- Видео 162
- Просмотров 10 217
Jothi Web TV
Добавлен 23 авг 2024
திருமுறைகள் ஓதுவோம் சிவனடி சேர்வோம்.
அறநெறி வளர்ப்போம் மனிதநேயம் காப்போம்
அறநெறி வளர்ப்போம் மனிதநேயம் காப்போம்
08.05.2025
ஓம் நமசிவாய
ஜெய் குருவே துணை சுவாமிகள் திருவடி போற்றி போற்றி
திருஞானசம்பந்தர் திருமடம்
ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளானையின் வண்ணம் இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் எமது கோவிலில் நடைபெற்ற கணபதி ஓமம் அன்று ஆசிரியர்கள் மற்றும் அறநெறி மாணவர்கள் மிக அழகாக பாடும் பஜனை பாடல்கள் நிகழ்வானது மிக சிறப்பாக நடைபெற்றது. அனுசரணை பிரணவம் அறகட்டளை மற்றும் சிவஞான தமிழ் பேரவை அவுஸ்திரேலியா நன்றி.
ஜெய் குருவே துணை சுவாமிகள் திருவடி போற்றி போற்றி
திருஞானசம்பந்தர் திருமடம்
ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளானையின் வண்ணம் இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் எமது கோவிலில் நடைபெற்ற கணபதி ஓமம் அன்று ஆசிரியர்கள் மற்றும் அறநெறி மாணவர்கள் மிக அழகாக பாடும் பஜனை பாடல்கள் நிகழ்வானது மிக சிறப்பாக நடைபெற்றது. அனுசரணை பிரணவம் அறகட்டளை மற்றும் சிவஞான தமிழ் பேரவை அவுஸ்திரேலியா நன்றி.
Просмотров: 135
Видео
05.01.2025
Просмотров 2307 часов назад
ஓம் நமசிவாய ஜெய் குருவே துணை சுவாமிகள் திருவடி போற்றி போற்றி திருஞானசம்பந்தர் திருமடம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளானையின் வண்ணம் இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் எமது கோவிலில் நடைபெற்ற கணபதி ஓமம் அன்று ஆசிரியர்கள் மற்றும் அறநெறி மாணவர்கள் மிக அழகாக பாடும் பஜனை பாடல்கள் நிகழ்வானது மிக சிறப்பாக நடைபெற்றது. அனுசரணை பிரணவம் அறகட்டளை மற்றும் சிவஞான தமிழ் பேரவை அ...
04.01.2025
Просмотров 1139 часов назад
ஓம் நமசிவாய ஜெய் குருவே துணை சுவாமிகள் திருவடி போற்றி போற்றி திருஞானசம்பந்தர் திருமடம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளானையின் வண்ணம் இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் எம்மை மெய் மயங்க செய்யும் சிவனுடைய அற்புத பாடல் அனுசரணை பிரணவம் அறகட்டளை மற்றும் சிவஞான தமிழ் பேரவை அவுஸ்திரேலியா நன்றி.
04.01.2025
Просмотров 1,2 тыс.12 часов назад
ஓம் நமசிவாய ஜெய் குருவே துணை சுவாமிகள் திருவடி போற்றி போற்றி திருஞானசம்பந்தர் திருமடம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளானையின் வண்ணம் இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் உத்தரகோதம் ஆலயம் பற்றிய சிறப்பான விளக்கம். அனுசரணை பிரணவம் அறகட்டளை மற்றும் சிவஞான தமிழ் பேரவை அவுஸ்திரேலியா நன்றி.
பிரணவம் அறக்கட்டளையின் ஸ்தாபகரான ரமேஷ்பாபு ஐயா அவர்களின் சிறப்புரை
Просмотров 86День назад
பிரணவம் அறக்கட்டளையின் ஸ்தாபகரான ரமேஷ்பாபு ஐயா அவர்களின் சிறப்புரை
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.🎂🎂🎂🎂🎂🎂
Просмотров 5214 дней назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.🎂🎂🎂🎂🎂🎂
அர்த்தமுள்ள ஆன்மிகம் நடராஜரின் உருவ ரகசியம் என்ன? நன்றி - Jaya TV
Просмотров 14Месяц назад
அர்த்தமுள்ள ஆன்மிகம் நடராஜரின் உருவ ரகசியம் என்ன? நன்றி - Jaya TV
ராஜ ராஜ சோழனின் சதய விழாவில் இன்னிசை ஆடல் பாடல் சாதனை படைத்த 1039 மாணவியர்கள். நன்றி - Polimer News
Просмотров 9Месяц назад
ராஜ ராஜ சோழனின் சதய விழாவில் இன்னிசை ஆடல் பாடல் சாதனை படைத்த 1039 மாணவியர்கள். நன்றி - Polimer News
தேவி -என்னை விட நின் மகன் முருகன் சிறந்தவன் 🔥 சிவனே முருகன் ஆனால் சிவத்தை விட முருகன் சிறந்தவன் .
