Psycho - Neenga Mudiyuma Lyric| Udhayanidhi Stalin | Ilayaraja | Mysskin | Aditi Rao Hydari

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 6 тыс.

  • @jkirubakaran
    @jkirubakaran 5 лет назад +491

    வயலின் இசையை தாளதிற்கு பயன்படுத்தும் வித்தை ராஜா அவர்களுக்கு மட்டுமே உண்டு! இந்த ஆண்டின் முதல் சிறந்த பாடல் இது!!

  • @sanjeevikumar6374
    @sanjeevikumar6374 5 лет назад +514

    ராகங்கள் தாளங்கள் நூறு.. ராஜா உன் பேர் சொல்லும் பாரு
    - அன்றே சொன்னார் கவிஞர் வாலி 💚

  • @SRIRAM-vs3xr
    @SRIRAM-vs3xr 5 лет назад +339

    முதல் வரியை கேட்டதும் உரோமம் சிலிர்த்தது எனக்கு மட்டும் தானோ? நீண்ட நாட்களுக்கு பின் இனிமையான பாடல் ❤️❤️❤️

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 4 года назад +247

    தாளக்கருவிகள் இல்லாத பாடல்!
    தாளம் தப்பாத பாடல்!!
    கம்பிக்கருவிகளை வருடி,
    அநேகருடைய இதயங்களை திருடிய பாடல்.

  • @mathansa4963
    @mathansa4963 5 лет назад +76

    ஒரு அரண்மனைக்கு ஒரு ராஜாதான்.....!அதே போல் இசை எனும் அரண்மனைக்கு இளையராஜா மட்டுமே.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 5 лет назад +167

    இசைஞானியை
    நான் நீங்கியதும் இல்லை.
    நிலை தடுமாறியதும் இல்லை .
    என் பேச்சு, மூட்சு, உயிர் இசைஞானி.

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 5 лет назад +84

    கோமாவில் கிடப்பவனுக்கும் நினைவு வரவைக்கும் இசை...the king is in full swing...divine melody..mesmerizing

    • @tajudeenalaudeen4247
      @tajudeenalaudeen4247 4 года назад +1

      💯% true

    • @jeevaj.t.muruganantham5716
      @jeevaj.t.muruganantham5716 2 года назад +1

      உண்மை. உண்மை. 2013 ஆம் வருடம் ஜூன் மாதம் எனது மகன் போடிமெட்டில் விபத்துக்கு உள்ளாகி 13 நாள் கோமாவில இருந்து மதுரை அப்போலோ மருத்தவ மனையில் சிகிச்சை பெற்று 30 நாள் கழித்து ஒரிரு வார்த்தை பேசினான். மருத்துவர்கள் அவனிடம் நீ என்னவாக ஆக வேண்டும் என கேட்டனர். அவன் என் தந்தையை (என்) போல் ஒரு சிறந்த Embedded Engineer ஆக வேண்டும். என கூறிவிட்டு அத்தோடு நிறுத்தாமல் என் தந்தையின் குரு இளையராஜ என கூறினான். இந்த நிகழ்வை நான் இளையராஜ ஐயாவிடமே பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த சந்திப்பில் தெரிவித்து ஆசி பெற்றேன். கோமாவில் இருந்தவனும் மீண்டு வந்ததும் முதலில் நினைவு கூர்ந்தது இளையராஜ அவர்களை.

    • @Kanavu-p3m
      @Kanavu-p3m 2 месяца назад

      💯

  • @Rajaarts-f5f
    @Rajaarts-f5f 3 года назад +36

    வயசானதான்டா தேக்குமரத்துக்கு பலம் ஜாஸ்தி..இசையரசனே💕

  • @supersothanaigal4636
    @supersothanaigal4636 5 лет назад +66

    வார்த்தைகள் வரவில்லை ஏனோ... இசைஞானி இசைஞானி இசைஞானி இசைஞானி இவர் மட்டுமே ..

  • @mareeswaranp5326
    @mareeswaranp5326 5 лет назад +156

    ப்பா என்னவொரு இசை😍
    இசை மீண்டும் உயிர்தெழுமானால்
    அது ராஜா சாரால மட்டும் தான் முடியும் போல♥️♥️

  • @silentkiller3440
    @silentkiller3440 5 лет назад +334

    நல்ல பாட்டு யார் வேணாலும் குடுக்கலாம், இப்டி அடிக்கடி கேக்குற மாதிரி பாட்டு இவரால மட்டும் தான் குடுக்க முடியும் THE LEGEND

    • @ciniminicuts7227
      @ciniminicuts7227 5 лет назад

      Apo nee arrahmana asinga paduthuringa thu thoomba poda naye latharu nalla

    • @silentkiller3440
      @silentkiller3440 5 лет назад

      @@ciniminicuts7227 thevidiya ku porantha thevidiya mavanea en ethirla nee ipdi pesiruntha unga amma luku nee pullaya irunthuruka maata oor meinja pundaiku porantha ecchikala payalea thu

    • @ciniminicuts7227
      @ciniminicuts7227 5 лет назад +1

      @@silentkiller3440 enada unodankudumbatha ipdi thitra gommala hahaha ilaiyaraja fanslam ipdithan saikova thiriyuvanunga

