திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி |ALP ASTROLOGY | ALPASTROLOGER SHANTHIDEVI RAJESHKUMAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #BESTASTROLOGERMOORTHI #ALPMOBILEAPPLICATION #MOBILEAPLLICATION
    திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி |ALP ASTROLOGY | ALPASTROLOGER SHANTHIDEVI RAJESHKUMAR
    அனைவருக்கும் வணக்கம்,
    இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
    இன்றைக்கு நிறைய பேர் அட்சய லக்ன பத்ததி மொபைல் சாப்ட்வேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் திருமண பொருத்தம் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.
    பதில் முதல் பக்கத்தில் ஜாதகம் பஞ்சாங்கம் பிரசன்னா திருமண பொருத்தம் இருக்கும். அதில் இரண்டும பிறந்த தேதிகள் கொடுக்கணும். ஆண், பெண்ணுக்கு பிறந்த தேதி, பிறந்த ஊர், பிறந்த நேரம் கொடுக்கணும். திருமண பொருத்தத்தில் பொதுவாக பெண்ணுடைய நட்சத்திரம் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறதா?
    பெண் ஜாதகத்திற்கு ஆண் ஜாதகம் எப்படி இயங்கும்.திருமணம் பொருத்தம் பார்க்கும் முன் இரண்டு ஜாதகத்திற்கு தனித்தனியாக திருமண யோகம் இருக்கிறதா என்பதை பார்க்கனும்.
    இந்தப் பெண்ணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் :மிதுனம்,அட்சய லக்னம் கன்னி லக்னமாக போகிறது, உத்திரம் நட்சத்திரம் இரண்டாவது பாதத்தில் லக்னப்புள்ளி செல்லும். உத்திரம் நட்சத்திரம் நவாம்சத்தில் எந்த புள்ளியை குறிக்கும் என்பதை பார்க்க வேண்டும். முதலில் திருமண யோகம் இருக்கா என்பதை பார்க்கனும். அதாவது ஜென்ம லக்கனத்தை லக்னப்புள்ளி 7வது வீட்டை தொடனும், அட்சய லக்னத்திற்கு 7 வது வீட்டை லக்ன புள்ளி தொடணும்.இந்த நான்கும் இருந்து திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மற்ற நேரத்தில் செய்தால் சிறப்பாக அமையாது. உத்திரம் நட்சத்திரம் 2வது பாதம் சூரியனுடைய நட்சத்திரம்.
    இந்த ஜாதகத்தில் நவாம்ச புள்ளி சூரியனுடைய நட்சத்திரத்தில் உள்ளது. 8,5 சம்பந்தப்படும்பொழுது இந்த பெண்ணிற்கு திருமண வாழ்க்கை இப்பொழுது இல்லை. 4,7 - 1, 7,குறிக்கல அதனால் இந்த நேரத்தில் திருமண யோகம் கிடையாது.
    அட்சயலக்னம் சிம்ம லக்கினமாக இருந்து உத்திரம்நட்சத்திரம்1 ம் புள்ளியில் சென்றிருந்தால் திருமண யோகம் உண்டு.கணவன் ஸ்தானம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கணும். ALP 7ம் வீடு 7ல் நல்ல இடத்தில் உள்ளது.பனிரண்டாம் ஆதிபத்தியம் பெற்ற சூரியன்இந்த லக்னாதிபதியுடன் சேர்ந்துஅட்டமத்தில் உள்ளது.இது பிரச்சனைக்குரிய காலம்.7,1 சம்பந்தப்பட்டவர்களுக்கு சுமூகமான திருமண வாழ்க்கை.சஷ்டாங்கத்தில் குருவும் ,புதனும் சம்பந்தப்படுவதால்இந்த பெண்ணிற்கு எதிர்பார்த்த யோகத்தை தருமா?தராது
    லக்னம் புள்ளி 5ம் இடத்தை தொடுவதால் இந்த ஜாதகருக்கு விருப்ப திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு. உத்திரம்நட்சத்திரம்3 முடிந்து 4 வரும் பொழுது 7ம் வீட்டை தொடும்.உத்திரம் நட்சத்திரம் 4ல் இந்த பெண்ணுக்கு திருமண யோகம் உண்டு.
    ஆணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம்: கன்னி,கன்னி லக்னத்திற்கு அட்சய லக்னம் தனுசு,மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம்,அட்சய லக்னத்தில் ஏழாம் அதிபதி குரு,இந்த லக்னத்திற்குஏழாவது வீட்டை தொடுவதால் திருமண யோகம் உண்டு. 7ம் அதிபதி புதன் 4 -ல் உள்ளது. 4ல்நீச்சமாகி பரிவர்த்தனை ஆகி உள்ளது.ஜாதக அமைப்பு நன்றாக உள்ளது.எட்டாம் இடத்தில் இருக்கக் கூடிய கேது, கொஞ்சம் பிரச்சினைக்குரிய காலம்.திருமண யோகம் இருக்கா? இருக்கு.
    இரண்டு ஜாதகத்திற்கும் பொருத்தம் உள்ளதா?ஆணுடைய கிரக அமைப்பும், பெண்ணுடைய கிரக அமைப்பும் ஒத்துப் போகிறதா? என பாக்கணும்.நடப்பு லக்னத்தில் ALP லக்னம் புதன், ஜென்ம லக்னம். புதன் கன்னி லக்னம், அட்சய லக்னம் தனுசுஅட்சய லக்னத்திற்கு 7ம் இடம் கன்னி,ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் இடம் மீனம், இந்த 4 கட்டங்கள் சம்பந்தப்படும் லக்னம் தான் பெண்ணுடைய லக்னமாக வரணும். நடப்பு ALPலக்னமே பையனுடைய ஜென்ம லக்னமாக அமைகிறது.பெண்ணுடைய ஜென்ம லக்னமே பையனுடைய பையனுடைய ஏழாம் இடமாக அமைகிறது.லக்ன பொருத்தம் இருக்கு.இவர்களுக்கு திருமண பொருத்தம் அமைகிறது.
    மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
    நன்றி, வணக்கம்.

Комментарии • 60