Просмотров 3Месяц назад
தேவி -என்னை விட நின் மகன் முருகன் சிறந்தவன் 🔥 சிவனே முருகன் ஆனால் சிவத்தை விட முருகன் சிறந்தவன் .
முருகன் திருக்கல்யாண ஊஞ்சல் ஆடுதல் 🙏🏼ஹட்டன் ஸ்ரீ சிவசுப்ரமணியன் ஆலயம் 🙏🏼
Просмотров 12Месяц назад
முருகன் திருக்கல்யாண ஊஞ்சல் ஆடுதல் 🙏🏼ஹட்டன் ஸ்ரீ சிவசுப்ரமணியன் ஆலயம் 🙏🏼
ஹட்டன் முருகன் கோவில் - கால சந்தி பூஜை - 07/11/2024
Просмотров 222 месяца назад
ஹட்டன் முருகன் கோவில் - கால சந்தி பூஜை - 07/11/2024
ஓம் நமசிவாய 🙏 விநாயகர் துணை 🙏 தலவாக்கலை சின்ன மல்லிகப்பூ விநாயகர் கோவில் 🙏
Просмотров 12 месяца назад
ஓம் நமசிவாய 🙏 விநாயகர் துணை 🙏 தலவாக்கலை சின்ன மல்லிகப்பூ விநாயகர் கோவில் 🙏
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எங்கள் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎊
Просмотров 442 месяца назад
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எங்கள் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎊
நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா நகரின் சீன் தோட்டத்தில் அமைந்துள்ள பத்தினி அம்மன் ஆலயம் 🙏
Просмотров 402 месяца назад
நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா நகரின் சீன் தோட்டத்தில் அமைந்துள்ள பத்தினி அம்மன் ஆலயம் 🙏
நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிவ வழிபாடும் அர்ச்சனையும் 26-10-2024
Просмотров 162 месяца назад
நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிவ வழிபாடும் அர்ச்சனையும் 26-10-2024
அன்னதான சேவை! அன்னதான குழு காஞ்சிபுரம் ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் அன்னதானம்.
Просмотров 112 месяца назад
அன்னதான சேவை! அன்னதான குழு காஞ்சிபுரம் ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் அன்னதானம்.
தினம் ஒரு திருமுறை 15.10.2024 - செவ்வாய்க்கிழமை
Просмотров 852 месяца назад
தினம் ஒரு திருமுறை 15.10.2024 - செவ்வாய்க்கிழமை
தினம் ஒரு திருமுறை 14.10.2024 - திங்கட்கிழமை
Просмотров 552 месяца назад
தினம் ஒரு திருமுறை 14.10.2024 - திங்கட்கிழமை
தினம் ஒரு திருமுறை 13.10.2024 - ஞாயிற்றுக்கிழமை
Просмотров 162 месяца назад
தினம் ஒரு திருமுறை 13.10.2024 - ஞாயிற்றுக்கிழமை
எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய 8 ஆம் திருமுறை-திருவாசகம் தொடர் முற்றோதுதல் விழா 🙏
Просмотров 762 месяца назад
எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய 8 ஆம் திருமுறை-திருவாசகம் தொடர் முற்றோதுதல் விழா 🙏
ஸ்ரீ நவநாதசித்நர் ஜீவசமாதி குயின்ஸ்பெரி
Просмотров 562 месяца назад
ஸ்ரீ நவநாதசித்நர் ஜீவசமாதி குயின்ஸ்பெரி
தினம் ஒரு திருமுறை 12.10.2024 - சனிக்கிழமை
Просмотров 262 месяца назад
தினம் ஒரு திருமுறை 12.10.2024 - சனிக்கிழமை
தினம் ஒரு திருமுறை 11.10.2024 - வெள்ளிக்கிழமை
Просмотров 292 месяца назад
தினம் ஒரு திருமுறை 11.10.2024 - வெள்ளிக்கிழமை
பிரணவம் அறக்கட்டளை மற்றும் திருஞானசம்பந்தர் சைவப்பணிமன்ற காரியாலயத்தில் நடைப்பெற்ற சரஸ்வதி பூஜை
Просмотров 582 месяца назад
பிரணவம் அறக்கட்டளை மற்றும் திருஞானசம்பந்தர் சைவப்பணிமன்ற காரியாலயத்தில் நடைப்பெற்ற சரஸ்வதி பூஜை
தினம் ஒரு திருமுறை 10.10.2024 - வியாழக்கிழமை
Просмотров 422 месяца назад
தினம் ஒரு திருமுறை 10.10.2024 - வியாழக்கிழமை