    • @silentkiller3440
      @silentkiller3440 5 лет назад

      @@ciniminicuts7227 இந்த மாதிரி லூசு பயலா இருப்பன்னு நான் எதிர்பாக்கல

    • @anaikulam
      @anaikulam 5 лет назад

      80s kids Ippadi thaan pesuvanga

  • @iyappanrsm7797
    @iyappanrsm7797 4 года назад +63

    இந்த படத்தின் பாடல் மூலம் "இசையே இசைஞானியை விட்டு பிரிய மறுக்கிறது "

  • @MaayonK
    @MaayonK 5 лет назад +453

    நீ எம்புட்டு தலகணமாவேணாலும் இருந்துட்டுபோய்யா, ஒன்னோட இசைமட்டும் எங்ககாதுல எப்பவும் கேட்டுட்டேருக்கட்டும் 🙏🏽😢😭

    • @oviyarilakkiyanc7276
      @oviyarilakkiyanc7276 5 лет назад +1

      😀

    • @ilaim4948
      @ilaim4948 5 лет назад +3

      Super

    • @krithekakarthi5534
      @krithekakarthi5534 5 лет назад

      😭😭👌👌

    • @bhobalan
      @bhobalan 5 лет назад +4

      அவரை தலைகணம் பிடித்தவர் என்று சொல்லும் அளவு இசை அறிவு தங்களுக்கு அருமை.

    • @sidhdharth8113
      @sidhdharth8113 5 лет назад +9

      It's not headweight. Maaperum kalaignanukku yenna angigaaram kidaiththadhu......Andha aadhangam dhaan....

  • @sana4672
    @sana4672 5 лет назад +93

    நான் மனிதனாகப் பிறந்ததற்கு பெருமைப்படும் முதல் விஷயம் இளையராஜா அவர்களின் சமகாலத்தில் வாழ்வதற்கு தான்.... இசை தெய்வம்ங்க இந்த மனுசன்....

  • @therimusic3280
    @therimusic3280 5 лет назад +48

    எல்லாம் பிறந்த வாழ்ந்து இறந்துவிட்டார்கள்.
    உங்கள் இசை மட்டுமே என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். உங்கள் இசை சமகாலத்து இளைய இசையமைப்பாளர்களையே தூக்கி ஓரப்போட்டுவிடுகிறது.
    என்னை தாலாட்டிய ஐயாவின் இசை இப்போ என்னை பிள்ளைகளையும் தாலட்டுகிறது. என் பேரன் பேத்தியையும் தாலாட்டும் குதிகலிக்கும்.

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 4 года назад +45

    இசைக்கும் என்றுமே நீங்கள் ராஜா தான் I love raja sir.

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 5 лет назад +136

    Raja sir ruling (2020 for maestro)
    இன்னும் உன்ன நினச்சுல இருந்தே வர முடியல
    அதுக்குள்ள அடுத்ததா?
    என்ன மனுசன் இவர் 😍

  • @sabarishr143
    @sabarishr143 5 лет назад +189

    இப்பதான் உன்னை நினைச்சு பாட்டிலிருந்து மீளமுடியாமல் உள்ள தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் அதற்குள் மற்றொன்று...💐❤️

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 5 лет назад +39

    எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான இசையை 1970களில் அறிமுகமாகி 1000 படங்களுக்கு இசையமைத்த பிறகும் 2020ல் கொடுக்க முடியுமென்றால்... இசைஞானி இளையராஜா என்ன மாதிரியான மகாகலைஞன்... மிக நிச்சயமாக உன்ன நினச்சு நினச்சு பாடலும், நீங்க முடியுமா பாடலும் இந்த ஆண்டின் காதல் கீதங்களாக அமையும்... வயலின் ராஜாங்கமே நடத்திவிட்டார் ராஜா....
    மூன்று காலில் காதல் தேடி நடந்து போகிறேன்...
    இரண்டு இரவு இருந்த போதும் நிலவு கேட்கிறேன்....
    கபிலனின் வரிகளும், சித்ஶ்ரீராமின் குரலும் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன...

  • @saiumakolams2225
    @saiumakolams2225 4 года назад +88

    ஒரு நாளைக்கு பல முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல். ராஜா சார் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @balasuresh1386
    @balasuresh1386 4 года назад +1194

    பீசா பர்கர் என்று சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்தவனுக்கு பழைய சோறும் தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் கிடைத்த வரமே இசைக்கடவுள் ஞானி ❤️

    • @aestheticlover1265
      @aestheticlover1265 4 года назад +12

      Wow semme varnipu 💯🙏

    • @shankaragathiyalingam183
      @shankaragathiyalingam183 4 года назад +6

      Arumayana uvamai

    • @najuroal
      @najuroal 4 года назад +6

      Bala suresh மன்னிக்கவும் ஒரு சிறு திருத்தம் பச்சை மிளகாய் என்பது தான் சரியான வார்த்தை

    • @balasuresh1386
      @balasuresh1386 4 года назад +11

      @@najuroal மிக்க நன்றி மாற்றிவிட்டேன் தமிழ்பற்றுக்கு தலைவணங்குகிறேன்

    • @rekcuf760
      @rekcuf760 4 года назад +4

      வணக்கம்... உங்களைப்போல உண்மையான ராஜரசிகர்களுக்காக ஒரு வீடியோ - ruclips.net/video/T2GGaZJQO64/видео.html

  • @anandsabapathi
    @anandsabapathi 5 лет назад +838

    அளவுக்கு மிஞ்சிய அமுதம் நஞ்சாகுமாம்... நஞ்செனினும் நானுண்பேன் இவ்விசையமுதை!

