05 OCT 2024 I திபா 119 I உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • பதிலுரைப் பாடல்
    திபா 119: 66,71. 75,91. 125,130 (பல்லவி: 135a)
    பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!
    66
    நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
    71
    எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். - பல்லவி
    75
    ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.
    91
    உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. - பல்லவி
    125
    உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வேன்.
    130
    உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. - பல்லவி

Комментарии •