தினம் ஒரு திருமுறை 09.10.2024 - புதன்கிழமை
Просмотров 123 месяца назад
தினம் ஒரு திருமுறை 09.10.2024 - புதன்கிழமை
தினம் ஒரு திருமுறை 08.10.2024 - செவ்வாய்க்கிழமை
Просмотров 563 месяца назад
தினம் ஒரு திருமுறை 08.10.2024 - செவ்வாய்க்கிழமை
தினம் ஒரு திருமுறை 07.10.2024 - திங்கட்கிழமை
Просмотров 1533 месяца назад
தினம் ஒரு திருமுறை 07.10.2024 - திங்கட்கிழமை
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் நவராத்திரி 04 ஆம் நாள் பூஜை - லட்சுமி பூஜை 🙏🏼
Просмотров 83 месяца назад
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் நவராத்திரி 04 ஆம் நாள் பூஜை - லட்சுமி பூஜை 🙏🏼
ஓம் நமசிவாய நமக திரு உத்தரகோசை மங்கை நாதா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் ஓம் மங்களாம்பிகை தாயே போற்றி போற்றி ஓம் ஓம் மங்கள நாதனே போற்றி திருச்சிற்றம்பலமே திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் போற்றி
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க❤❤❤❤
❤
*தினம் ஒரு திருமுறை* *28.11.2024 - வியாழக்கிழமை* *அருளியவர் :* வேணாட்டடிகள் *திருமுறை :* ஒன்பதாம் திருமுறை *படுமதமும் இடவயிறும் உடைய களிறு* *பாடல் விளக்கம் :* *திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஒழுகு கின்ற மத நீரையும் பானை போன்ற வயிற்றினையும் உடைய யானை முகனாகிய விநாயகனை மகனாக உடைய தலைவனே! உன் திரு வருளை உணர்தற்பொருட்டு அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தாய். அகத்தியருக்கு மேம்பட்ட நிலையை அருளி, அடியே னுக்கு உலகியலை அருளிய இச்செயல் இரண்டு எருதுகள் உள்ள இடத்திலே ஓர் எருதுக்குப் புல்லை வழங்கி மற்றொன்றினுக்கு வைக் கோலை வழங்குவதனை ஒக்கும் செயலாகும். இஃது உனக்கு எல்லோ ரிடமும் நடுவு நிலையோடு நடந்துகொள்ளும் பண்பு ஆகுமா?*
*தினம் ஒரு திருமுறை* *09.11.2024 - சனிக்கிழமை* *அருளியவர் :* சுந்தரமூர்த்தி சுவாமிகள் *திருமுறை :* ஏழாம் திருமுறை *ஒப்பிலா முலையாள் ஒரு பாகா* *பாடல் விளக்கம் :* *நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே, மேலானவனே, ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே, முப்புரங்களைத் தீவளையச் செய்து, அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே, அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந் தருளிய செல்வனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர்! என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.*
*தினம் ஒரு திருமுறை* *08.11.2024 - வெள்ளிக்கிழமை* *அருளியவர் :* சுந்தரமூர்த்தி சுவாமிகள் *திருமுறை :* ஏழாம் திருமுறை *மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை* *பாடல் விளக்கம் :* *நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே, தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக் கின்ற அண்ணலே, தேவர்களாகிய, விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, யான் கண் இல்லேனாயினேன் ; அதன்மேலும், உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால், உனக்குத்தான் சுமையாய் விட்டேன் ; எனக்கு உறவாவார் உன்னை யன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.*