  • @duraip3281
    @duraip3281 5 лет назад +305

    "ஒரு ஊர்ல ராஜான்னு ஒருத்தரு இருந்தாராம்
    இன்னைக்கு வரைக்கும் அவர்தான் ராஜாவாம்" - இளையராஜா

  • @hatricknijay
    @hatricknijay 4 года назад +647

    ❣️😍,😭
    கல்லையும் கரைக்கும் சித் குரலும், கல்லுக்கே உயிர் தரும் ராஜா இசையும்....

  • @baluprasanth7439
    @baluprasanth7439 5 лет назад +106

    உயிர் போகும் நாள் வரை உனை தேடுவேன்.. உனை மீண்டும் பார்த்தபின் கண் மூடுவேன்..😭😭😭
    கபிலன் அய்யா உங்கள் வரிகளுக்கு நான் அடிமை..

  • @rajkumarbharathy4664
    @rajkumarbharathy4664 5 лет назад +94

    இனி ஒரு கொம்பன் பொறந்து வந்தாலும் முடியாது...
    ராஜா. டா..😎👑🔥

  • @தமிழ்குருவி-ங6ப

    எல்லாரும் இசைய கொல்றாங்க😒😒இந்த மனுசன் இசையாலே கொல்றாரு😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️

    • @kartr9037
      @kartr9037 5 лет назад +13

      அதுக்கு ஏன் boss நீங்க தமிழ கொல்றீங்க... ள இல்லை ல. But is a valid point you made there...

    • @gvaasan9799
      @gvaasan9799 5 лет назад +1

      @@kartr9037 hahaha

    • @raja-jx3kk
      @raja-jx3kk 5 лет назад +2

      Superb.. well said..

    • @raja-jx3kk
      @raja-jx3kk 5 лет назад +1

      Ha.. haa.

    • @Oviyan2
      @Oviyan2 5 лет назад

      True

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 4 года назад +88

    எனக்குமட்டும் தான் இசை வரும் - ராஜா
    ஆமாம் உங்களுக்கு மட்டும் தான் வரும்...

  • @tuberfoodie3024
    @tuberfoodie3024 5 лет назад +901

    ஹிப்பாப்தமிழா அனிருத் கரச்சல் இசை மத்தியில் Live Instruments மூலமாக கம்போஸ் செய்யப்பட்ட இனிமையான பாடல்.. 😍🎻

  • @sampathr34
    @sampathr34 4 года назад +192

    இதோ ரெடியாகி விட்டது இந்த வருடத்தின் மிகச் சிறந்த பாடல் 💞💞😍😍😍🌹🌹🌹

  • @sekarr4851
    @sekarr4851 5 лет назад +54

    மொத்த சோகத்தையும் பிழிந்து கொடுத்து இருக்கிறார். இதயத்தை ஏதோ செய்கிறது. படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். ராஜாதி ராஜா.

  • @jayavelujayavelu9977
    @jayavelujayavelu9977 4 года назад +54

    இளையராஜா sir வாழும் இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் .. என்று எண்ணுகையில்.நான் வரம் பெற்றவன்.. நன்றி ஐயா...

  • @anandhalwar
    @anandhalwar 5 лет назад +293

    எவன்டா சொன்னா ராஜா சார்க்கு Career போய்ருச்சுன்னு...அவருக்கு வயசாய்ருக்கலாம் ஆனா அவரோட இசைக்கு எப்போவுமே வயசு ஆகலடாடா.....#Raja Sir is Back 😍😍😍😍😍😍

    • @alaguamshualaguamshu5173
      @alaguamshualaguamshu5173 5 лет назад +5

      1.Bro sonnavangaa muttaal2. he is nt a soft ware music composer ilaaa 3.wht a arrangement mind blowing isaaai in pithamagan

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 5 лет назад +3

      Some people are desperate to meet the legends inspired them but I don’t feel because This legend lives within me and his music is part of my blood cells! He is like nature there is no market or timeline for nature!!! Kindly refrain from comparing him with anyone it’s equal to comparing nature and man made!

    • @NiranjanprathapTJ
      @NiranjanprathapTJ 4 года назад

      career bro adhu... kobapadadhinga kobapadadhinga ...

    • @anandhalwar
      @anandhalwar 4 года назад

      @@NiranjanprathapTJ Sry bro Spelling Mistake 😂😂😂😊😊😂😊😜😜

    • @tajudeenalaudeen4247
      @tajudeenalaudeen4247 4 года назад

      Super g

  • @suriyakumar3324
    @suriyakumar3324 5 лет назад +94

    ௧ாலம் மாறலாம் உன் இசை மாறது இசைஞானி இளையராஜா❤

  • @sankareswaran9622
    @sankareswaran9622 4 года назад +1339

    திரையரங்கில் கேட்டு சிலிர்த்து இங்கு மீண்டும் கேட்க வந்தேன்
    யாரேனும் உண்டா?

    • @manivannan7935
      @manivannan7935 4 года назад +4

      Mee too.....

