண்டகால ஐயப்பாடுகளுக்கு இந்த நூலில் நிரந்தரமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவற்றை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இது இந்த நூலின் மற்றோரு சிறப்பாகும். மேலும்,. அருணைமலை சிகரத்தில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தைப்போன்று ஸ்ரீபகவான் ரமணர் என்னும் ஞானமலையில் ஜொலிக்கும் ஞானதீபம் ‘உள்ளது நாற்பது’! மனித வாழ்க்கைக்குப் பொருள் சேர்க்கும் இந்த ஞானப் பொன்னூல் தமிழ்மொழி அறிந்தோர் கண்ணெனக் கருத்தில் வைப்பராக! அத்தகு மெய்யன்பர்கள் ஆன்ம ஞானமும், மோனமும் ஸ்ரீபகவானருளால் பெற்று நிரந்தர சுகமுற்றுப் பொலிவராக! அன்புடன், "முகவைக் கண்ண முருகனடிமை' K.ஸ்ரீராம்

Комментарии • 2