*தினம் ஒரு திருமுறை* *05.11.2024 - செவ்வாய்க்கிழமை* *அருளியவர் :* திருநாவுக்கரசர் *திருமுறை :* நான்காம் திருமுறை *பானமர் ஏனமாகிப் பாரிடம்* *பாடல் விளக்கம் :* *தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்திற் பூமியை அண்டவெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்தெடுத்த திருமாலும், தேன் மிக்க தாமரையின் அகவிதழிலிருக்கும் பிரமனும் தாம் தீத்தம்பத்தின் அடியையோ முடியையோ காணமாட்டாத துயரத்தினராக அவர்கள் மயக்கத்தைப் போக்கிய அழகிய வடிவினை உடையராய், வெண்ணிறக் காளை வாகனமுடை யவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.*
*தினம் ஒரு திருமுறை* *04.11.2024 - திங்கட்கிழமை* *அருளியவர் :* திருநாவுக்கரசர் *திருமுறை :* நான்காம் திருமுறை *முந்தி வானோர்கள் வந்து* *பாடல் விளக்கம் :* *மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான், முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க, சிவபாதங்களைத் தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்தி மாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர்.*
*தினம் ஒரு திருமுறை* *03.11.2024 - ஞாயிற்றுக்கிழமை* *அருளியவர் :* திருநாவுக்கரசர் *திருமுறை :* நான்காம் திருமுறை *விடைதரு கொடியர் போலும்* *பாடல் விளக்கம் :* *காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய், வெள்ளிய பூணூலை அணிந்தவராய், மழுப்படையை ஏந்தியவராய், பாயும் இயல்புள்ள புலியின் தோலை உடுத்தவராய், கீள் உடையை அணிபவராய், உலகங்களை ஆள்பவராய், தம்மை அடையும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவராயுள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.*
*தினம் ஒரு திருமுறை* *02.11.2024 - சனிக்கிழமை* *அருளியவர் :* திருநாவுக்கரசர் *திருமுறை :* நான்காம் திருமுறை *வக்கரன் உயிரை வவ்வக்* *பாடல் விளக்கம் :* *வக்கரன் உயிரைப் போக்குவதற்குத் திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட அவருக்குச் சக்கரம் வழங்கியவராய், தானம் புரிபவர்களுக்குத் தலைவராய், அறிவற்றவர்களைத் துக்கம் தரும் பிறவித்துயரிலே வீழ்த்துபவராய், அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.*
ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம், பொருள் - திருத்தல முற்றோதல் - 164 ஆவது அமர்வு திருமுறை அன்பர்களே! சிவஞானத் தமிழ்ப் பேரவை ஆஸ்திரேலியாவின் ஏற்பாட்டில் திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனப் புலவர், சிவநெறி பிரச்சாரகர், ஸ்ரீ காரியம் வாமதேவ ஸ்ரீ சிவாக்கர தேசிக சுவாமிகள் நடத்திவரும் திருத்தல முற்றோதலில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம், ======================================================================================== Zoom அழைப்பு Sivagnana Tamil Peravai Inc (Australia) is inviting you to a scheduled Zoom meeting. Topic: 164 ஆவது அமர்வு - திருத்தல முற்றோதல் Time: Saturday, November 2, 2024 03:00 PM Canberra, Melbourne, Sydney, 9:30 AM India/Sri Lanka Join Zoom Meeting us02web.zoom.us/j/2704072147?pwd=ZEFtRkw0QTJhZVVOTithcEhNWHZMUT09 Meeting ID: 270 407 2147 Passcode: P@nn1sai மேலும் சிவஞானத் தமிழ்ப் பேரவை, ஆஸ்திரேலியாவின் RUclips சானல் இது. ruclips.net/user/சிவஞானத்தமிழ்ப்பேரவைஆஸ்திரேலியா இதிலே Live என்ற பகுதியில் எப்போதும் காணலாம். இந்தச் சானலிலே அடியார்கள் Subscribe என்பதை அழுத்தி சேர்ந்து கொள்ளும்படியும் வேண்டிக் கொள்கின்றோம். ======================================================================== திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல் சனிக்கிழமைகள் தோறும் நடைபெறும் நிகழ்வு. புதிய