    • @aestheticlover1265
      @aestheticlover1265 4 года назад +3

      Naan😌

    • @dhilips6658
      @dhilips6658 4 года назад +2

      Naanum😊

    • @Priya-bk5id
      @Priya-bk5id 4 года назад +2

      S bro...😪😪

    • @krishnakrishna-ek4os
      @krishnakrishna-ek4os 4 года назад +4

      நான் இப்போம் தான் படம் பார்த்திட்டு இந்த பாடல் கேட்க வந்தேன்

  • @lakshmishanker5916
    @lakshmishanker5916 3 года назад +60

    இந்த பாடல் எத்தனை தடவைகேட்டாலும் சலிக்காது

  • @venkatraja9879
    @venkatraja9879 4 года назад +107

    1986 ல் பிரசாத் ஸ்டுடியோவில்
    நானும் ஒரு தொழிலாளி
    ரீ ரிக்கார்டிங். பார்த்தேன் குறைந்த பட்சம் 150 இசை கலைஞர்கள் பங்கேற்று அசத்தியை இசையை
    இன்று 10 க்கு 10 ரூம்பில். முடக்கி விட்டது
    80 களில் இசை உயிர்ப்பொடு இருந்தது
    அதை இன்றுவரை ராஜா மட்டுமே கொடுத்து கொண்டு இருக்கார்
    ராஜா ராஜாதான்

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 5 лет назад +173

    இனி எங்க நீங்கிறது? இந்த பாட்டுல இருந்து
    Raja sir 👌❤️

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 5 лет назад +471

    இளையராஜா அவர்களை திமிரு பிடித்தவர் என்று அனைவரும் செல்கிறார்கள் இப்படிப்பட்ட கலைஞருக்கு திமிரு இருக்கவேண்டியது அவசியம் தான்

    • @vimrishkumar8075
      @vimrishkumar8075 5 лет назад +13

      நீங்கள் சொல்வது சரிதான்👌👌👌

    • @dineshkumarkumar3807
      @dineshkumarkumar3807 5 лет назад +6

      @@vimrishkumar8075 நன்றி நண்பா

    • @udayakumar8844
      @udayakumar8844 5 лет назад +8

      மனிதனுக்கு ஆணவம் தேவையற்றது

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 5 лет назад +21

      @@udayakumar8844 அதுக்கு பேரு ஆணவம் இல்ல.. ஒருவித ஞானச்செருக்குன்னு சொல்லலாம்...

    • @udayakumar8844
      @udayakumar8844 5 лет назад +7

      @@yuvarajavijiy ஞானம் வந்தபின் செருக்கு எல்லாம் இருக்காது ..... அப்படி செருக்கு அவர்களுக்கு இருந்தா முழுமையா ஞானம் பெறவில்லை என்பது அர்த்தம்

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 4 года назад +57

    இளைய ராஜா இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ஜீவனுள்ளவை.உயிருள்ளவை,காலம்,காலமாக நம் மனங்களி்ல் வாழக்கூடியவை.நன்றி மேஸ்ட்ரோ

  • @arrnepv5232
    @arrnepv5232 5 лет назад +122

    அருவிகள் , பச்சை வயல்வெளிகள் , பனிதுளி , மென்சாரல் , தேன் , குளிர்ந்த நீர் , அன்பு இதுபோன்ற வரிசையில் இளையராஜா என்ற பெயரையும் சேர்க்க வேண்டும்

  • @ramkumarmuthusamy5028
    @ramkumarmuthusamy5028 4 года назад +44

    இசை தாயே இன்னோரு பிறவி இந்த இசை புதல்வனுக்கு ..
    இவ்வுலகில் நிம்மதியை இவன் இசையால் நிலை நிறுத்த ..🙏🏻🎼

  • @muthukumaravelanthi5270
    @muthukumaravelanthi5270 4 года назад +501

    இந்தப் பாடல் முழுதும் பின்னணியில் வரும் வயலின் பேசும் இனம் புரியாத மொழியில் மனம் கனத்து, பின் கசிந்து உருகுகிறது..

  • @alwaysbeafriends2291
    @alwaysbeafriends2291 4 года назад +65

    எவனாலும் அழிக்க முடியாது இளையராஜா ஐயா🎶🎶🎶🎶

  • @senthilsenthil3352
    @senthilsenthil3352 4 года назад +136

    மூன்று காலில் காதல் தேடி நடந்துபோகிறேன் இரண்டு இரவு இருந்தபோதும் நிலவை கேட்கிறேன்....
    அருமையான வரிகள்

    • @balajisrinivasan8302
      @balajisrinivasan8302 4 года назад +3

      இருண்ட இரவு

    • @balasubramaniamc1139
      @balasubramaniamc1139 4 года назад +2

      I didn't notice this line.. Thanks for highlighting this... BTW I lost myself in strings

    • @dhivyasekar7611
      @dhivyasekar7611 4 года назад +2

      @@balajisrinivasan8302 irandu iravu than....because...hero blind person

    • @balamuruganp8872
      @balamuruganp8872 4 года назад +2

      Yes Bro

    • @tree3871
      @tree3871 4 года назад +1

      Intha varikal varum pothu sariyaga ungal comment ah pakuren.....

  • @tharmisuruthi1187
    @tharmisuruthi1187 5 лет назад +44

    இந்த இரண்டு பாட்டுலயே படத்தோட கதை புரிஞ்சிடுச்சி..,நிச்சயம் ஒரு அழுத்தமான காதல் கதை இருக்கு..,❤❤

  • @rajasubramani3304
    @rajasubramani3304 4 года назад +10

    Mind Blowing lines : நீ கடந்து போன திசையோ, நான் கேக்க மறந்த இசையோ.....
    இளையராஜாவின் இசையில் நனைந்த நான் மீள முடியாமல் தவிக்குறேன்.
    மிஸ்கின் அருமையான screenplay... காட்சிக்கும் பாடல் varikum அவளோ பொருத்தம் - மெல்லிய மனதை வருடி செல்லும் இசை.... இப்படி ஒரு பாடல் இனி வரும் என்று தோன்றவில்லை
    உயிர் இருக்கும் போதே கேட்டு அனுபவித்து கொள்கிறேன்...
    யாரும் என்னை காப்பாற்ற வேண்டாம்..

