- Видео 244
- Просмотров 21 838
Tamizh Medai
Индия
Добавлен 20 сен 2020
தமிழ் மேடை - இலக்கியம் & இசை
கவிஞர் மா .உ. ஞானவடிவேல்
கவிஞர் மா .உ. ஞானவடிவேல்
Видео
Kambaramayanam Urai part 21 Gnanavadivel Kishkinda kandam
Просмотров 13414 дней назад
Kambaramayanam Urai part 21 Gnanavadivel Kishkinda kandam
தும்பி 132-கம்பராமாயணம் பகுதி 20- ஆரண்ய காண்டம்- ஞானவடிவேல்
Просмотров 7321 день назад
தும்பி 132-கம்பராமாயணம் பகுதி 20- ஆரண்ய காண்டம்- ஞானவடிவேல்
கம்பராமாயணம் தொடர் யகுதி 19- ஞானவடிவேல்
Просмотров 2328 дней назад
கம்பராமாயணம் தொடர் யகுதி 19- ஞானவடிவேல்
தும்பி 130- கம்பராமாயணம் தொடர் & கவிதைக்களஞ்சியம்
Просмотров 7628 дней назад
தும்பி 130- கம்பராமாயணம் தொடர் & கவிதைக்களஞ்சியம்
Thumbi 127 --Silappathikaram pattimandram
Просмотров 154Месяц назад
Thumbi 127 Silappathikaram pattimandram
Thumbi 126-தும்பி 126- கம்பராமாயணம் தொடர் & கவிதைக்களஞ்சியம்
Просмотров 68Месяц назад
Thumbi 126-தும்பி 126- கம்பராமாயணம் தொடர் & கவிதைக்களஞ்சியம்
Thumbi 124 -தும்பி 125-கம்பராமாயணம் தொடர் & கவிதைக்களஞ்சியம்
Просмотров 126Месяц назад
Thumbi 124 -தும்பி 125-கம்பராமாயணம் தொடர் & கவிதைக்களஞ்சியம்
தும்பி 123-வள்ளலார்- கருத்தரங்கம் 2-10-2024
Просмотров 1662 месяца назад
தும்பி 123-வள்ளலார்- கருத்தரங்கம் 2-10-2024
கம்ப ராமாயணம் உரை பகுதி 16 சடாயு சந்திப்பு & சூர்ப்பனகை வருகை
Просмотров 1132 месяца назад
கம்ப ராமாயணம் உரை பகுதி 16 சடாயு சந்திப்பு & சூர்ப்பனகை வருகை
கம்பராமாயணம் உரை பகுதி 15 ஆரண்யகாண்டம்-விராதன் ,சாபங்கள்,அகத்தியர் அறிமுகம்
Просмотров 732 месяца назад
கம்பராமாயணம் உரை பகுதி 15 ஆரண்யகாண்டம்-விராதன் ,சாபங்கள்,அகத்தியர் அறிமுகம்
கம்பராமாயணம் பகுதி 14 ஞான வடிவேல் அயோத்தியா காண்டம்'-பரதன் விடைபெறல்& பாதுகை அரசமைத்தல்
Просмотров 643 месяца назад
கம்பராமாயணம் பகுதி 14 ஞான வடிவேல் அயோத்தியா காண்டம்'-பரதன் விடைபெறல்& பாதுகை அரசமைத்தல்
கம்பர் அரசியல் படலம் கிட்கிந்தா காண்டம்
Просмотров 293 месяца назад
கம்பர் அரசியல் படலம் கிட்கிந்தா காண்டம்
கம்பராமாயணம் உரை- பகுதி 12- மா உ ஞான வடிவேல்
Просмотров 834 месяца назад
கம்பராமாயணம் உரை- பகுதி 12- மா உ ஞான வடிவேல்
>>> அன்புடன் சமுகி >>> அருமை . விதி கருப்பு பலகை . கற்பு அந்த கருப்பு பலகையின் மையத்தில் ஒரு வெள்ளை பெரிய புள்ளி அல்லது வட்டம் . அந்த வெள்ளை வட்டத்தை சுற்றி பெரிய கருப்பு இருந்தாலும், பலகையைப் பார்ப்பவர்களுக்கு (Logically)தர்க்கரீதியாக வெள்ளை வட்டம் மட்டுமே தெரியும். விதி எங்கும் உள்ளது நாம் அதை மறுக்க முடியாது ஆனால் கற்பு மட்டும் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் சிறப்பிக்கப்படுகிறது .