வகைத் திருமுறை முற்றோதல் நடைபெறும் வெவ்வேறு நாடுகளுக்குரிய நேரம் (October 24 to March 25) ஆஸ்திரேலியா சிட்னி, மெல்போர்ண், கன்பரா மற்றும் நியுசிலாந்து அடியார்கள் நேர மாற்றத்தைக் கவனிக்க வேண்டுகிறோம். A. Sydney, Melbourne, Australia 3:00 pm AEDT B. Auckland, New Zealand 5:00 pm NZDT C. Bangkok, Thailand 11:00 am ICT D. Chennai, India 9:30 am IST E. Sri Lanka 9:30 am F. Durban, South Africa 6:00 am SAST G. Jakarta, Indonesia & Bangkok 11:00 AM H. London, United Kingdom 4:00 am BST I. Myanmar Time, MMT 10:30 am MMT J. France & Switzerland 5:00 am CEST K. Reunion Time, RET 8:00 am RET L. Singapore & Malaysia 12:00 PM SGT M. Toronto, Canada 12:00 AM (Friday midnight) N. New York, USA 12:00 AM (Friday midnight) O. California, USA 9:00 PM (Friday night) ====================================================== இணைக்கப்பட்டுள்ள தலத் தேவாரத் தொகுப்புகள் ==================================================== 1. 188 - திருமறைக்காடு (தொடர்ச்சி) சென்ற வாரம் சுவாமிகள் திருமறைக்காட்டுத் தல வழிபாட்டை தொடர்ந்து நடாத்தி எம்மை அங்கேயே தங்க வைத்திருந்தார்கள். இந்த வாரம் சுவாமிகள் திருமறைக்காட்டிலே அருளப்பட்ட ஏனைய திருப்பதிகங்களைத் தொடர்ந்து பாடி அருளாசி வழங்க இருக்கின்றார்கள். திருமறைக்காடு சப்த விடத் தலங்கள் ஏழினுள் ஒன்று. சிவபெருமான் புவனவிடங்கப் பெருமானாக இங்கு எழுந்தருளி இருக்கின்றார். பெருமான் ஆடும் நடனம் கம்ச நடனம் என்று அழைக்கப்படுகின்றது. மூவர் முதலிகளும் பதிகங்கள் அருளி இருக்கின்றார்கள். சம்பந்தப் பெருமான் அருளிய 5 திருப்பதிகங்களும் அப்பர் பெருமான் அருளிய 5 திருப்பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு திருப்பதிகமும் எமக்குக் கிடைத்துள்ளன. அவற்றைச் சுவாமிகள் பாடி விளக்கி அருளாசி வழங்க இருக்கின்றார். வேதங்களால் அடைக்கப் பெற்றிருந்த திருக்கோயிலின் கதவை அப்பர் பெருமான் பதிகம் பாடித் திறப்பித்துப் பின் சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி அடைப்பித்த அற்புதத் தலம் இது. பாண்டி மாதேவியாரின் அழைப்பை ஏற்றுச் சமணர்களுடன் வாதிட்டுச் சைவத்தை நிலைநாட்டச் சம்பந்தப் பெருமான் திருமறைக்காட்டில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார். அப்போது அப்பர் பெருமான் சமணர்கள் சம்பந்தருக்குத் தீங்கு விளைவித்திடுவார்கள் என்ற அச்சத்தினாலே அவரைக் கோள்கள் சரியில்லை என்று சொல்லித் தடுத்தார். அப்போது சம்பந்தர் கோளறு பதிகத்தை அருளிச் செய்தார்கள். மிகவும் சக்தி வாய்ந்த பதிகம் இது. சம்பந்தர் இப்பதிகத்தை இத்தலத்திலே தான் அருளிச் செய்தார்கள். சுவாமிகள் சைவப் பணிகளில் ஈடுபட்டு மக்களைச் சைவநெறியில் தொடர்ந்திட வழிகாட்டி வருகின்றார்கள். இருந்தாலும் எமக்காக நேரம் ஒதுக்கி இப் பதிகங்களைப் பாடி அருளாசி வழங்க இருக்கின்றார்கள். எனவே அன்பர்கள் தவறாது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகின்றோம். திருமுறைத் தெள்ளமுதினைச் சொல்லின் செல்வரும், பண்ணிசை வித்தகருமாகிய சுவாமிகளின் திருவாயால் கேட்கும் வாய்ப்பினை நழுவ விட்டு விடாதீர்கள். அன்புடன் சிவஞானத் தமிழ்ப் பேரவையினர்
ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!