  • @vigneshlakshminarayanan3332
    @vigneshlakshminarayanan3332 5 лет назад +49

    இளையராஜாவுக்கும் அவர் இசைக்கும் என்றென்றும் இந்த உயிர் அடிமை..

  • @thivathala1246
    @thivathala1246 5 лет назад +2573

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்ப வரைக்கும் அவர்தான் ராஜாவாம்😎The KING👑

  • @Chamdray
    @Chamdray 4 года назад +79

    சித் ஸ்ரீராமுடைய குரலும், இசை ஞானியின் இசையும் பலரை உண்மையாகவே சைக்கோவாக மாற்றியுள்ளது...
    What a magical voice !!!

  • @karthickeyanb7017
    @karthickeyanb7017 4 года назад +28

    கடைசி வரை உங்கள் இசைக்கு அடிமைகளாக தான் இருக்க போகிறோம் வயலின் காற்றில் பறக்கிறது

  • @dhadd6869
    @dhadd6869 5 лет назад +34

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு nu.. யார்யா சொன்னது.. ராஜா sir ஓட அமுத இசையை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பருகலாம்... ❤❤❤❤❤❤கடவுளே இளையராஜா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvel6752
    @kathirvel6752 5 лет назад +29

    எத்தனை முறை கேட்டாலும் உயிர் ஓட்டத்தோடு பயணிக்கிறது இந்த பாடல் ..இளையராஜா சார் என்றுமே நீங்க ராஜா தான் இந்த இசை சாம்ராஜ்யத்தில் 👏👏👏👏

  • @ram1903
    @ram1903 5 лет назад +83

    ஒரு குருடன், பாதை தன் விழிகளில் தெரியாமல் நடப்பது போல, இப்பாடல் தாள வாத்தியங்கள் இல்லாமல், வெறும் தாளகட்டுகளில் தவழ்கிறது. I love Raja!

    • @mrnothing7865
      @mrnothing7865 4 года назад +2

      Neenga sonnathu crt intha maathiri scene la than intha paaatta vachanga

  • @sudhanair4419
    @sudhanair4419 4 года назад +137

    I am a malayali but mostly i play tamil songs in morning to feel fresh .... love the lyrics .....

  • @kaththi_vijay
    @kaththi_vijay 4 года назад +44

    அடப்பாவி இன்னா மணிஷன்யா இவரு..... வாழ்க்கை முழுவதும் பாதிக்குது இவரோட பாடல்.. இன்னமும் இவரோட யாராலும் நிக்க முடியாது பா... இவருக்காகாவே இனியும் எத்தன காதல் தோல்வியை உம் சந்திக்க தயார்.... இசை ராஜா நம் வாழ்வின் ராஜா இங்ஙனம் ஹாரிஸ்
    ஜெயராஜ் ரசிகன்...

  • @veeravelukr2619
    @veeravelukr2619 5 лет назад +293

    இளையராஜா இந்த பாடகரை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறார்

    • @natramizhpagirvu3547
      @natramizhpagirvu3547 5 лет назад

      சைக்கோ படத்தின் கதை இதுதான்!
      ruclips.net/video/5WwG6cz0fnM/видео.html
      சூரரை போற்று படத்தின் கதை இதுதான்!
      ruclips.net/video/iyKy_GYkU3U/видео.html
      பட்டாஸ் படத்தின் கதை இதுதான்!
      ruclips.net/video/HEBgdr9uGeQ/видео.html

    • @vimrishkumar8075
      @vimrishkumar8075 5 лет назад

      Fact bro

  • @rajeshk1138
    @rajeshk1138 5 лет назад +91

    இந்த கம்போஸிங்க்கை கேட்டு இப்போ இசை அமைப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு உச்சா வந்துவிடும்.

  • @prasannaramakrishnan6242
    @prasannaramakrishnan6242 4 года назад +47

    உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் ....ராஜா இசையமைத்த இப்பாடல் அவருக்கு 100% பொருந்தும்... அவர் இசைக்கடவுள் என்பது மிகச் சிறிய வார்த்தை..

  • @a.palanivel3535
    @a.palanivel3535 4 года назад +53

    என் மனசுல இருக்கிற வலிகளை அப்படியே பாடலாக கேட்டு பிரமித்துப் போனேன் கபிலனின் வரிகளும் இளையராஜாவின் மயக்கும் இசையும் கண்ணீரில் நனைத்து விட்டது

  • @prabhushanmugam46
    @prabhushanmugam46 5 лет назад +44

    அப்பா வயலின் கிட்டார் என்ன ஒரு மிரட்டல் இது ராஜாவால் மட்டுமே முடியும்

  • @bharathim530
    @bharathim530 5 лет назад +87

    கண்ணீர் வந்துவிட்டது
    கண்ணீர் விழாமலிருக்க
    கண்களை மூடிக்கொண்டேன்.

  • @raviiyer1966
    @raviiyer1966 4 года назад +13

    எத்தனை வைரஸ் தாக்கினாலும் கோள்களே ஒன்றொடொன்று மோதினாலும் ராசா அய்யாவின் இசை அடிநாதம் சிறிதும் சேதப்படாது.விதைத்தது இசைந்து கொண்டேயிருக்கும்.

