Kalla Vinayagar Pathigam | கள்ள விநாயகர் பதிகம் | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்
    திருக்கடவூரில் விநாயகர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.
    அமிர்தம் கிடைக்காத தேவர்கள் விநாயகரை மறந்ததால் வந்த வினை இது என்பதனைப் புரிந்து விநாயகரை வணங்கி மீண்டும் அமிர்தத்தைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி நடந்த இடம் அபிராமி, அமிர்தக்கடேஸ்வரர் அருள்புரியும் திருக்கடவூர் ஆகும்.
    “இவர் கள்ள விநாயகர். அமுதக் குடத்தை மறைத்து வைத்துபோல் அந்தாதியை மறைந்து விட்டால் என்ன செய்வது? அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் இவரது சிறப்பினைக் கூறும். அமிர்தத்தை மறைத்ததால் இவர் கள்ள வாரண விநாயகரானார். அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் காப்புச் செய்யுளில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
    ஈசனின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி அருள்புரிறார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தித்தை வழங்கி சுக வாழ்வினைத் தருவார்.
    பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
    திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
    அங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்;
    வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 1.
    உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
    பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே
    நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
    விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே! 2.
    யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
    பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
    பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
    வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 3.
    அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
    கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
    இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
    விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 4.
    துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
    மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
    கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்
    விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 5.
    நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்
    பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
    மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?
    மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 6.
    இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய்
    உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ?
    வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
    விளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 7
    தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
    கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
    வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன்
    விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே 8
    மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
    தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
    தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
    மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 9.
    மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக்
    கைப்பொரு ளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;
    பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்
    மெய்ப்பொரு ளே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 10.

Комментарии • 13

  • @vilvanathanmuthiah951
    @vilvanathanmuthiah951 26 дней назад

    சிவசிவ எங்களுக்குக் கிடைத்த புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் இருந்தன.அதைத் திருத்திக்கொள்ள வழியில்லாமல் தவித்தோம்.எங்களுக்கு விநாயகர் இன்று அருள்புரிந்துவிட்டார்.நமஸ்காரம்.சிவசிவ

  • @sivalingam2176
    @sivalingam2176 Год назад

    எல்லாருக்கும் எங்களுடைய "விநாயகர் சதுர்த்தி! 🎉🎉🎉🎉
    வணக்கங்கள்! 🎉🎉🎉
    " வாழ்த்துக்கள்! 🎉🎉🎉🎉
    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉
    இன்று சதுர்த்தி தினத்தில் அருமையான கணபதி கானம்! 👌 சூப்பர்! 🎉🎉
    "நன்றி!
    அன்புடன்.
    ச. சிவலிங்கம்.

  • @prabaloganathan
    @prabaloganathan 2 месяца назад

    Om kallavinayagane potri🙏🌹🙏

  • @om8387
    @om8387 Год назад

    ஐயா வணக்கம் பக்தி இசைமாமணியின் மகனே தந்தைவழி தொடர்ந்துவருகின்ற மைந்தனே சிவசிதம்பரமே அரகர சிவ சிவ சிதம்பரமே உங்களின் இசைப்பயணம் தொடர உலகமெலாம் உங்களிசைகேட்டு மகிழ வாழ்த்துகிறோம் ஐயா

  • @srk8360
    @srk8360 Год назад

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐. அற்புதமான பதிகம்.இதுவரையில்நான்கேட்டது இல்லை.
    மிகவும் அருமை 👌👌
    தங்களின் தந்தை யாரின்குரலைப்போலவேஇருக்கிறது... தங்களின் குரலும் உச்சரிப்பும்.. மிகவும் அருமை.. மனதைஉருக வைத்த பதிவு.
    நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐.💞

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 Год назад

    தங்கள் தந்தை என் மானசீக குரு. தங்களுக்கு அவர் குரல் வாய்த்துள்ளது. வயதில் மூத்தவள் என்ற ஒரே தகுதியில் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இன்னும் இது போன்ற பல பழம் பாடல்களை வெளிக் கொணர சிவ குடும்பம் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @mohanana5694
    @mohanana5694 Год назад

    உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர் வாழும் கள்ள விநாயகனே விநாயகனே🙏 உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர்வாழும் கள்ள விநாயகனே🙏 உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர்வாழும் கள்ள விநாயகனே🙏🙏🙏 உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர்வாழும் கள்ள விநாயகனே🙏🙏🙏🙏 உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர்வாழும் கள்ள விநாயகனே🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 Год назад

    பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங் கள்ள விநாயகனே🙏 உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர்வாழும் கள்ள விநாயகனே🙏🙏🙏 பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங் கள்ள விநாயகனே🙏 உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ விண்ணும் புகழ் கடவூர்வாழும் கள்ள விநாயகனே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 Год назад

    பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகி வந்து என்றனை ஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங் கள்ள விநாயகனே 🙏🙏🙏பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகி வந்து என்றனை ஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங் கள்ள விநாயகனே விநாயகனே விநாயகனே🙏 பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங் கள்ள விநாயகனே🙏 பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங் கள்ள விநாயகனே🙏🙏🙏🙏🙏

  • @mohannarendran8623
    @mohannarendran8623 Год назад

    Excellent, thank you!!

  • @srinivasan-papa
    @srinivasan-papa Год назад

    Super Anna

  • @leelas5431
    @leelas5431 Год назад

    Happy ganesh chatruthi wishes for you sir. Thanks for the pathigam and lyrics. 🎉

  • @pvammaiyar5552
    @pvammaiyar5552 Год назад

    🙏🙏🙏