*தினம் ஒரு திருமுறை* *31.10.2024 - வியாழக்கிழமை* *அருளியவர் :* திருநாவுக்கரசர் *திருமுறை :* நான்காம் திருமுறை *மழுவமர் கையர் போலும்* *பாடல் விளக்கம் :* *கையில் மழுப்படையை ஏந்தியவராய், பார்வதி பாகராய், கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய், எலும்பினை மாலையாக அணிபவராய், தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரங்கள் பலவும் சொல்லி அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.*
ஓம் நமசிவாய ஜெய் குருவே துணை திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் அருளாசியுடன் பிரணவம் அறக்கட்டளைக்கு உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனி கூட்டிணைப்புச் சான்றிதழ் இலங்கை கம்பனிகள் திணைக்களத்தால் 25-10-2024 அன்று வழங்கப்பட்டது
*தினம் ஒரு திருமுறை* *24.10.2024 - வியாழக்கிழமை* *அருளியவர் :* திருஞானசம்பந்தர் *திருமுறை :* மூன்றாம் திருமுறை *பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்* *பாடல் விளக்கம் :* *அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?*
🎉🎉. ஓம் நமசிவாய நமக ஓம்நமசிவாய போற்றி போற்றி இறைப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ங🎉🎉🎉
*தினம் ஒரு திருமுறை* *04.10.2024 - வெள்ளிக்கிழமை* *அருளியவர் :* மாணிக்கவாசகர் *திருமுறை :* எட்டாம் திருமுறை *பூவலர் கொன்றைய மாலை மார்பன்* *பாடல் விளக்கம் :* *மலர்கள் விரிகின்ற அழகிய கொன்றை மாலையை அணிந்த, மார்பையுடையவனும் போர்த்தொழிலுக்குரிய நகங்களை யுடைய வலிமை மிகுந்த புலியைக் கொன்ற வீரனும், மாதரிற் சிறந்தவளாகிய உமையம்மையின் பாகனும், வளமையான சோலை சூழ்ந்த அழகிய திருப்பெருந்துறை அரசனும் ஆகிய குற்றமில்லாத பெரும் புகழையுடைய எங்கள் ஆண்டவன் பெரிய கடலில் வாழ்பவனாகிய வருணனுக்கு நெருப்பில் தோன்றிய சித்திரம் போன்ற பெண்களுடைய தோள்களைத் தழுவிய உருவத்தின் தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.*
*தினம் ஒரு திருமுறை* *03.10.2024 - வியாழக்கிழமை* *அருளியவர் :* மாணிக்கவாசகர் *திருமுறை :* எட்டாம் திருமுறை *நாதம் உடையதோர் நற்கமலப்* *பாடல் விளக்கம் :* *வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய ஒப்பற்ற தாமரை மலரில் பொருந்திய கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும் வாழ்த்தி வணங்கி மலர் தூவி வழிபட, ஒளி மிகுகின்ற சோதி வடிவமான எமது ஆண்டவனும், நிலைபெற்ற மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், பூமியில் வந்து காட்சி கொடுத்து, வேற்றுமைகளைக் களைந்து அருள் புரிகின்ற பெருமையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.*
ஓம் நமசிவாய 🙏
*தினம் ஒரு திருமுறை* *02.10.2024 - புதன்கிழமை* *அருளியவர் :* மாணிக்கவாசகர் *திருமுறை :* எட்டாம் திருமுறை *வேவத் திரிபுரம் செற்றவில்லி* *பாடல் விளக்கம் :* *முப்புரம் தீயில் வெந்தொழிய அழித்த வில்லை யுடையவனும், ஆண்டவனும், எந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக் கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைத்து இறந்த பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப மாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திரு வுள்ளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.*
*தினம் ஒரு திருமுறை* *30.09.2024 - திங்கட்கிழமை* *அருளியவர் :* மாணிக்கவாசகர் *திருமுறை :* எட்டாம் திருமுறை *வேடுரு வாகி மகேந்திரத்து* *பாடல் விளக்கம் :* *யாவர்க்கும் தலைவனும் திருப்பெருந்துறையில் உள்ள முதல்வனும், `வேடுவனது உருவங் கொண்டு மகேந்திர மலையின்கண் மிக்க குறைகளையுடைய தேவர்கள் வந்து தன்னைத் தேடும்படியாய் மறைந்திருந்தவனுமாகிய சிவபெருமான் அடியேங்கள் உய்யும் வண்ணம் திருவுளங் கொண்டு அக்காலத்தில் ஆடலை விரும்பிய குதிரைமேல் ஏறி வந்து தோழர்களை எவ்விடத்தும் ஆட்கொண்டருளிய, தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.*
