மீளா அடிமை உமக்கே / ஏழாம் திருமுறை / SARGURUNATHAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 12

  • @kameswaribalasubramaniam1759
    @kameswaribalasubramaniam1759 5 месяцев назад

    இப்பாடல் உணர்ச்சி மிக்க பாடல் உள்ளம் உருகி பாடுவதால் பக்தி ஊற்றெடுக்கிறது அருள் பெற்று ஆனந்தம் பெறுகிறோம் 🙏🙏

  • @ganesana1490
    @ganesana1490 3 месяца назад

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏⚘️❤️✨️💖🕉

  • @nagarajans1463
    @nagarajans1463 Год назад

    Kabali Anna namaskaram super super migavum nandraga ulladu

  • @sakashravelavan418
    @sakashravelavan418 4 года назад +1

    திருவாசக செந்நாவலரின் காந்த குரலில் மீளா அடிமை பாடல் மிக அற்புதமாக உள்ளது. இப்பாடலை இயற்றிய சுந்தரரே நேரில் வந்து பாடியது போன்ற உணர்வு பெற்றோம். எங்கள் ஆரூரான், வீதி விடங்க பெருமானின் பரிபூரண அருள் இப்பாடலை உருக்கமாக பாடிய திருவாசக செந்நாவலருக்கும், பாடலை பதிவேற்றம் செய்தவர்களுக்கும் கிடைக்க வாழ்த்துகிறோம்.

    • @pavazham4496
      @pavazham4496  4 года назад

      தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து நாங்கள் பதிவேற்றும் பதிவுகளை கண்டு தங்களின் மேலான கருத்துகளை பதியுங்கள்.. நீங்கள் விரும்பிய பதிவுகளை பிறருக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.. மீண்டும் ஒருமுறை நன்றி... 'SUBSCRIBE'
      செய்ய மறந்து விடாதீர். கூடவே BELL button-யும்...

    • @pavazham4496
      @pavazham4496  4 года назад

      ruclips.net/p/PLeKGVSfVothB01-nabepfK0CBTmfy_rGI

    • @sakashravelavan418
      @sakashravelavan418 4 года назад

      @@pavazham4496 தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி. நாங்கள் திருவாசக செந்நாவலர் அவர்களின் பாடல்கள் மிகவும் விரும்பி கேட்போம். எங்களுக்கு அவர்களின் பாடல்களை நிறைய பதிவேற்றம் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    • @pavazham4496
      @pavazham4496  4 года назад

      @@sakashravelavan418 அவ்வாறே ஆவன செய்கிறோம். தற்சமயம் சில தொகுப்புகளை இணைத்துள்ளேன். பார்த்து மகிழவும்.

    • @pavazham4496
      @pavazham4496  4 года назад

      ruclips.net/video/9i0Ebjb_kus/видео.html

  • @nithyanandant7064
    @nithyanandant7064 2 года назад

    மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
    மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
    ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
    [ 1]
    விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
    குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
    எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
    மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!
    [ 2]
    அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
    கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
    என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
    குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!
    [ 3]
    துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
    இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
    அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
    வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!
    [ 4]மேலே செல்
    செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
    எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
    சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
    வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!
    [ 5]
    தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
    புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
    தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
    மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!
    [ 6]
    ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
    ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
    மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
    காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!
    [ 7]
    கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
    இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
    பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
    வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!
    [ 8]மேலே செல்
    பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
    காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
    நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
    வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
    [ 9]
    செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
    பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
    இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
    வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!
    [ 10]
    கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
    ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
    பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
    வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!