ஆறு பங்கேற்பாளர்கள் நன்றாக அவர்களின் கடமை மிகவும் சிறப்பு ஆக செய்தார்கள் . பார்வையாளர்களின் கருத்தை குறைக்க வேண்டாம் .அதுவும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும் . திருவாளர்கள் கேஜிஆர்,நெல்லை தீபன்,பொன்.வேலுமயில்,சீனி ரவிபாரதி, மற்றும் திருமதி தேன்மொழி மேடம், திருமதி பானுமதி மேடம்,திருமதி சாந்தா மேடம் அவர்களுக்கு நன்றி. >>> அன்புடன் சமுகி >>>
கவிஞர் குமாபா கபிலன் *தும்பி தமிழ் இலக்கிய அமைப்பு 124-வது நிகழ்ச்சி முழுதும் கண்டு கேட்டு உளம் மகிழ்ந்தேன்* *செல்வி. அக்க்ஷயா பாடல் இனிமையான தொடக்கம்- வாழ்த்துகள்* *அமுதகவி ஞான வடிவேல்* அவர்களது *வரவேற்புரை* மற்றும் *பொதிகையாரின் நெறியாள்கை- இரண்டும் *சுருக்கமாக..சுவை யாக* இருந்தது. *இலக்கியக் கடல் கா.உ.கி ஐயா* கூறிய பாடலும் அதற்கான விளக்கமும் ஒப்பீடு தந்த இலக்கிய எடுத்துக்காட்டுகளும் *மிக மிக அருமை* *பூ உறங்குது* *பொழுதும் உறங்குது* *நான் உறங்கவில்லை* *நிலவே* பாடலை நினைவுகூர்ந்தது. *திருமதி ஜெயலஷ்மி மணிகண்டன் அவர்கள்..*ஓசை நயங்களை* உள்ளடக்கி.. விளக்கிக் கூறிய *தலைமை உரை* *வெகு சிறப்பு*!! கேட்ட பாடல்கள் எனினும் *அழகு* *அமுதகவி.ஞானவடிவேல் அவர்கள்சொற்பொழிவில்* சூர்ப்பணகை- ராமன் மீது வைத்திருந்த அதீத காதலை..அதாவது நல்ல பாம்பின் விஷம் போல் தலைக்கேறும் *காமத்தை விளக்கிய பாடல்களைக் கூறி அதற்கு உரிய பொருளைக் கூறியதையும்..இராவணனை எண்ணி முறையிட்டதையும்.. எப்படியேனும் தன் மனதில் உண்டான வேட்கையை நிறைவேற்ற துடித்ததையும் சிறப்பாக (பலரும் சொல்லாத பாடல் வரிகளைக்கூறி) விளக்கியதையும் கேட்டு ரசித்தேன்* *பூனை நக்கிக் குடித்தது போக. தற்போது..பாற்கடலையே பருகி வருவதாக நினைத்து மகிழ்ந்தேன்*!! *கருத்துரை வழங்கிய ஆளுமைகள் அனைவரும் மிகச்சிறந்த கருத்துகளைக் கூறியதையும் ரசித்தேன்* *சீனி ரவி பாரதி ஐயா..கூறிய கருத்துகளை எண்ணி மகிழ்ந்தேன்*!! ஒருத்தி தன் மீது அதீத காதல் வயப்படுகிறாள் என அறிந்த பிறகும்- அவளிடம் *கடலை* போடுவது அழகா !? *தீதும் நன்றும் பிறர் தர வாரா!* *நிதர்சனம்* *கண்ணதாசன் எம்எஸ்வி அறக்கட்டளை விழாவுக்குச் சென்றதால்..இன்றுதான் கண்டு கேட்டு ரசித்தேன் நன்றி. . *நிகழ்ச்சி மிகச் சிறப்பு* 🌺💐🌺💐🌺💐🌺💐

Mrs Banumathy Krishnakumar அருமை சார். சூர்ப்பனகை மூக்கறுத்தல் & கரன் வதம் படலம் குறித்து சிலப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து தங்குத்தடையில்லா உரையாக பேசியது சிறப்பு.👏👏 *கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்கவில்லையே* என்று கவியரசர் உள்பட எல்லோரும் பேசுவார்கள். ஆனால், இராமன் சூர்ப்பனகையின் முதல் சந்திப்பின்போது, சூர்ப்பனகையிடம் இராமன் தந்த பொய்யான நம்பிக்கையைப் யாரும் பேசாமல் தவிர்த்துவிடுவார்கள். நீங்கள் பேசினீர்கள். அதுவும் சிறப்பு!