*தினம் ஒரு திருமுறை* *29.09.2024 - ஞாயிற்றுக்கிழமை* *அருளியவர் :* மாணிக்கவாசகர் *திருமுறை :* எட்டாம் திருமுறை *அணிமுடி ஆதி அமரர் கோமான்* *பாடல் விளக்கம் :* *அழகிய சடைமுடியையுடைய முதல்வனும் தேவர் கட்குத் தலைவனும் ஆனந்தக் கூத்துடையவனும், அறு சமயங்களும் தன்னை வணங்கும்படியாகச் செய்து மண்ணுலகத்தாரும், விண் ணுலகத்தாரும், வாழ்த்தி வணங்க, பிறவி நோய் நீங்கும் வண்ணம் அவர்கட்கு அருள்செய்கின்ற திருப்பெருந்துறையிலுள்ள எம் பெருங் கருணையாளனுமாகிய இறைவன் வலைப்பெண்ணாய் வந்த உமையம்மையை மணக்க விரும்பித் தோணியில் ஏறி, அழகிய வலையைக் கொண்டு பெரிய கெளிற்று மீனைப் பிடித்த திறத்தை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.*
திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் நடத்தும் திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல்
Join Zoom Meeting us02web.zoom.us/j/2704072147?pwd=ZEFtRkw0QTJhZVVOTithcEhNWHZMUT09 RUclips Channel : ruclips.net/user/சிவஞானத்தமிழ்ப்பேரவைஆஸ்திரேலியா
*தினம் ஒரு திருமுறை* *25.09.2024 - புதன்கிழமை* *அருளியவர் :* சுந்தரமூர்த்தி சுவாமிகள் *திருமுறை :* ஏழாம் திருமுறை *புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்* *பாடல் விளக்கம் :* *வயல்கள் வளம்படவும், அதனால் எல்லாக் குற்றங் களும் நீங்கவும், நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு, ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும், மற்றும் பலவகை மணிகளை யும் எறிந்து, இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி, எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க, கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெரு மானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன்!*
*தினம் ஒரு திருமுறை* *23.09.2024 - திங்கட்கிழமை* அருளியவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமுறை : ஏழாம் திருமுறை வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் பாடல் விளக்கம் : அளவில்லாத மாம்பழங்களையும், வாழைப் பழங்களையும் வீழ்த்தியும், கிளைகளோடு சாய்த்தும், மராமரத்தை முரித்தும், கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு, மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து, ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க, விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத் துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலை வரும், எனது, உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன்!
*தினம் ஒரு திருமுறை* *20.09.2024 - வெள்ளிக்கிழமை* அருளியவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமுறை : ஏழாம் திருமுறை பொறியுமா சந்தனத் துண்டமோடு அகிலும் பாடல் விளக்கம் : அருவிகள், பொரிந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள, பின்பு, கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும், வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு, தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!
திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் நடத்தும் திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல்
#திருவாதிரைகட்டளைபூஜை சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரியூர் வெள்ளாளபாளையத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் (கொங்கு சிதம்பரம்) திருக்கோயிலில் செப்டம்பர் 25ம் தேதி (25.09.24) புதன் கிழமை அன்று காலை 9 மணி அளவில் திருமணத்தடை,ஜாதக சகல தோஷங்கள், குழந்தை பேறு,மன வியாதி போன்றவற்றை நீக்கி நன்மை தரக்கூடிய திருவாதிரை கட்டளை பூஜை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது தொடர்புக்கு & Gpay - 095859 84321 வழிகாட்டி: maps.app.goo.gl/eVEoPUfz7qkEVbBA7
ஓம் நமசிவாய
*தினம் ஒரு திருமுறை* 15.09.2024 - ஞாயிற்றுக்கிழமை அருளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது பாடல் விளக்கம் : பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.
