🐒 தீங்கு நினையாதே 🐊 Tamil Moral Story ✝️ Bible Verses Story in Tamil 👶 Kids Bible Story | Jerly Time
HTML-код
- Опубликовано: 10 дек 2024
- தீங்கு நினையாதே:
ஒரு அழகிய காட்டில் சுட்டி தனமானா ஒரு குட்டி குரங்கு இருந்தது. அந்த குரங்கு எப்போதும் யார் பேச்சையும் கேட்காது. ஒரு நாள் குளத்தங்கரையில் இருக்கும் மரத்தில் குரங்கு விளையாடி கொண்டு இருந்தது. அப்போது மரத்தின் கீழே ஒரு முதலை படுத்து கொண்டிருந்தது. இதை பார்த்த குரங்கு நாவல் பழங்களை பறித்து முதலை அருகே போட்டது . அந்த நாவல் பழங்களை முதலை எடுத்து சாப்பிட்டடது. அன்று முதல் முதலையும் குரங்கும் நண்பர்கள் ஆகினர். ஒரு நாள் குரங்கு கொடுத்த நாவல் பழத்தை தன் மனைவியிடம் கொடுத்தது முதலை. அதை வாங்கி சாப்பிட்ட முதலையின் மனைவி "இந்த நாவல் பழமே இவ்வளவு ருசியாக இருக்கிறதே இந்த பழத்தை தந்த குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும்" என்று கூறியது. தன் மனைவியின் விருப்பத்தை அறிந்த முதலை குரங்கை அழைத்து வந்து விருந்தாக்க விரும்பியது. மறுநாள் குரங்கிடம் நீ என் வீட்டுக்கு வர வேண்டும் என்றது. உடனே குரங்கு முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது. முதலை தன் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றது. செல்லும் வழியில் முதலை குரங்கிடம் குரங்கின் ஈரலை சாப்பிட போவதாக கூறியது .
நிலைமையை உணர்ந்த குரங்கு முதலையிடம்
" நண்பா இதை முன்பே கூறியிருக்கலாமே, நான் என் ஈரலை மரத்தில் அல்லவா காய வைத்து விட்டு வந்துள்ளேன். நீ அனுமதித்தால் நான் சென்று எடுத்து வருகிறேன்" என்றது குரங்கு. உடனே முதலை திரும்பி குரங்கை குளத்தங்கரையில் சென்று விட்டது. முதலையிடம் இருந்து தப்பிய குரங்கு சொன்னது
" ஏய் முட்டாள் முதலையே, ஈரல் இல்லாமல் எந்த உயிரும் உயிர் வாழ முடியாது" என்று சொல்லி காட்டிற்குள் சென்று மறைத்தது. முதலை ஏமாந்து விட்டது.
அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே.
நீதிமொழிகள் 3:29
In a beautiful forest there was a little monkey with a mouse tanamana. That monkey will never listen to anyone. One day the monkey was playing in a tree on the bank of the pond. Then a crocodile was lying under the tree. Seeing this the monkey plucked the novel fruit and put it near the crocodile. The crocodile took the novel fruit and ate it. From that day on, the crocodile and the monkey became friends. One day the crocodile gave the novel fruit given to him by the monkey to his wife.
The crocodile's wife, who bought it and ate it, said, "This novel fruit is so delicious. Knowing his wife's wish, the crocodile wanted to bring the monkey and treat him. The next day the monkey said you should come to my house. Immediately the monkey climbed on the crocodile's back. The crocodile went to where his wife was. On the way the crocodile told the monkey that he was going to eat the monkey's liver.
To the monkey crocodile who realized the situation
"Friend may have said this before, I have left my liver to dry on the tree or not. I will go and take it if you allow me," said the monkey. Immediately the crocodile returned and the monkey went to the pond. Said the monkey who escaped from the crocodile
"Hey stupid crocodile, no life can survive without the liver," he said and went into the woods and hid. The crocodile has been betrayed.
Do not make evil designs against your neighbour, when he is living with you without fear.
Proverbs 3 : 29
There are a lot of videos on our channel. Search and enjoy yourself
( bible_stories_for_kids, moral_stories_in_tamil, bed_time_story )
#biblestoriesforkids #christianstoryintamil #moralstoriesintamil #bibleversesstory #moralstories #bedtimestory #biblemoralstory #Jerlytime
follow on social media:
/ jerlytime
/ jerlytime
/ jerlytime
jerlytime.blog...
/ jerlytime