முனைவர் த அமிர்தலிங்கம் மிகவும் அருமை அருமை ஐயா சூரிய உதயம் நிகழ்வு கம்பர் வருணனை விளக்கி இலக்குவன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து மூக்கைக்குறைத்தது விளக்கி சூர்ப்பனகை அண்ணா வோ மருகாவோ என்று புலம்பியதையும் விளக்கி தருமத்தின் உருவம் ஆன இராமபிரான் கரன் வதைத்த சிறப்பையும் விளக்கிய தும்பி அமைப்பாளர் ஞான வடிவேல் உரை அருமை அருமை ஐயா! மிக்க நன்றி மகிழ்ச்சி பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐

Ramani ammal Bangalore அருமை அருமை என்று சொன்னால் போதாது கவியருவி யின் கவிதை விளக்க உரை மிகமிக சிறப்பு வணக்கம் ஐயா பன்முகத் திறமை யார் கவிஞர் ஞான வடிவேல் அவர்கள் சூப்பநகை படலத்தையாரும் அவர்சொன்னமாதிரிவந்தான் மூக்கை அறுத்தான் என்று மட்டும் படாமல் சொல்வார்கள் ஆனால் ஞானவடிவேல் ஐயா உரையை கேட்டுத்தான் இவ்வளவு செய்திகள் இருக்கிறதா என்று உணர்ந்தேன் சூப்பநநகையை தலைமுடியைபற்றியதை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உதாரணம் சொன்னது மிக எதார்த்தமாக எடுத்துகூறியவிதம்அருமைவாழ்த்துகள் ஐயா விளக்க உரை முழுவதும் மிகமிக சிறப்பு வாழ்த்துகள் ஜெயமணி மா பற்றி சொல்லவே போட்டாள் நவரசநாயகி அருமையாக அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
தமிழ் மேடையில் கம்ப இராமாயணத்தை விவரிக்கும் கவிஞர் ஞான வடிவேல் அவர்களுக்கு வாழ்த்துகள். இரட்டுற மொழிந்த கம்பரை எடுத்துக் காட்டியது சிறப்பு.
வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வு எனது வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉 முனைவர் ஆ.விஜயராணி
கவிஞர் ஞானவடிவேல் அவர்களுடைய இராமாயணப் பேருரை சிறப்பு. காப்பியத்தின் மீது அவர் கொள்ளும் முழுப் பார்வை அருமை. தொடரட்டும் உரைப் பொழிவு. படரட்டும் கம்பன் கவி பார் முழுதும்!
கவிஞர் ஞான வடிவேலுவின் பேச்சு, கம்பரின் கவிதைகளோடு இணைந்து கேட்க மிகவும் சுவையாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறேன், அடுத்த பகுதிகளையும் தொடரவும். நன்றி.