*குருபாதம்* திருக்கயிலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் (சிவாக்கரயோகி திருஞானசம்பந்தர் திருமடம்-கோபி) அருளானையின் வண்ணம் எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய 8 ஆம் திருமுறை-திருவாசகம் தொடர் முற்றோதுதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. நாள் : 15-09-2024 அன்று காலை *9:30*மணி முதல் மதியம் *12:30 மணி வரை நிகழ்விடம்*: அருள்மிகு செங்கச்சேரி அம்மன் திருக்கோவில், எண்:1 மணிநாயக்கர் தெரு, கணபதிபுரம், குரோம்பேட்டை, சென்னை-600044. விழா எற்பாடு : குரோம்பேட்டை திருமுறை சைவநெறி அடியார் திருக்கூட்டம், குரோம்பேட்டை, சென்னை 600044. வழிகாட்டி : maps.app.goo.gl/tFe8GjQ7L1rxbPXh8?g_st=ic அன்னம்பாலிப்பு: மத்தியம் 1:30 மணிக்கு *திருக்கயிலாய வாத்தியம்:*: *திருத்தாண்டவநாதர் சிவபூத கணங்கள்* திருக்கயிலாய வாத்தியம், பள்ளிக்கரணை. அனைவரும் வருகை தந்து குருவருளையும் திருவருளையும் பெற வேண்டுகிறோம்- குருவடி சரணம்🙇🙇🙇🙇🙇
*தினம் ஒரு திருமுறை* 15.09.2024 - ஞாயிற்றுக்கிழமை அருளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது பாடல் விளக்கம் : பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.
*தினம் ஒரு திருமுறை* 12.09.2024 - வியாழக்கிழமை அருளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே பாடல் விளக்கம் : பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே, இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய், தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும், காளையை ஏறி ஊரும் பெருமானை, அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள்.
*தினம் ஒரு திருமுறை* 10.09.2024 - செவ்வாய்க்கிழமை அருளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை ஊன்தலை வலியனாகி உலகத்துள் உயிர்கட்கு பாடல் விளக்கம் : உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி, உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று, அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட ` எங்கள் தலைவனே ` என்று தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே!.
மலையகத்தைச் சேர்ந்த இந்த இளஞ் சிறார்கள் பண்ணோடு தேவாரம் பாடக் கற்றுக் கொடுக்கும் பிரணவம் அறக்கட்டளையின் பணியைப் போற்றுகிறோம். வாழ்க அவர்களின் அரும்பணி❤ ❤
*தினம் ஒரு திருமுறை* 08.09.2024 - ஞாயிற்றுக்கிழமை அருளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே பாடல் விளக்கம் : குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள். மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே!
ஓம் நமசிவாய
*தினம் ஒரு திருமுறை* 05.09.2024 - வியாழக்கிழமை அருளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம் திருமுறை புத்தர் தத்துவமிலாச் சமணு உரைத்த பாடல் விளக்கம் : புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது, வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும்.
*தினம் ஒரு திருமுறை* 03.09.2024 - செவ்வாய்க்கிழமை அருளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம் திருமுறை சுடப்பொடிந்து உடம்பிழந்து அநங்கனாய மன்மதன் பாடல் விளக்கம் : நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட, அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோ நீர்.
அருளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம் திருமுறை கணிச்சியம் படைச் செல்வா கழிந்தவர்க்கு பாடல் விளக்கம் : மழுப்படையினை உடைய செல்வரே! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர் களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே! கரந்தை சூடியவரே, திருத்துருத்தியில் உறைபவரே! அழகியதும் ஒப்பற்றது மான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும், நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர்.*
சிவாச்சாரியர்களின் திருத்தொண்டுக்கு மிக்க நன்றி. நாவலப்பிட்டிய நகர் மக்கள் எல்லாம்வல்ல முருகன் அருள் பெற்று இன்பமாக செழிப்புடன் வாழ வேண்டுகிறேன். ஓம் நமசிவாய
ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻
Om Muruga
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ❤