  • @rmksharma1066
    @rmksharma1066 5 лет назад +31

    The greatest composer ever to have walked on this planet..... My God... Salaaams Infinite to the ONE and ONLY MAESTRO.....!! Sid... you're blessed....! If theres anything called SOULFUL music, its this.. its HIS....!!!!

  • @parthasarathy9949
    @parthasarathy9949 5 лет назад +306

    2020 தூக்க மாத்திரைகள் தேவையில்லை மீண்டும் நம்மை மகிழ்ச்சியாக தூங்க வைக்க தந்தையின் தலாட்டு ...

  • @udayakumar8844
    @udayakumar8844 5 лет назад +55

    சோகப் பாடல்களில் இருக்கும் ஆழத்தை வேறு எந்த பாடலிலும் நான் உணர்ந்ததில்லை

  • @shajahansnkhan4995
    @shajahansnkhan4995 Год назад +10

    இதயம் தொட்ட இசை கவிதை 🎸🎸🎸... வேறு யாராலும் காதலின் ஆழத்தை இசையில் சிறந்த முறையில்..... தெளிவாக கூற முடியாது இசை ஞானி இளையராஜா அவர்கள் தவிர

  • @rajad8174
    @rajad8174 4 года назад +120

    உலகத்தில் யாரும் தனிமையை உணர முடியாது ராஜா சார் பாடல்கள் இருக்கும் வரை....
    I💓Raja Sir

  • @ganeshkumar-jc9dp
    @ganeshkumar-jc9dp 4 года назад +38

    ௧தாநாய௧ன் பார்வை அற்றவர் என்பதையும் அவனின் ௧ாதலையும் ௨ணர்த்தும் ௧விஞரின் அருமையான வரிகள்....
    ""மூன்று காலில் ௧ாதல் தேடி நடந்து போகிறேன்....
    இரண்டு இரவு இருந்த போதும் நிலவை ௧ேட்கிறேன்"
    கவிஞர்௧ளின் வார்த்தைகளின் அழகை ௨ணர வைக்க திரு. இளையராஜாவால் மட்டுமே முடியும்.

  • @bharaniprabhu5709
    @bharaniprabhu5709 5 лет назад +48

    மூன்றாவது முறையாக மீண்டும்..Sid sriram ilayaraja ...💖

  • @subramaniane1971
    @subramaniane1971 4 года назад +391

    மற்றவர்களின் இசையில் சில நேரம் மயிர் சிலிர்க்கிறது. இசைஞானியின் இசையில் மட்டும்தான் பலநேரம் உயிர் சிலிர்க்கிறது.

  • @prakashprakash2367
    @prakashprakash2367 4 года назад +143

    என் தாய் என்னை தாலாட்டி தூங்க வைத்தால் விழித்த பின்புதான் தெரிந்தது என் தாயும் தூங்கினால் என்று ஞானியின் தாலாட்டு கேட்டு .அன்புடன் .பிரகாசு

  • @siva59392
    @siva59392 4 года назад +205

    ஆண் : நீங்க முடியுமா
    நினைவு தூங்குமா
    ஆண் : நீங்க முடியுமா
    நினைவு தூங்குமா
    காலம் மாறுமா
    காயம் மாறுமா
    ஆண் : வானம் பிரிந்த மேகமா
    வாழ்வில் உனக்கு சோகமா
    காதல் போயின் காதல் சாகுமா
    காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்
    ஆண் : உயிர் போகும் நாள் வரை
    உன்னை தேடுவேன்
    உன்னை மீண்டும் பார்த்தப்பின்
    கண் மூடுவேன்
    ஆண் : நீங்க முடியுமா
    நினைவு தூங்குமா
    ஆண் : தேவன் ஈன்ற ஜீவனாக
    உன்னை பார்க்கிறேன்
    மீண்டும் உன்னை வேண்டுமென்று
    தானம் கேட்கிறேன்
    ஆண் : நீ கண்கள் தேடும் வழியோ
    என் கருணை கொண்ட மழையோ
    நீ மழலை பேசும் மொழியோ
    என் மனதை நெய்த இழையோ
    ஆண் : வீசும் தென்றல் என்னை விட்டு
    விலகி போகுமோ
    போன தென்றால் என்று எந்தன்
    சுவாசம் ஆகுமோ
    இரு விழியிலே ஒரு கனவென
    உன்னை தொடருவேன்…..
    ஆண் : நீங்க முடியுமா
    நினைவு தூங்குமா
    காலம் மாறுமா
    காயம் மாறுமா
    ஆண் : மூன்று காலில் காதல் தேடி
    நடந்து போகிறேன்
    இரண்டு இரவு இருந்த போதும்
    நிலவை கேட்க்கிறேன்
    ஆண் : நீ கடந்து போன திசையோ
    நான் கேட்க மறந்த இசையோ
    நீ தெய்வம் தேடும் சிலையோ
    உன்னை மீட்க என்ன விலையோ
    ஆண் : இன்று இல்லை நீ எனக்கு
    உடைந்து போகிறேன்
    மீண்டு வாழ நாளை உண்டு
    மீட்க வருகிறேன்
    ஆண் : ஒரு தனிமையும்
    ஒரு தனிமையும்
    இனி இனையுமே
    ஆண் : நீங்க முடியுமா
    நினைவு தூங்குமா
    காலம் மாறுமா
    காயம் மாறுமா
    ஆண் : வானம் பிரிந்த மேகமா
    வாழ்வில் உனக்கு சோகமா
    காதல் போயின் காதல் சாகுமா
    காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்
    ஆண் : உயிர் போகும் நாள் வரை
    உன்னை தேடுவேன்
    உன்னை மீண்டும் பார்த்தப்பின்
    கண் மூடுவேன்
    ஆண் : நீங்க முடியுமா
    நினைவு தூங்குமா