அன்பு நன்றிகள்❤
தசூ
தும்பிஅமைப்புக்குநல்வாழ்த்துக்கள்
நல்ல தலைப்பு. சிறப்பான வாதங்கள். நடுநிலையான தீர்ப்பு 🎉
அருமையான வாதங்கள்இடை இடையே நடுவர் நகைச்சுவை அழகான தீர்ப்பு அருமை தோழரே❤
வாழ்த்துக்கள் அட்சயா
*தும்பி தமிழ் இலக்கிய அமைப்பு நேற்று மாலை நடத்திய இணையவழி பட்டிமன்றம் -* *தலைப்பு*: *கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தது- பக்திப் பாடல்களா? காதல் பாடல்களா..தத்துவப் பாடல்களா*? *உண்மையிலேயே மிகச்சிறந்த பட்டிமன்றமாக நடந்தேறியது*!! *கவித்தென்றல் மா.உ.ஞானவடிவேல் அவர்களுக்கு மனம் மகிழ் நன்றிகள்* *கவியருவி. கா.உ.கி.ஐயா அவர்கள் நடுவராக இருந்து.. அருவி போல.. மடை திறந்த வெள்ளம் போல..ஆற்றிய உரை மிக மிகச் சிறப்பாக அமைந்தது. எண்ணற்ற பாடல்களை அவர் எடுத்துரைத்ததும் பக்திப்பாடல்களே மக்கள் மனங்களை அதிகம் கவர்ந்தது என..நல்லதொரு தீர்ப்பினை முடிவில் வழங்கியதும்- பட்டிமன்றத்தை- சுவையாக்கியது*!! *அதேபோல பக்திப்பாடல்களே என்ற அணியில் பேசிய முனைவர் அமிர்தலிங்கம் ஐயா மற்றும் ஞானவடிவேல் பேச்சும் -அருமை* *காதல் பாடல்களே என்ற தலைப்பில் திருமதி பானுமதி கிருஷ்ணகுமார் அவர்களும்..திரு.சுப்பிரமணியம் அவர்களுடைய பேச்சுக்களும் இனிமை*!! *தத்துவப் பாடல்களே என்ற அணியில் நானும்..கவித்தேனீ வசந்தகுமார் பாரதி அவர்களும் தத்துவப் பாடல்கள் மக்கள் மனங்களைக் கவர்ந்தவை என எங்கள் வாதங்களை எடுத்துரைத்தோம்* *நெறியாள்கை திலகம் பொதிகை மு செல்வராசன் அவர்கள் மிக நேர்த்தியாக பட்டிமன்றத்தை நெறிப்படுத்தினார்* *அக்ஷயா - நிபுணா இருவரும் இனிய இரு பாடல்களைப் பாடி..நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தது மிக இனிமை* *104-வது நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திய கவித்தென்றல் மா.உ. ஞானவடிவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்*!! *தும்பி..தமிழ் வானில்..உயர உயரச் சிறகடித்துப் பறக்கட்டும்..சிறக்கட்டும்* ✍️ *கு.மா.பா.கபிலன்*
2 ஆம் பகுதியும் இனிமையாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. வாழ்த்துகள்
நன்றி அம்மா
கம்ப இராமாயணம் பற்றிய உங்கள் உரை அருமை. "அவர்"- இறை ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்" அன்னவர்க்கே சரணாக ஆகுங்களே" , ஊரை சொல்லி அரசரை சொல்வது போல, வள்ளுவர் மழையை 2வது அதிகாரத்தில் வைத்தது போல் ஆற்றுப் படலத்தை முதலில் எழுதியிருப்பது என்று பலவற்றையும் நுட்பமாக சொல்லியிருக்கிறீர்கள்!!அற்புதமான உரை. வாழ்த்துகள். தொடர்க தொண்டை.
அருமை நண்பர்
25/1/24 இன்று தும்பியின் ரீங்காரம் கேட்கும் பேறு பெற்றேன். பேசிய அனைவரும் தங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைத்தனர். ஐயா சு. வினைதீர்த்தான் உரை அருமை.பொதுவாக நாம் தமிழை அன்னை என்போம். ஆனால் தமிழைக் கொஞ்சி பேசும் அழகைக் கேட்கையில் தமிழைக்குழந்தையாக குலாவத்தோன்றுகிறது. பொதுவாக தோட்டத்தில் தும்பி இருக்கும். அதுபோல தும்பி கூட்டத்தில் தேன் சிந்தும் மலர்களை ரசிக்க உதவிய திரு. கு. ஞான வடிவேல் அவர்களுக்கு நன்றிகள் பல... 🎉🎉
ஒரு ஆகச் சிறந்த தொடக்கமாக கம்ப இராமாயணம் உங்களால் தொடங்கப் பட்டிருக்கிறது. கம்பன் இப்படித் தான் எழுதியிருக்கான் என்று தெளிவாக நீங்கள் புரிந்துக் கொண்ட வகையில்.. எங்களுக்கும் கம்பரசத்தை சுவைக் காட்டியிருப்பதற்கு எப்படி நன்றி சொல்ல....சொற்பொழிவாளர்களுக்கே உரிய நடை..இராமனின் முழு அருளுக்கும் பாத்திரமானவர். அதனால் தான் அழகுத் தமிழில் விளக்கம் கேட்க கேட்க இன்பமாய்...மிக்க நன்றி. தொடர்க.
கடலை பூனையால் நக்கி குடிக்க முடியாது. ஆனால் கடல் நீரையும் சுவையானதாக மாற்றுவதைப் போல எளிதாக புரியும்படி அளித்த தாங்களின் பாங்கு நன்றிக்கு உரியது. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். நன்றி
சிறப்பு வாழ்த்துகள் ஐயா
சிறப்பு
கவிஞர் கு மா பா கபிலன் மிகச்சிறந்த நிகழ்ச்சி கவித்தென்றல் மா.உ.ஞானவடிவேல் அவர்களின் உரை மிக மிக அருமை. கம்பராமாயணத் தொடர் சிறப்பு உரை தொடரட்டும். திருமிகு.வினைதீர்த்தான் ஐயாவின் சிறப்புரை..ரசித்தேன் வாழ்வியல் சிந்தனைகளை அவரது குரலில் கேட்டு மகிழ்ந்தேன் பொதிகையாரின் நெறியாள்கை மிக அருமை. சீனியாரின் தொடக்க உரை..நிறைவுரை இரண்டும் இனிமை நன்றியுரை நல்கிய முகவை திருநாதன் உரை அனைவரையும் ஈர்த்தது. கருத்துரைகள் வழங்கிய தமிழாளுமைகள் உரைகளும் அருமை மொத்தத்தில் 101 ஆம் நிகழ்ச்சி மிக மிக அருமையாக நடந்தேறியது.
நாலடியார் நூலுக்கு நான்கு அடியார் கூட இல்லையே! கவித் தென்றல் ஞான வடிவேல் வாதம் அருமை. சிலம்பை பாலச் சந்தர் திரைப்படத்தொடு இணைத்து காட்டியது அருமை. கதை இல்லா விட்டால் சதை இல்லாத எலும்புக்கூடு என்று வாதிட்டது சிறப்பு. அறிஞர் பெருமக்கள் அனைவரும் மிகச் சிறந்த சிந்தனை களை வெளிப்படுத்தினர்.. நடுவர் கே. ஜி. ஆர் வழங்கிய தீர்ப்பு மிகவும் சிறப்பு தும்பி அமைப்பாளர் கவிஞர் ஞான வடிவேல் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Jsksjjsjsjsjjsjisisiisisiididiididididiididiisisiidisidiidisisiisiiiidiididididiidi
Arumai Arumai
மிகவும் அருமையாக இருந்தது வளர்க தங்களது சிவப்பணி வாழ்க வளமுடன்
சிறப்பு
நல்லதொரு நிகழ்வு அனைதுப் பேராளுமைகளுக்கும் நன்றி வாழ்த்துகள் ஐயா
பாவேந்தர் பாடலை பாட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. "துன்பம் நேர்கையில்" -பாடல் "ஓர் இரவு" திரைப்படத்தில் இடம் பெற்றப் பாடல்.
மிக அருமையான நிகழ்ச்சி.. முழுமையாகக் கண்டு கேட்டேன் நேற்று. .பார்த்து மகிழ்ந்தேன் இன்று. முனைவர் அமிர்தலிங்கம் ஐயா தொடக்க உரை..மிக அருமை. அதற்கு முன்பாக செல்விகள் ஞான அட்சயா..நிபுணா இருவரும் பாடிய பாடல்கள் இனிமை. முனைவர்.மு.பா.ஐயா பேசியது ஆய்வுரை மிக அருமை. பாடிய பாடல்கள் இனிமை கவியரங்கில் பங்கேற்ற அனைவரும் மிக அருமையான கவிதைகளை வழங்கினார்கள். கவிஞர் பொதிகையார் கவிஞர் பட்டு ராசா பாரதி ஐயா இருவருடைய பங்களிப்பும் மிக அருமை. 92 வது நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய தும்பி தமிழ் இலக்கிய அமைப்பின் நிறுவனர்.மாசற்ற உள்ளம் படைத்த கவிஞர் மா.உ.ஞானவடிவேவ ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அனைத்து கவிஞர்களும் மிக அருமையாகக் கவிதை வழங்கினார்கள் கு மா பா கபிலன்
👏💐
அருமையான சொற்பொழிவு ஐயா...
மிக அருமை
சிறப்பான உரை.. வாழ்த்துகள் கவிஞரே...
வாழ்த்துகள்! பாராட்டுகள்! உவமைக் கவிஞர் சுரதா அவர்களை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள்! அருமை!