  • @rajasekaran9479
    @rajasekaran9479 4 года назад +451

    யோ மிஷ்கினு இந்த பாட்டுக்கு எப்படி சொல்லி இந்த டியூன் வாங்குன...காட்சிக்கும் பாடலுக்கும் கோடி பொருத்தங்கள்

  • @inspiretextilesinspiretext234
    @inspiretextilesinspiretext234 4 года назад +196

    நீ சாகறதுகுள்ள நா செத்து போயிறனும் இசைஞானி...
    அத பாக்கறதுக்கு எனக்கு சக்தி இல்ல.. என் வாழ்வோடு கலந்த ஒரு கடவுள் நீ !!
    அழுதுட்டே தான் எழுதுறேன் இத.
    நல்லாருங்க தெய்வமே 🙏

  • @tharikajeez93
    @tharikajeez93 5 лет назад +173

    இந்த மனுசனுக்கு இன்னும் வயசு ஆகல... என்றும் ராஜா எதிலும் ராஜா எப்போதும் ராஜா
    ராஜா ராஜாதான்

  • @sandriya.2464
    @sandriya.2464 5 лет назад +92

    இளையராஜா வின் இசையில் விழுந்தவர்கள் மீளமுடியாது என்பது உண்மைதான்..👉👉👉🤴

    • @kiruthirajapandidurairajap4844
      @kiruthirajapandidurairajap4844 5 лет назад +1

      இறைவா எங்களுக்கு பிச்சையிடு இந்த மனிதனின் இசையை யாசித்து கேட்க எங்கள் வயதை அந்த இசை ஜிவனுக்கு பரிசலிக்கிறோம்

  • @shriramkannan05
    @shriramkannan05 5 лет назад +196

    இறந்து போன என்னை மறு உயிர் தந்து எழுப்பி அழ வைத்த பாடல் 😢😭

  • @dineshrekumar2497
    @dineshrekumar2497 4 года назад +203

    3 பாடல்களையும் 300 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் இருந்தும் இன்னமும் இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே கண் விழிக்கின்றேன் கண் மூடுகிறேன்
    நீங்க முடியுமா என்று தெரியவில்லை ..

    • @lakshmivishalini6730
      @lakshmivishalini6730 3 года назад

      Entha 3 song ji

    • @sureshadit
      @sureshadit 3 года назад

      Same feel bro ,@ dinesh RE kumar

    • @മല്ലുകടുവ-ഞ2ഖ
      @മല്ലുകടുവ-ഞ2ഖ 3 года назад

      ഈ പാട്ടും എന്റെ പ്രണയവും ജീവിതവുമായി ബന്ധം ഉണ്ട്... ഈ പാട്ട് ആ നഷ്ട്ടപെട്ട പ്രണയവുമായി ആജ്ഞതമായ ഒരു ബന്ധം ഉണ്ട്.. ഈ പാട്ട് ലോകത്തു ഉള്ളിടത്തോളം അവൾ എന്നെ മറക്കില്ല.. ഇനി ഒരിക്കലും ജീവിതത്തിന്റെ ഒരിടനാഴിയിലും കണ്ടു മുട്ടിലെങ്കിലും

    • @dhanushmohan9120
      @dhanushmohan9120 3 года назад

      👍👍

  • @mullaivendhand5922
    @mullaivendhand5922 5 лет назад +72

    நீரின்றி அமையாது உலகு
    நீ இன்றி அமையாது இசை உலகு..... ராஜாவே.....
    70 களில் தொடங்கி 2020 வரை...என்றும் உன் இசை நீ இல்லையேல் எத்தனை பேர் தூக்கமின்றி அலைவார்களோ...

  • @ranjithd6948
    @ranjithd6948 4 года назад +92

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் இளையராஜா பாடல்கள்.

  • @TheMultimediamani
    @TheMultimediamani 5 лет назад +225

    மாசு நிறைந்த காற்றை கூட தூய்மையாக்கும் ராஜாவின் இந்த பாடல் காற்றில் பரவும் போது...👌☺️💐 நன்றி ராஜா சார்👍

    • @santhoshk8858
      @santhoshk8858 5 лет назад +1

      Good

    • @karunakaranrs590
      @karunakaranrs590 5 лет назад +2

      Ji unga comment kavidhai maari irukkunga ji. Indha lyric raja sir music la irundha innum arumaiya irukkum.

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 года назад +34

    1:08 touches everyone soul
    Soulness part of this song
    பெயரில் தான் இளையராஜா
    இசையில் மூத்த ராஜா

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 4 года назад +171

    இன்று திரை அரங்கில் இந்த படம் பார்த்தவர்கள் எத்தனை பேர்கள் இங்கே லைக் போட வந்தீங்க? திரையரங்கில் இந்த பாடல் இசை வெள்ளமாக உணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

  • @RaviChandran-qr5lz
    @RaviChandran-qr5lz 5 лет назад +42

    மனசு எல்லாருடைய இசைக்கும் ஆட்டம் போடும், ஆனால் மனதோடு சேர்ந்து உயிரும் உருகும் இசையை இவர் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும்....

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 4 года назад +1250

    3 பாடல்களுக்கும் நடுவில் இசைத் தேனுண்ட வண்டாய் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் மயங்கிக் கிடப்பவர்கள் யார் யார்...

    • @ashleymoonlight1929
      @ashleymoonlight1929 4 года назад +9

      naan,meendu varavillai

    • @jayanthivalan5807
      @jayanthivalan5807 4 года назад +4

      Ungal varigal arumai

    • @s.aravinthanmkdu2049
      @s.aravinthanmkdu2049 4 года назад +6

      3rd song? 1 unna nenachu 2 this song 3rd entha song bro

    • @Blackpinksuzu
      @Blackpinksuzu 4 года назад +16

      3வது பாட்டு
      தாய் மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்... கேளுங்க ரொம்ப பிடிக்கும்... Raja the Maestro

    • @RAMKUMAR-og8po
      @RAMKUMAR-og8po 4 года назад +3

      Super command friends

  • @kodandarao1626
    @kodandarao1626 4 года назад +64

    It's Maestro's magic... Wow. He is continuously depicting that he is one of the most preferred composer even in 2020. This film songs are real treat to soul.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 5 лет назад +277

    நாற்பது வருஷம் முன்பு "இதயம் போகுதே" என்ற பாடலில் ஜீவனை கரைய விட்ட மாயாவி ....இரக்கம் இல்லாமல் மீண்டும் கொல்கிறார்........இவரை கட்டுப் படுத்த இந்த உலகில் ஆளே இல்லையா ....இறைவன் மனதையும் வசப்படுத்தி விட்டாரா இந்த மாயாவி ...

  • @babug5576
    @babug5576 5 лет назад +35

    1:17 அந்த குழந்தைத்தனமான சிரிப்பு இசை இறைவா 😍 😍 love you 😘😘

  • @Afraamaryam
    @Afraamaryam 5 лет назад +51

    புதிய பாடல்களை நான் அதிகம் விரும்புவதில்லை. கேட்டதும் மயங்கினேன். ஆஹா.

  • @jesijesi8477
    @jesijesi8477 4 года назад +14

    நீ தெய்வம் தேடும் சிலையோ உன்னை மீட்க என்ன விலையோ👌👌👌பாடல் வரிகள்💐💐💐

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 5 лет назад +179

    பல புயல்கள் மத்தியிலும் நீங்கள் தான் ஞானி

  • @pushparajanto2381
    @pushparajanto2381 4 года назад +34

    கொலைகார ராசா உன் இசையால் எங்களை வதம் செய்கிறாயே....... உமக்கு நிகர் நீ மட்டுமே

  • @aestheticlover1265
    @aestheticlover1265 4 года назад +192

    திறமை இருக்கும் இடத்தில் கர்வம் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதிலும் நீர் இசை கடவுள் 😌🙏 நீர் என்ன சொன்னாலும் என் மனம் ஏற்று கொள்ளும். என்றும் என் ராஜாவாக நீர் ஒருவர் மட்டுமே.💯♥️

  • @missbond7345
    @missbond7345 4 года назад +136

    If Raja sir is not Bharat Rathna then I dont know who is!! At 75 his music moves ppl to tears. Especially in this age when music itself is rare and listening to real instruments is even rarer -this song is like an oasis ! I only wish I can see him once and touch his feet. One cudnt meet Srinivasa Ramanujam or Bharathiyar but am convinced he is more than a mortal walking the earth

  • @navneethankv
    @navneethankv 5 лет назад +71

    நாம் நம் வாழ்வின் பெரும்பகுதியான 40 வருடங்கள் வாழ்ந்த ஒரு இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்படும் பொழுது, நம் மனம் எதனையும் சிந்திக்காமல் துவண்டு போவோம். ஆனால், இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுயோவில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு கடைசியாக இந்த படத்திற்கான பாடல்களை பதிவு செய்துள்ளார்.
    இதனால் அறிவது யாதெனில், இளையராஜா என்பவர் இசை மாமேதை மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலே.....

  • @rebeccababurao9135
    @rebeccababurao9135 4 года назад +268

    இப்படி இசை அமைத்தால்,ராஜா அப்பா, கர்வம் கொண்டவராக இருப்பதில் தப்பே இல்லை.

    • @meowthecutie5733
      @meowthecutie5733 4 года назад +5

      Raja : nee Ean peru ah sonniya iru unnaku Oru royalty .!! 🤣😁

    • @saravananv2942
      @saravananv2942 4 года назад

      Unmaithan

    • @saravananv2942
      @saravananv2942 4 года назад

      @@meowthecutie5733 Dai potta raja music pethi yenda theriyam unnaku

  • @yuvankolanchi56
    @yuvankolanchi56 5 лет назад +226

    ராஜா ராஜாதான் 🤴❤
    இப்ப உள்ள இசையமைப்பாளர்களுக்கு இந்த பாடலைக்கேட்டதும் ஜுரம் வந்திருக்கும்.

  • @kabeersk8936
    @kabeersk8936 4 года назад +35

    சோக பாடலுக்கே உரிய குரல்... அழகு...

  • @bstarcomp
    @bstarcomp 5 лет назад +225

    சீறும் பாம்பை நம்பு.
    இந்த பாடலை ஒரு முறை தான் கேட்டேன் என்பவனை நம்பாதே.