முனைவர் த அமிர்தலிங்கம் சென்னை சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் இருந்தது கவித் தென்றல் கலைச் செல்வர் இதயக் கடல் ஞானவேல் அவர்களின் கவிஞர் கு. மா. பா. அவர்களின் கவிதைகள் நூல் குறித்த ஆய்வுரை. ஒரு மணிநேரம் ஓடியது தெரியவில்லை. இனி நூல் ஆய்வு என்றால் நம் கவித் தென்றல் தான் ஆற்ற வேண்டும் என்று பல்லோரும் விரும்பும் வகையில் எளிய உவமைகளோடு ஏற்றம் மிகு இலக்கியச் சான்றுகளோடு முழு தரிசனமும் நமக்குக் காட்டிய கண்ணதாசன் விருதாளர் கவித் தென்றல் ஞான வடிவேல் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்ணதாசன்கலைக் கூடம் கவிஞர் காவிரிமைந்தன் அவர்களின் தொகுப்புரை இணைப்புரை பாராட்டுரை அருமையிலும் அருமை. கவிஞர் கு. மா. பா. கபிலரின் ஏற்புரை தம் தந்தைக்கு அவர் கட்டிய அன்புக்கோர் ஆல யம் என்றும் அழியாத தஞ்சைப் பெருங்கோயில். கவிஞர் கே. ஜி. ஆர். கவிஞர் தேன் மொழி கவிஞர் கவித் தேனி வசந்த். கவிஞர் பொதிகை செல்வராசு எனப் பல்லோரும் உரையாற்ற எளியேனும் உரையாற்ற எல்லோரும் ஒரே மனதோடு கவிஞர் கு. மா. பா. அவர்கள் நூல்களை நாட்டு உடமை ஆக்கிச் சிறப்பிக்க வேண்டினோம். இந்த இனிய விழா கவிஞர் கு. மா. பா. அவர் களின் 102ஆம் ஆண்டின் பெருமை மிகு விழா என்று போற்றிட வேண்டும். அனைவருக்கும் கவிஞர் கு. மா. பா. கபிலர் கண்ணதாசன் கலைக் கூடம் கவிஞர் காவிரி மைந்தன் தும்பி நாயகர் கவித் தென்றல் ஞான வடிவேல் ஆகியோர் க் கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🏼💐🙏🏼
இந்த இணைப்பு எனது வலைப்பக்கத்தில் - valarumkavithai.blogspot.com/2022/03/blog-post.html
கவிஞர் கிருஷ்ணவேணி உள்பட அனைவரின் கவிதையும் மிக அருமை! அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொகுப்பாளரின் குரல் அருமை
புதிய முயற்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மிக அருமையான கவிதை மேடை
தும்பி இலக்கிய வட்டத்திற்கு மிக்க நன்றி.வாழ்க வளர்க.
தும்பியின் எண்பத்தோராவது நிகழ்ச்சி..நம்மை இன்பத் தேரில் ஏற்றிச் சென்ற நிகழ்ச்சி.மீண்டும் கேட்டுமகிழ்ந்தேன் *தமிழறிஞர் முனைவர் அமிர்தலிங்கம் அவர்கள் குரலில் அபிராமி அந்தாதி பாடல்களைக் கேட்டு ரசித்தேன்.தலைமை உரையை சிறப்பாக வழங்கிய ஏரிக்கரையாரின் உரையையும் கேட்டு மகிழ்ந்தேன்* *மாசற்ற உள்ளம் படைத்த கவிஞர் ஞானவடிவேல் அவர்களின் தமிழ்ப்பணி என்றென்றும் தொடர வேண்டுகிறேன்* கவிஞர் குமாபா கபிலன்
தும்பி நாளுக்கு நாள் உயர பறக்கிறது என்றுதான் இருந்தேன். ஆனால் தமிழகம் கடந்து இத்தனை தூரம் பறக்கிறது என்பதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கூடிய விரைவில் உலகளவில் உள்ள தமிழர்களின் வீடுதோறும் தொட்டு பறக்க வாழ்த்துக்கள்.
❤️❤️🙏🙏🙏🙏நன்றி அய்யா உங்கள் பின்னூட்டம் உற்சாகம் தருகிறது .நன்றி
👍
மகிழ்ச்சி நன்றி தும்பி இலக்கிய அமைப்புக்கு